சிலுவையில் இயேசு கிறிஸ்து பேசின ஏழு வார்த்தைகள் - சோனா பிறின்ஸ்

.
இயேசு கிறிஸ்து இப்பூவுலகில் அவதரித்த வரலாறு சரித்திரச் சான்றுபடி கி.மு. 4-5 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இயேசு சுமார் 33 1/2 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார். அவர் பிறந்த நோக்கத்தின்படி மனித வாழ்க்கைக்கு உதவாத எல்லாவித தீய சக்திகளையும், மூட மத கோட்பாடுகளையும், ஆதிக்க போக்கையும் எதிர்த்தார். மக்களிடையே பல அதிசயங்களை செய்தார். இம்மாய உலக வாழ்வை விட தேவனுடைய ராஜ்யத்தை தேட மக்களிடையே போதித்தார். 

பரலோக இராட்சியத்தின் வழிகளை அன்றிருந்த அரசும், யூத மதவாதிகளும் ஏற்க மறுத்தனர். மாறாக இவர் மேல் பழி சுமத்தி சிலுவையில் அறைய திட்டமிட்டனர். அந்த நாட்களில் கொடூர செயல் புரிந்த குற்றவாளிகளை சமூகத்தில் மிகக் கேவலமாக நடத்த வேண்டுமானாலும் சிலுவையில் அறைவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.இதன்படி தங்கள் மனம் நிறைவடைய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தனர். அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் விடுமுன் 7 வார்த்தைகளைச் மொழிந்தார்.


இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில், சிலுவை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது பேசியவைகள் அவருடைய சிலுவை மொழிகள் என அழைக்கப்படுகின்றன. இயேசுவின் சிலுவை மொழிகள் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.



                                                        1) மன்னிப்பு


முதல் வார்த்தையில், இயேசு தம்முடைய சத்துருக்களுக்காக பிதாவிடம் பரிந்து பேசினார்.

"பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34)
இயேசு, “தந்தையே, என்னைக் கொல்கிற இந்த மக்களை மன்னித்தருளுங்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்றார்(.லூக்கா 23:34)


                                           2) இரட்சிப்பு


இரண்டாவது வார்த்தையில், இயேசு மனந்திரும்பின கள்ளனுக்காகப் பேசினார்

"இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43)

இயேசு அவனை நோக்கி, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்றார்.(லூக்கா 23:43)



                                               3) அரவணைப்பு


மூன்றவது வார்த்தையில், இயேசு தன் தாயாகிய மரியாளுக்காக பேசினார்

தம்முடைய தாயை நோக்கி : "ஸ்திரியே! , இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்" (யோவான் 19 : 26-27)

இயேசு அவருடைய தாயைப் பார்த்தார். அவரால் பெரிதும் நேசிக்கப்பட்ட சீஷனையும் அங்கே பார்த்தார். அவர் தன் தாயிடம், “அன்பான பெண்ணே, அதோ உன் மகன்” என்றார். 27 பிறகு இயேசு தன் சீஷனிடம், “இதோ உன்னுடைய தாய்” என்றார். அதற்குப்பின் அந்த சீஷன் இயேசுவின் தாயைத் தன் வீட்டிற்குத் தன்னோடு அழைத்துச் சென்றான்.யோவான் 19:26-27 
 
                                                  4) தத்தளிப்பு

நான்காவது வார்த்தையில், இயேசு உலக மனிதர்களின் பாவங்கள் அனைத்தும் தன் மேல் வரும் நேரத்தில் தன்னைவிட்டு எடுப்பட்டதன் பிதாவின் பிரசன்னத்திற்காய் பேசினார்

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27 : 46)

சுமார் மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் , “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினார். இதன் பொருள்,, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” [a] என்பதாகும்.(மத்தேயு 27:46)


                                                    5) தவிப்பு


ஐந்தாவது வார்த்தையில், இயேசு தன்னுடைய ஆவிக்குரிய தேவையைக்குறித்து மனிதகுலத்தின் ஆத்தும இரட்சிப்பின் திட்டத்தைக்குறித்து பேசினார்


எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன் என்றார்" (யோவான் 19:28)

பின்பு எல்லாம் முடிந்தது என்பதை இயேசு அறிந்தார். வேதவாக்கியம் நிறைவேறும்பொருட்டு அவர், “நான் தாகமாயிருக்கிறேன்” என்றார்.(யோவான் 19:28)


                                                     6) அர்ப்பணிப்பு



ஆறாவது வார்த்தையில், இயேசு தான் பூமிக்கு மனிதனாய் பிறந்த நோக்கத்தை, பிதாவின் அநாதி திட்டத்தை முடித்ததை குறித்து பேசினார்


இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19 : 30)

இயேசு காடியைச் சுவைத்தார். பிறகு அவர், “எல்லாம் முடிந்தது” என்றார். இயேசு தன் தலையைச் சாய்த்து இறந்துபோனார்.(யோவான் 19:30)


                                                   7) ஒப்புவிப்பு


ஏழாவது வார்த்தையில், இயேசு மனிதகுலத்திற்காய், அவர்களின் பாவபரிகாரியாய் தன்னையே ஜீவ பலியாக ஒப்புகொடுத்து மரித்தார்

இயேசு, பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23:46)

இயேசு, “பிதாவே, என் ஆவியை உம்மிடம் தருகிறேன்” என்னும் வார்த்தையுடன் இறந்தார்.(லூக்கா 23:46)

இது நமக்காகவும்,நம் ஜனத்துக்காகவும் துக்கப்படும் வேளை.இரட்டை கிழித்து சாம்பலில் உட்காராவிட்டாலும் வேத வசனம் சொல்கிறபடி நம் இருதயங்களை கிழித்து நம் மக்கள் மேல் வரப்போகும் கோபாக்கினைகளுக்கு தேவன் ஜனங்களை காக்கும் படி திறப்பிலே நின்று அவருக்கென்று கதறகூடிய ஆத்துமாவை ஆணடவர் தேடிக்கொண்டிருக்கிறார். கண்முன்னால் அழிந்துகொண்டிருக்கும் இத்தனை கோடி ஜனங்களுக்கு நாம் என்ன் பதில் ஆண்டவருகு சொல்லப்போகிறோம். நாம் சிந்திப்போம் ,ஆண்டவருக்காக எதையாகிலும் சாதிக்கிறவர்களாக அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதே அவரின் சிலுவையை தியானிப்பதின் உண்மையான அர்த்தம் ஆகும்.
இணையத்தில் இருந்து பெற்றுக் கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்
அனைவருக்கும் உயிர்த்தெழுந்த இயேசுவின் உன்னத வரங்களை வேண்டி , நிறைவாக வாழ எங்கள் குடும்பம் சார்பாக
வாழ்த்துகின்றேன் . வாழ்க என்றென்றும் வழமுடன் .

சோனா பிறின்ஸ்
**************************************************************************



No comments: