காற்று வீசும் போதும்
கடவுள் சாயி வருவார்!
ஆற்றல் குறையும் போதும்
அன்னை சாயி வருவார்!
மாற்றம் தெரியும் போதும்
மாதவ சாயி வருவார்!
போற்றிப் பூசைசெய்தால்
புரிந்தே அருளும் தருவார்!
என்றும் அவர்வழி நடந்தால்
ஏற்ற உயர்வினைத் தருவார்!
மன்பதை வாழச் சேவை
மகிழ்வொடு இயற்றி நின்றால்
சென்ற விடங்கள் எல்லாம்
தேடிச் சாயி வருவார்
வென்று என்னை உணர்ந்தால்
வீடு பேறும் தருவார்!
சாயி என்றதும்
சொர்க்கம் தெரியுதே!
தூய வாழ்க்கையில்
தேர்ச்சி வருகுதே!
மாய ஜாலங்கள்
மாய்ந்து போகுதே!
பாயும் புலிகளும்
பாசங் கொள்ளுதே!
உலகம் முழுவதும்
உண்மை நிறையுதே!
கலகம் மாறியே
கருணை பெருகுதே!
நிலவின் குளிர்ச்சியும்
நினைவில் திரளுதே!
அலையும் உள்ளத்தில்
அமைதி விளையுதே!
கெட்ட எண்ணங்கள் வேண்டாம்
கெடுதி செய்யவும் வேண்டாம்
மட்ட வாழ்க்கையும் வேண்டாம்
மாய மந்திரம் வேண்டாம்
துட்டர் தொடர்பும்; வேண்டாம்
தோற்கும் நிலையும் வேண்டாம்
புட்டப் பர்த்தியின் வாழ்வே
போற்றி உன்னடி தொழுவோம்.
அம்மை அப்பன் உருவில்
அழகின் தெய்வம் சாயி!
மெய்ம்மை அன்பின் திருவாய்
மேன்மை செய்யும் சாயி!
மும்மை கால ஞானம்
முற்றும் உணர்ந்த சாயி!
செம்மை வாழ்வு வாழ்ந்து
திருவடி பற்றிட முயல்வோம்!
காட்டு வழி தனிலே – அம்மா
கள்ளர் பயம் இருந்தால்
கூட்டிச் செல்வ தற்கே – சாயி
குருவாய் அருள்வார் அம்மா!
நாட்டு வளங்கள் குன்றி – அம்மா
நாளும் பஞ்சம் வந்தால்
கேட்டுக் கொடுப்பார் அம்மா – சாயி
கிரு~;ணன் போலவே அருள்வார்.
பாடும் குயில்கள் எல்லாம் - புட்ட
பர்த்தியில் குவிந்த தம்மா!
வாடும் மனங்க ளுக்கெலாம் - சாயி
வரங்கள் ஈவார் அம்மா
நாடும் அடியர் குறை – எல்லாம்
நன்றே தீர்த்து வைப்பார்
வீடும் எமக் கருளச் - சாயி
விரும்பி யெம்மோ டிருப்பார்.
உலகாளும் உத்தமராம்
உயிர்களெலாம் அவர்வசமாம்
பலகோடி ஊழிகளில்
பால்வெளியில் வந்தவராம்
நிலமகளின் ஞெ;சினிலே
நீங்காத செஞ்சுடராம்
தலையாய தவமுதலே
தாள்தொழுதே நலம்பெறுவோம்.
சரித்திரம் என்றும் பேசும் - எங்கள்
சாயி நாதன் புகழை!
விரித்திடும் அருட்க ரங்கள் - மன
விருள்தனை நீக்கி நிற்கும்
உரைத்தநற் பொன் மொழிகள் - தினம்
உலகெலாம்; ஒலித்து நிற்கும்!
விரைகழல் தொழு திடவே– சாயி
வீடுதந் தாட்கொள் வாரே!
இயற்றியவர் -
பேராசிரியர் ம பசுவலிங்கம் அவர்கள்