உலகச் சைவப் பேரவை -- அவுத்திரேலியாக் கிளை ஏற்படுத்தும் தமிழ் வளர்த்த சான்றோர் விழா - 2015

.
விழா நாயகர்கள் :
             மட்டுநகர்  விபுலாநந்த அடிகளார் அவர்கள் -
             தமிழ் நாடு தந்ததமிழ்த்தென்றல்திரு  வி கல்யாணசுந்தரனார்  
                                                                                                                                              அவர்கள்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஞாயிற்றுக் கிழமை 26ஆம் திகதி மாலை 5.30மணிமுதல் சிட்னி கலை  இலக்கிய  சங்கத்துடன் இணைந்து அருள்மிகு துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் தமிழர் மண்டபத்தில் தமிழ் வளர்த்த சான்றோர் விழா ஒன்றினை உலகச் சைவப் பேரவை (அவுத்திரேலியாக் கிளை) கோலாகலமாகக் கொண்டாடவிருக்கிறது.


புகழ்மணக்க மீன்பாடும் மட்டு நகரில் வாழ்ந்து சைவத்திற்கும் தமிழிற்கும் அளப்பரிய பணி ஆற்றிய புனிதனாகிய  அடிக ளார் விபுலாநந்த அடிகள்.   அமிழ்தமாம் இளமைகுன்றா அருந்தமிழ் மொழிக்கு அளப்பரிய பணியியற்றி அணிகள் பூட்டித் தமிழ்மணக்க உலகரங்கிற் பெருமை சேர்த்தவர்தமிழ் நாடு - தந்ததமிழ்த்தென்றல்திரு வி கல்யாணசுந்தரனார் அவர்கள். வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணி செய்தவர். இவர் தமிழ் நிலத்திலும் வெளி நாடுகளிலும் தமிழ்மொழி தமிழர் பண்பாடு ஆகியவற்றைப் பரப்பியவர். பல ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியவர்
இலங்கையின் தலைசிறந்த பேச்சாளர்  ‘செஞ்சொற்கொண்டல்ஆறு திருமுருகன் மற்றும்    பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன்   ஆகியோர் கலந்துகொள்ளும் இவ்விழாவிற்குத்; தமிழ் அன்பர்கள் பெருந்திரளாக வருகைதந்து விழாவினைச் சிறப்பிக்கவேண்டி அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்;. வளர்ந்து வரும் இளம் இசைக் கலைஞர் செல்வி யதுகிரி லேகதாசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரியுடன் இளைஞர்களின் பங்களிப்பும் இடம்பெறவுள்ளது.
நிகழ்ச்சி இலவசம்!. மறந்துவிடாதீர்கள்!
தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2015 மாலை 5.30 மணி முதல்  தமிழர் மண்டபத்தில் நடைபெறும். உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியாவின்     ஊக்கமிகு தலைவராய்ப் பதவி ஏற்று பலதுரித செயற்றிட்டம் வகுத்து   வழிநடத்தி வரும் திரு அருச்சுன மணி  அவரகளின் தலைமையிலே நடைபெறும்.  இந்த ;விழாவிற்குத்  தமிழ் அன்பர்களைப் பெருந் திரளாக வருகைதரும் வண்ணம் உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா பணிவன்புடன்  அழைக்கிறது.

தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2014”

சென்ற  ஆண்டிற்கானதமிழ் வளர்த்த சான்றோர் விழாவினை  உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா  தமிழ்ச் சங்கத்துடன்  இணைந்து  2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி அவுஸ்திரேலியா ஹோம்புஸ் ஆண்கள் உயர் பாடசாலை மண்டபத்தில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். .
                                                   
  உலகத் தமிழ் மாநாடுகளை நடாத்தித் தமிழின் பெருமையை உலகெங்கும் பரப்பியதும் அல்லாமல் "வுயஅடை ஊரடவரசந"(தமிழர் பண்பாடு) என்ற தரமான சஞ்சிகையையும் வெளியிட்டு அளப்பரிய பணி புரிந்த சுவாமி தனிநாயக அடிகளாருக்கும்       . முருக பக்தராகி வாழ்நாள் முழுவதும் சைவ சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தித் தமிழ் சைவம் ஆகியவற்றின் பெருமையையும் சிறப்பையும் பாமர மக்களுக்கும் படித்தவர்களுக்கும் உணர்த்தித்   தமிழ் இலக்கிய இன்பமும் பக்திச் சுவையும் கலந்து கேட்பவரின் மனதைப் பரவசப்படுத்திவந்த சிவத்திரு கிருபானந்த வாரியாருக்கும் சென்ற வருடம் எடுத்த பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. .. இவ்விருவரும் இல்லறத்திலும் இணையாது தமிழ்மொழியின் பேரழகில் தம்மை இழந்து பணிசெய்தவர்கள் ஆவார்கள்.

தமிழ் வளர்த்த சான்றோர் விழாவின் ஆரம்பம்!
தமிழ் வளர்த்த சான்றோர் விழா-2013”
2013 ஆம் ஆண்டு தமிழுக்கும் சைவத்திற்கும் அளப்பரிய பங்களிப்புச் செய்த பெரியோர்களான நல்லை நகர் தந்தவசனநடை கைவந்த வல்லாளர்ஆறுமுகநாவலர் பெருமானுக்கும் ஈழத்தின் புலவர்பரம்பரையை நிலைநிறுத்ப் பதினைந்தாயிரத்திற்கும் மேலான பாடல்களை இயற்றிச் செந்தமிழ் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய தங்கத் தாத்தா நவாலி ஊர் சோமசுந்தரப் புலவர் அவர்களுக்கும் அருள்மிகு துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் தமிழர் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
                            
நல்லைநகர் நாவலனார் இல்லையெனில் ஈழமதில் சொல்லுசிவ சைவமெங்கே  தூயசெந்தமிழ் எங்கே??அசலான ஏடு பல அழியாது காத்தவெம் நாவலர் பெருமானுக்கும் கலைதந்து கலைமகளின் கடாட்சம் பெற்றுயர்ந்து விலைதந்த சிறுவர்க்குத் தமிழ்தந்து எங்கள் தாய்மொழி வளர்த்த தங்கத்; தாத்தாவிற்கும்  எடுத்த விழா மிகவும் பொருத்தமானதே என்று சான்றோர் பலர் வாழத்;தியுள்ளார்கள். கடந்த இரு விழாக்களும் அரங்கு நிறைந்த அவையோருடன் நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் அன்பர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்!
தமிழ் வளர்த்த சான்றோர்களை நினைவு கூரும்முகமாக எடுக்கப்படும விழாவினைத் தமிழ்ச் சமூகம் முழு  மனதோடு வரவேற்கவேண்டும். ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையைக் குறித்துவைத்து பெருந்திரளாக வருகைதந்து விழாவினைச் சிறப்பிக்கவேண்டும் என விழாக்குழு தாழ்மையாக வேண்டுகிறது. நன்றி!               
                                   -----------பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி

                                                                 விழா இணைப்பாளர்

No comments: