.
பொலிஸ்காரன் மகள் -முருகபூபதி
அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து செல்வதற்கு பல காரணங்கள் இருந்தன. 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி முற்பகல் விமானம் ஏறும்போது அம்மா பயணம் அனுப்ப வரவில்லை. முதல்நாள் இரவு என்னை அருகில் வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தார்கள்.
அதற்குமுன்னர் எனது தம்பிமார் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைநிமித்தம் புறப்பட்டபோது அம்மா அப்படி அழவில்லை. நான் மூத்த மகன். அப்பாவின் மறைவிற்குப்பிறகு குடும்பத்தின் தலைமைப்பொறுப்பை அம்மா எனக்குத்தந்தார்கள். நான் அவர்களின் அருகிலிருந்து கவனிக்கவேண்டிய பல கடமைகள் இருப்பதை நினைவுபடுத்தியவாறே அழுதார்கள்.
அம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன்.
அம்மா சொன்ன கடமைகளை உலகில் எந்தப்பகுதிக்குச்சென்றாலும் நிறைவேற்றுவேன் என்று அம்மாவின் கைபற்றி உறுதியளித்தேன். சற்று அமைதியடைந்தார்கள். ஆனால் மறுநாள் அம்மா விமானநிலையம் வரவில்லை.
நண்பர் ராஜஸ்ரீகாந்தன் வந்தார். மனைவியும் மூத்த தம்பி நித்தியானந்தனும் வந்தார்கள். அப்பொழுது எனது மனைவி நிறைமாதக்கர்ப்பிணி. மூன்றாவது பிள்ளையான எனது மகனை சுமந்துகொண்டிருந்தாள். அவளும் அழுதழுது கண்களை சிவப்பாக்கியிருந்தாள்.
அயலில் சிலரது விமர்சனங்கள் அவளை பாதித்திருந்தன.
1984 இல் இந்தியாவுக்குப்போனார்…. புத்தகங்களுடன் வந்தார்.
1985 இல் சோவியத் நாட்டுக்குப்போனார்….புத்தகங்களுடன் வந்தார்.
1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறார் என்னதான் கொண்டுவருகிறார் பார்ப்போமே…?
எனக்கு பாரதியாரின் மனைவி செல்லம்மாதான் நினைவுக்கு வந்தார்.
விடைபெறும்போது “ புத்தகங்களும் கொண்டு வருவேன்” என்று மனைவியிடம் சொன்னேன்.
இருபத்தியைந்து வருடகாலத்திற்கு முன்னர் அம்மா எனக்கு நினைவூட்டிய கடமைகளை நிறைவேற்றியவாறு சுமார் 18 புத்தகங்களையும் வெளியிட்டு அம்மாவின் கனவுகளை நனவாக்கிய மனநிறைவுடன் 2012 ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் தாயகம் வந்தேன்.
1987 இல் அவுஸ்திரேலியா சென்று சுமார் மூன்று வருடங்களில் அம்மாவையும் மனைவி பிள்ளைகளையும் என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகைஜீவாவையும் தமிழகத்திற்கு அழைத்து ஒருமாதகாலம் என்னுடன் வைத்திருந்து ஊர்சுற்றிக்காண்பித்தேன்.
1987 ஜூன் மாதம் 24 ஆம் திகதி நீர்கொழும்பில் பிறந்த எனது மகனை இலங்கை வந்து பார்க்க முடியாத துயரத்தில் நான் வாடிக்கொண்டிருந்தபோதுää அவுஸ்திரேலியாவில் எனக்கு வதிவிடவுரிமை பெற்றுத்தந்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் (எழுத்தாளர் அருண். விஜயராணியின் அண்ணன்) என்னை தமிழகம் அனுப்பிவைக்க ஏற்பாடுகளை செய்திருந்தார்.
அவுஸ்திரேலியாவில் எனக்கு ஒரு அண்ணன் இல்லாத குறையைபோக்கியவர்தான் ரவீந்திரன்.
எனது இனிய நண்பர் ராஜஸ்ரீகாந்தனையும் தமிழகத்திற்கு அழைத்திருந்தேன். அப்பொழுது அவர் கொழும்பில் சோவியத் தூதரக தகவல் பிரிவில் பணியிலிருந்தார். அவருக்கு விடுமுறை வழங்க ஆவனசெய்துகொடுக்குமாறு அங்கு முக்கியபொறுப்பிலிருந்த நண்பர் பிரேம்ஜி ஞானசுந்தரனையும் தொலைபேசி ஊடாக கேட்டிருந்தேன். எனினும் அங்கிருந்த பல வேலைப்பளுவினால் ராஜஸ்ரீகாந்தனுக்கு வரமுடியவில்லை.
அந்தத்தமிழகப்பயணம் பற்றி பின்னர் விரிவாக தினகரன் வாரமஞ்சரியில் ஒரு தொடர் எழுதியிருக்கின்றேன்.
எனது மகன் முகுந்தனை முதல்முதலாக மூன்று வயது பாலகனாக சென்னை விமானநிலையத்தில்தான் பார்த்தேன். என்னைப்போன்று தங்கள் மனைவிää பிள்ளைகளைää பெற்றவர்களைää உறவினர்களை பிரிந்து பலதேசம் சென்றவர்களின் ர்ழஅந ளுiஉம துயரங்களை எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லை.
தற்காலத்தில் எத்தனையோ கனவுகளையும் துயரங்களையும் சுமந்தவாறு கடலின் அக்கரை சென்றுகொண்டிருப்பவர்களை அனுதாபத்துடன் அவதானித்துக்கொண்டிருக்கின்றேன்.
1990 இல் தமிழகத்தில் என்னைச்சந்தித்த மனைவி மக்களை 1991 இல் அவுஸ்திரேலியா அழைத்திருந்தேன்.
சுமார் 11 வருடங்களின் பின்னர் மகனுடன் நான் நாடுதிரும்பியபோது எனது வாழ்வில் நிறையமாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அதிர்ச்சியிலிருந்த அம்மாவுக்கும் சகோதரங்களுக்கும் ஆறுதல்கூறவந்தேன். திரும்பிச்செல்லும்போதும் அம்மா விமானநிலையம் வரவில்லை. அதன்பிறகு 1999 இல் அக்கா மகளின் திருமணத்திற்கு வந்து திரும்பியபோதும் அம்மா விமானநிலையம் வரவில்லை.
2002 இல் வந்து திரும்பியபோதும் அம்மா ஏனோ வரவில்லை. இவ்வாறு வந்து திரும்பும் சந்தர்ப்பங்களில் வீட்டில் சுவாமி அறைக்கு அழைத்துச்சென்று நெற்றியில் திருநீறு பூசி கன்னத்தில் முத்தமிட்டு என்னை வழியனுப்புவார்கள். நானும் அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெறுவேன்.
2003 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஒருநாள் இரவு எனது உறக்கத்தை களைத்தது ஒரு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் அம்மாவின் குரல். அம்மா அப்படி ஒருநாளும் இலங்கையிலிருந்து தொடர்புகொண்டதில்லை. அப்பொழுது நீர்கொழும்பில் தம்பி வீட்டிலிருந்தார்கள்.
எனக்கு சற்று அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
“ என்ன அம்மா…திடீரென்று எடுக்கிறீர்கள்..?” எனக்கேட்டேன்.
“ தம்பி உனக்கு ஒரு நல்ல செய்தி…”
“ என்னம்மா…?”
“ உனக்கு உனது பறவைகள் நாவலுக்கு சாகித்திய விருது கிடைத்திருக்கிறது. நீ அவசியம் வந்து நேரில் பெற்றுக்கொள்ளவேண்டும்”
“ அம்மா…தகவலுக்கு நன்றி. இந்தத்தகவல் நீங்கள் இப்பொழுது செல்லித்தான் எனக்குத்தெரியும். ஆனால் எப்படி நம்பமுடியும்” என்றேன்.
“ இப்பொழுதுதான் தொலைக்காட்சியில் செய்தியில் சொன்னார்கள். ரூபவாஹினியில் பார்த்தேன். அந்தச்செய்தி சரியாகத்தான் இருக்கும். வேண்டுமென்றால் கொழும்பில் இருக்கும் உனது நண்பர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள். உன்னை எதிர்பார்க்கின்றேன். கட்டாயம் வந்துவிடு.”
மறுநாள் கொழும்பில் மல்லிகைஜீவாவுடன் தொடர்புகொண்டு கேட்டேன்.
ஆனால்ää அவர் ஏனோ திருப்தியான பதில் தரவில்லை. ஆனால் அவர் சொன்ன தகவல் சற்று வித்தியாசமாக இருந்தது.
“ இதுபோன்ற அறிவிப்புகளை நாம் சொல்ல முடியாது பூபதி. நீர்தான் ஊடகங்களின் ஊடாகத்தெரிந்துகொள்ளவேண்டும்.”
பின்னர் நண்பர் ராஜஸ்ரீகாந்தனை தொடர்புகொண்டு கேட்டேன்.
அவர் சிரித்துக்கொண்டுää “அம்மா சொன்னால்… அது சரியாகத்தான் இருக்கும். அம்மாவின் ஆசைப்படி வந்து விருதை நேரில் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.
மாலைவேளை தம்பி ஸ்ரீதரன் தொடர்புகொண்டுää” அண்ணா… அக்காவின் வீட்டு முகவரிக்கு கலாசார அமைச்சின் கடிதமும் அழைப்பிதழும் வந்திருக்கிறது. உங்கள் வருகையை இங்கு எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.” என்றான்.
கிடைக்கப்போவது விருதும் சான்றிதழும் 35 ஆயிரம் ரூபா பணமும். இதற்காக சில இலட்சங்களை செலவழித்துக்கொண்டு நான் போகத்தான்வேண்டுமா? என்று யோசித்துவிட்டுää சில நிமிடங்களில் தம்பியுடன் தொடர்புகொண்டேன்.
“ அலைச்சல்… வீண் செலவு… நீயே பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடம் அதனைப்பெற்றுக்கொள்… நான் வரவில்லை..” என்றேன்.
“ அம்மாவிடமே… பேசிக்கொள்ளுங்கள்” எனச்சொல்லிவிட்டு தொலைபேசியை அம்மாவிடம் கொடுத்துவிட்டான் தம்பி.
“ நீ…வருகிறாய்…அவ்வளவுதான் சொல்வேன்” அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள்.
அம்மாவுக்கு வீட்டில் நாம் வைத்திருக்கும் ஒரு பெயர் பொலிஸ்காரன் மகள்.
அம்மாவின் அப்பா பிரிட்டிஷாரின் ஆட்சியில் பொலிஸ் சார்ஜன்டாக பணியிலிருந்தவர். கண்டிப்பான மனிதர். அவருக்கு முன்னால் எவரும் சிகரட்ää பிடிää சுருட்டு புகைக்கமாட்டார்கள். எங்களையெல்லாம் வெருட்டிக்கொண்டு பாசமுடன் வளர்த்தவர். எனக்கு ஐந்து வயதாக இருக்கும்பொழுது திடீரென்று மாரடைப்பால் மறைந்தார். நான் பார்த்த முதலாவது மரணச்சடங்கு தாத்தாவுடையது.
இந்த பொலிஸ் தாத்தா பற்றிய சுவாரஸ்யமான கதைகளை ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். எனது அரசமரம் சிறுகதையிலும் இடம்பெற்றவர். மல்லிகை ஜீவா நினைவுகள் நூலிலும் இந்த பொலிஸ் தாத்தா வருகிறார்.
எங்கள் குடும்பத்தில் நாம் அப்பாவுக்கு செல்லப்பிள்ளைகள். ஆனால் அம்மாவுக்கு நாம் பெற்றோர்களான பின்பும் பயந்தவர்கள். குடும்பத்தில் அம்மாவின் ஆட்சிதான். அம்மா சொன்னால் தட்டமுடியாது.
“ சரி அம்மா வருகிறேன்.” என்றேன்.
அம்மாவுக்காகவே அந்தப்பயணம் வந்தேன். எங்கள் நீர்கொழும்பு வீட்டு முகவரிக்கு ஐந்து அழைப்பிதழ்கள் வந்திருந்தன. அம்மாவுடன் தம்பிமார் மற்றும் தங்கையின் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சாகித்திய விருதையும் பணப்பரிசிலையும் வாங்குவதற்கு கொழும்பு சென்று திரும்பினேன்.
பத்துநாட்கள் இலங்கையில் நின்றேன். அப்பொழுது சாகித்தியரத்தினா விருது பெற்ற வரதர் அவர்களுக்கு கொழும்பில் நண்பர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் அவர்களின் இல்லத்தில் நடந்த பாராட்டு தேநீர் விருந்துபசாரக்கூட்டத்திலும்ää திருமறைக்கலாமன்றம் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடத்திய பவளவிழாநாயகர் டொமினிக்ஜீவா பாராட்டு நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றினேன். தமிழ்ச்சங்கத்தில் அப்பொழுது தலைவராக இருந்த தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவகுருநாதன் தலைமையில் எனக்கு பாராட்டு நிகழ்வு நடந்தது. பேராசிரியர் சோ. சந்திரசேகரன்ää மல்லிகைஜீவாää கம்பவாரதி ஆகியோர் உரையாற்றினர்.
மினுவாங்கொடைக்குச் சென்று எங்கள் தமிழ் இலக்கிய அபிமானி வண.ரத்னவன்ஸ தேரோ அவர்களையும் சந்தித்தேன். அந்த பத்துநாட்களும் வேகமாக ஓடிவிட்டன.
நான் அவுஸ்திரேலியா புறப்படும் நாள் வந்தது. சுவாமி அறைக்குச்சென்று அம்மாவிடம் ஆசிபெறும்போதுää “ தம்பி நானும் ஏயார்பேட்டுக்கு வருகிறேன்.” என்றார்கள்.
எனக்கு வியப்பாகவிருந்தது. அம்மா அதற்கு முன்னர் அப்படி ஒருநாளும் சொன்னதில்லை. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. சகோதரங்களும் ஆச்சரியப்பட்டார்கள்.
அம்மா அன்று விமானநிலையம் வந்து கட்டி அணைத்து முத்தமிட்டு வழியனுப்பிவைத்தார்கள்.
அவுஸ்திரேலியா திரும்பி சில நாட்களில் எனக்கு மாரடைப்பு வந்தது. அக்காää தங்கைää தம்பிமாரிடம் நான் சுகவீனமுற்றிருக்கும் தகவலை அம்மாவிடம் சொல்லவேண்டாம் எனச்சொன்னேன். அவர்களும் அம்மாவிடம் சொல்லவில்லை. எனக்கு பைபாஸ் சத்திரசிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது. அதே வேளை அம்மாவுக்கும் திடீரென்று சுகவீனம் ஏற்பட்டது. அம்மாவின் சுகவீனத்தை எனது உடல்நலம்குறித்து குடும்பத்தினர் முதலில் மறைத்துவிட்டார்கள். பின்னர் மனைவி ஊடாக அறிந்துகொண்டேன்.
ஒருநாள் அம்மா மறைந்தார்கள். அப்பொழுது எனக்கு சத்திரசிகிச்சை முடிந்துவிட்டது. என்னை சிகிச்சைக்குட்படுத்திய டொக்டரிம் இலங்கை செல்ல அனுமதிகேட்டேன். அவர் மறுத்துவிட்டார். அம்மாவின் மறைவுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார். நான் அழுதுகொண்டே இருந்தேன். அவுஸ்திரேலியாவில் எனது வீட்டில் அம்மாவின் படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குடும்ப நண்பர்கள் வந்து ஆறுதல் சென்னார்கள்.
அம்மா நீர்கொழும்பில் தகனமாகும்போது நான் மனைவி பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் அமைதிப்பிரார்த்தனையில் இருந்தேன்.
எனக்கு மாரடைப்பு வந்ததோää சத்திர சிகிச்சை நடந்ததோ தெரியாமலேயே அம்மா கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார்கள். அம்மாவின் மறைவுபற்றி உயிர்வாழ…என்ற சிறுகதையை தினக்குரலில் எழுதியிருக்கிறேன். எனது கங்கைமகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
நான் யோசித்துப்பார்த்தேன்.
பல தடவைகள் இலங்கை வந்து திரும்பியபோதும் விமானநிலையம் வரையில் வந்து வழியனுப்பாத அம்மாää இறுதியாக தனது மறைவுக்கு முன்னர் மாத்திரம் ஏன் வந்தர்கள்.?
சாகித்தியவிருதை பெற்றுக்கொள்ள நான் வரத்தான்வேண்டும் அந்தக்காட்சியை தான் நேரில் பார்க்கத்தான் வேண்டும்…என்று எனக்கு ஏன் கண்டிப்பான உத்தரவுபோட்டார்கள்.?
அந்தப்பயணம்தான் நான் அம்மாவை சந்திக்கின்ற இறுதிச்சந்தர்ப்பம் என்று அம்மாவின் உள்ளுணர்வு சொல்லிவிட்டதோ?
இறுதியாக அன்று விமானநிலையத்தில் விடைகொடுத்த அம்மா எங்கள் வீடுகளில் சுவர்களில் காட்சிதருகிறார். அம்மா கால்நூற்றாண்டு காலத்துக்கு முன்னர் எனக்கிட்ட கட்டளைகளை படிப்படியாக நிறைவேற்றியவாறு எனது பயணங்களை தொடருகின்றேன். அம்மா இப்பொழுதும் என்னுடன் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment