உலகச் செய்திகள்


நேபாலில் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிப்பு: புத்தரின் பிறப்பு குறித்த புதிய தகவல்கள்

சீனாவில் எண்ணெய் குழாயில் வெடிப்பு 52 பேர் பலி; 136 பேர் காயம்

தாய்லாந்தில் அமைச்சுகள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைப்பு

சீனாவின் வான் பரப்பில் பறந்த இரு அமெ­ரிக்க விமா­னங்களால் சர்ச்­சை

பெர்லுஸ்கொனி பாராளுமன்றத்திலிருந்து வெளியேற

நேபாலில் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிப்பு: புத்தரின் பிறப்பு குறித்த புதிய தகவல்கள்

26/11/2013      நேபால் நாட்டின் லும்பினியில் அமைந்துள்ள மாயா தேவி ஆலயத்தில் பௌத்த மதம் தொடர்பான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவை கௌதம புத்தரின் பிறப்பு தொடர்பில் மாறுபட்ட தகவலை வெளியிடுவனவாக அமைந்துள்ளன.


புத்தரின் பிறப்பு தொடர்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஆண்டுக்கு முன்னதாகவே அவர் பிறந்திருக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது பிறந்த இடமான லும்பினியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது பல்வேறு புதிய படிமங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன் அடிப்படையில் புத்தரின் பிறப்பு கி.மு.623 களில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுவந்தமையை மறுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள், கி.மு.390 களில் அவர் பிறந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இங்கு மேலும் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கக் கூடும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கண்டுபிடிப்புகள் நேபாலின் வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பதாக அந்நாட்டின் கலாசார,சுற்றுலாத்துறை அமைச்சர் ராம் குமார் ஸ்ரெஷ்தா தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 




சீனாவில் எண்ணெய் குழாயில் வெடிப்பு 52 பேர் பலி; 136 பேர் காயம்

25/11/2013    சீனாவில் எண்ணெய் குழா­யொன்றில் ஏற்­பட்ட வெடிப்பில் குறைந்­தது 52 பேர் பலி­யா­ன­துடன் 136 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.
கசிவு ஏற்­பட்ட குறிப்­பிட்ட எண்ணெய்க் குழாயை பணிப்­பா­ளர்கள் திருத்த முயற்­சித்­த­
போது அந்தக் குழாய் தீப்­பற்றி எரிந்து வெடித்­துள்­ளது.
சினோபெக் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான மேற்­படி எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்­பட்­ட­தற்கு பல மணி நேரம் கழித்தே வெடிப்பு இடம்பெற்­றுள்­ளது.
இந்த வெடிப்புச் சம்­ப­வத்­துடன் குற்றச் செயல்கள் எதுவும் சம்­பந்­தப்­ப­ட­வில்லை என கரு­தப்­ப­டு­கின்ற போதும், வெடிப்­புக்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய விசார­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
இந்த வெடிப்பால் அப்­ப­கு­தி­யி­லி­ருந்த கட்­ட­டங்­களும் வாக­னங்­களும் சேதமடைந்துள்ளதுடன் வானளாவ புகைமூட்டமும் எழுந்துள்ளது.
நன்றி வீரகேசரி









தாய்லாந்தில் அமைச்சுகள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைப்பு

 27/11/2013
தாய்லாந்து அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் முகமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சியினர் பாங்கொக்கிலுள்ள அநேக அமைச்சர்களை சுற்றிவளைப்பு செய்தனர்.
பிரதமர் யின்வக் ஷினவட்ராவின் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கம் யின்லக் சகோதரரும் முன்னாள் பிரதமருமான தாக்ஸின் ஷினவட்ராவின் கட்டுப்பாட்டிலுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாங்கொக்கின் பல பகுதிகளினுௗடாக பாரிய எதிர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு யின்லக் அதிகாரிகளுக்கு ஊரடங்கு சட்டங்களை அமுல்படுத்தவும் வீதிகளை மூடவும் அனுமதிக்கும் விசேட அதிகாரங்களை வழங்கினர்.
தாய்லாந்தில் சர்ச்சைக்குரிய அரசியல் பொது மன்னிப்பு சட்டமொன்றே ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெழுவதற்கு பிரதான காரணமாக அமைந்தது.
செனட் சபையில் தோல்வியைத் தழுவிய மேற்படி சட்டமூலம் தாக்ஸின் ஷினவட்ரா ஊழலுக்கான சிறைத் தண்டனையொன்றிலிருந்து மன்னிப்பு பெற்று நாடு திரும்ப வழிவகை செய்வதாக உள்ளதென ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தார்ஸின் ஷினவட்ரா 2006 ஆம் ஆண்டு இராணுவ புரட்சியொன்றின் மூலம் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான சுதெப் தயுக்வுடன் தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் தாய்லாந்து வெளிநாட்டு மற்றும் நிதி அமைச்சு கட்டங்களுக்கு வெளியே திங்கட்கிழமை இரவு முழுவதும் முகாமிட்டிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை அவர்கள் உள்துறை சுற்றுலா போக்குவரத்து மற்றும் விவசாய அமைச்சு கட்டங்களை சுற்றிவளைத்தனர்.
அத்துடன் எதிர்க்கட்சியானது அரசாங்கமானது வரவு செலவுத்திட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள். தொடர்பில் அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானமொன்றை எடுப்பதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளது.
மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது 2010 ஆம் ஆண்டிக்குப் பின் முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக கருதப்படுகிறது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறை ஆர்ப்பாட்டங்களில் 90 பேருக்கும் அதிகமானோர் பலியானார்கள் அவர்களில் பலர் பொதுமக்களாவர்.நன்றி வீரகேசரி







சீனாவின் வான் பரப்பில் பறந்த இரு அமெ­ரிக்க விமா­னங்களால் சர்ச்­சை

28/11/2013  சீனாவால் புதி­தாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட வான் பாது­காப்பு அடை­யாள வல­யத்­தில் இரு அமெ­ரிக்க குண்டு வீச்சு விமா­னங்கள் பறந்­ததை அவ­தா­னித்­த­தாக சீன பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

மேற்­படி பி – 52 விமா­னங்கள் கிழக்கு சீன கட­லி­லுள்ள சர்ச்­சைக்­­கு­ரிய தீவு­க­ளுக்கு மேலாக சீனாவின் புதிய வான் பாது­காப்பு சட்­டங்­களை மீறு­ம் வகையில் எது­வித முன்­ன­றி­விப்­பு­­மின்றி பறந்­த­தாகக் கூறப்­ப­டு­கி­றது.சீனாவால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட வான் பாது­காப்பு வலயத்துக்கு ஜப்­பானும் அமெ­ரிக்­காவும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.
சீனா மேற்­படி ஒரு­தலைப்பட்­ச­மான பிர­க­ட­ன­த்தின் மூலம் பிராந்­தி­யத்தில் பதற்­ற­மான நிலையைத் தோற்­று­வித்­துள்ளதாக அந் நாடுகள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றன.
மேற்­படி புதிய வான் வல­ய­மா­னது சனிக்­கி­ழமை சீனாவால் அறி­விக்­கப்­பட்­டது. இந்த வான் வலயம் சீனாவின் வான் வல­யத்­துக்கு மேலாக அமை­வ­துடன் ஜப்­பானின் கட்­டுப்­பாட்டின் கீழுள்ள சர்ச்­சைக்­கு­ரிய தீவு­க­­ளையும் உள்­ள­டக்­கு­வ­தாக அமை­கி­றது. ஜப்­பானால் 'சென்­ககு' எனவும் சீனாவால் 'டிய­யோயு' எனவும் அழைக்­கப்­படும் மேற்­படி தீவுகள் காரண­மாக சீனா­வுக்கும் ஜப்­பா­­னுக்­குமி­டையில் பல மாதங்­க­ளாக பதற்ற நிலை நில­வு­கி­றது.
இந் நிலையில், சீனாவால் அறிவிக்­கப்­பட்­டுள்ள புதிய வலயம் வலிதற்­றது என தெரி­வித்­துள்ள ஜப்பான், சீன விமான சேவைக்கு விமா­னங்கள் தொடர்­பான தக­வல்­களை வழங்கவேண்டாம் என தனது விமான சேவையை கேட்­டுக்­கொண்­டுள்­ளது.
குவா­மி­லி­ருந்து ஆளற்ற அமெ­ரிக்க விமா­ன­மொன்று அந்­தப் பிர­தே­சத்தில் வழ­மை­யான பயிற்­சி­யொன்றில் ஈடு­பட்டதாக அமெரிக்கா தெரி­விக்கி­ற­து. குண்டுவீச்சு விமா­னங்­களை வழ­மை­யான செயற்கிர­மங்­க­ளுக்கு அமை­வாக பறக்க விட்­ட­தாக அமெ­ரிக்க பாது­காப்பு அமைப்­பான பென்­ட­கனின் அதி­கா­ரி­யொ­ருவர் கூறி­னார்.
இந் நிலையில், ஜப்­பா­னிய பாரா­ளு­மன்­ற­மா­னது புதன்­கி­ழமை பாது­காப்பு பிரச்­சி­னைகளை கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்பில் பிர­­த­ம­ருக்கு பெரும் அதி­கா­ரத்தை வழங்கும் தேசிய பாது­காப்பு சபையை ஸ்தா­பிப்­ப­தற்­கான சட்­டமூல­மொன்றை முன்­னெ­டுத்­துள்­ளது.
அதே­சமயம், சீன கடற்­ப­டையின் லியோனிங் விமானம் தென் சீன கடல் பகு­­தியில் பறப்பை மேற்­கொண்­டது. இது ஏற்­க­னவே நிர்­ண­யிக்­கப்­பட்ட விமான பயிற்சி நட­வ­டிக்­கையின் ஓர் அங்கம் என சீனா விபரித்­துள்­ளது. நன்றி வீரகேசரி




பெர்லுஸ்கொனி பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்

28/11/2013   இத்தாலிய முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனியை அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவதற்கு ஆதரவளித்து அந்நாட்டு பாராளுமன்ற செனட்சபை வாக்களித்துள்ளது.
கடந்த 20 வருட காலமாக அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வரும் பெர்லுஸ்கொனி தற்போது நீதிமன்ற விசாரணையிலிருந்து விதிவிலக்கைப் பெறுவதற்கான தனது சிறப்புரிமையை இழந்துள்ளதால் தற்போது ஏனைய குற்றவியல் வழக்குகள் தொடர்பில் கைது செய்யப்படும் நிலைமையை எதிர்நோக்கியுள்ளார்.
மேற்படி செனட் சபை வாக்கெடுப்பு குறித்து பெர்லுஸ்கொனி (77வயது) விபரிக்கையில் இது ஜனநாயகத்துக்கான துக்க தினம் என குறிப்பிட்டார்.
தனது போராட்டம் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் தொடரும் என அவர் தெரிவித்தார்.
பெர்லுஸ்கொனி எதிர்வரும் 6 வருடங்களுக்கு எந்தவொரு பொது தேர்தலிலும் பங்களிக்க முடியாததை தீர்மானிக்கும் செயற்கிரமமொன்றின் முடிவை குறிப்பதாக மேற்படி வாக்களிப்பு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி வீரகேசரி

No comments: