அவுஸ்திரேலியாவில் திருத்தொண்டர் விழா

.

திருத்தொண்டர் விழா என்று ஒரு பெரு விழா அவுஸ்திரேலியா நியுசவுத்வேல்ஸ் மானிலத்தில் ஹெலன்ஸ்பேக்கில் அமைந்துள்ள ஸ்ரீவெங்னடடேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரால் கடந்த ஞாயிறு 24.11.2013 அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பெற்றது. ஆலயத்தின் சிவன் கோயில் வளாகத்தில் கடந்த வருடம் 63 நாயன்மார்களுக்கும் 9 தொகை அடியார்களுக்கும் சேக்கிழாருக்கும்  மாணிக்கவாசகருக்கும் அவற்றோடு திருதி வளம்புரி விநாயகருக்கும் கருங்கல் விக்கிரகங்கள் பிரதிஷ்டை நிகழ்வுற்றது. அந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவு குறித்தும் வருடாந்த விழாவாகவும் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.





இவ்விழா காலை 8 மணிக்கு சங்கல்பத்துடன் ஆரம்பமாகி கும்பபூசைகள் வேதமந்திர கோசங்களுடன் மிகச்சிறப்பாக கோவில் சிவாச்சாரியர்களால் நடத்தப்பெற்றது. திருதி வளம்புரி விநாயகருக்கும் திருத்தொண்டர்களுக்கும் அபிசேகம் மிக அருமையாக இடம்பெற்ற காட்சி ஒரு கண்கொள்ளாக் காட்சி என்றால் மிகையல்ல. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் விக்கிரகங்களை அலங்காரம் செய்து கொண்டிருக்க அடியார்கள் விநாயகர் அகவல் பாராயணம் திருமுறைக்கு ஒரு பாடலாக 12 திருமுறைகளை ஓதுதல் ஆகியவற்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். சிறப்பம்சமாக பெரியபுராணத்தில் இருந்து அடியாருக்கு ஒரு பாடல் தெரிவுசெய்யப்பட்டு அவர்களைப் போற்றி இசைக்கப்பட்டது. பின்னர் பூசையும் மகாhதீ;பாரதணையும் நிகழ்ந்து சமயகுரவர் நால்வரது ஜம்பொன் உருவசிலைகள் சுந்தரரது திருத்தொண்டர் பாராயணத்துடனும் மேளதாள வாத்தியங்களுடனும் உள் வீதியில் திருஉலா வந்த காட்சி காணஅரியதொன்று. நிறைவாக நிகழ்வில் பங்குபற்றிய அடியார்களுக்கு மகேஸ்வரபூசையெனும் அன்னதானம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


இந்நிகழ்விற்கு சிட்னி முருகன் கோவில் நடாத்தும் ஹோம்புஸ் சைவப்பாடசாலை மேய்ஸ்கில்  சைவப்பாடசாலை மாணவர்கள் தமது வருடாந்த தல யாத்திரையின் ஓர் அங்கமாக வந்து திருமுறை பாராயணங்களில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
உலகின் தென்துருவமான அவுஸ்திரேலியாவில் இந்த கோயில் வைஸ்ணவமும் சைவமும் மேன்மையுறவும் சனாதன தர்மம் நிலைபெற்று ஓங்கவும் பெரும் பணி ஆற்றிவருகிறது. இங்கு நிகழும் வருடாந்த பிரம்மோற்சவம் மகோற்சவம் என்பவற்றில் நாலாயிரதிவ்விய பிரபந்தம் பன்னிரு திருமுறைகள் என்பவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்து சிறப்பிக்கின்றார்கள். கடந்த பிரம்மோத்சவத்தில் திருத்தோண்டியூர் திரு மகாதேவன் சுவாமிகள் வந்து திவ்வியபிரபந்தம் பாராயணம் செய்ததும் மகோற்சவத்திற்கு பழனி தண்டாயுதபாணி கோயில் ஓதுவார் முர்த்தி திரு.வெங்கடேசன் அவர்கள் வந்து பன்னிரு திருமுறை பாராயணம் செய்து சிறப்பித்தமையும் அடியார்கள் அனைவரும் அறிந்த ஒன்று. திருக்கோயில் வழிபாட்டிற்கும் ஆன்மீக வளற்சிக்கும் பெரும் தொண்டாற்றி வருகின்ற ஆலய அர்ச்சகர்கள் நிர்வாகத்தினர் தொண்டர்கள் ஆகியோரின் பெரும்பணி போற்றத்தக்கது.








No comments: