வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு -52 “எள்ளு இருக்கா?”


ஞானா:        அம்மா….என்னம்மா நீங்கள்? முறுக்குச் சுட்டுத் தரச்சொல்லிக் கேட்டனான் எல்லே. இப்ப                கேட்டு ஒரு கிழமையாயய் போச்சு. நீகங்கள் பேசாமல் இருக்கிறியள்.     
    
சுந்தரி:        ஞானா முறுக்குக்கு இப்ப என்ன அவசரம்? ஆறதலாய் நேரங்கிடைக்கேக்கை செய்து தாறன்.

ஞானா:        நான் அம்மா என்னோடை வேலை பாக்கிற வெள்ளைக் காறப் பிள்ளை ஒண்டுக்கு முறுக்கைப்            பற்றிச் சொன்னன். அந்தப் பிள்ளை சாப்பிட்டுப் பாக்க ஆசைப் படுகிதம்மா.           
 
சுந்தரி:        பிள்ளை ஞானா…முந்தநாள் முறுக்குச் சுடுவம் எண்டு ஆயித்தம் செய்தனான். ஆனால் எள்ளு            இருக்கேல்லை…..

ஞானா:        முறுக்குச் சுட எள்ளு என்னத்துக்கு அம்மா? உழுத்தம்மா அல்லாட்டில் கடலைமா இருந்தால்            போதும்தானே.

சுந்தரி:        எடி விசர்ப்பிள்ளை. எள்ளுப் போட்டு முறுக்குச் சுட்டால்தான் ருசியாய் இருக்கும். இந்த எங்கடை            பலகாரஞ் சுடுகிற பக்குவங்களையும் கொஞ்சம் தெரிஞ்சுவையுங்கோ. எங்கடை பலகாரங்கள்             தின்ன நல்ல விருப்பம். ஆனால் செய்யிற பக்குவம் தெரியாது உங்கள்க்கு. உன்ரை அப்பரிட்டை            சொன்னனான் எள்ளு வாங்கியாருங்கோ எண்டு. மனிசன் கடைக்குப் போற நேரமெல்லாம் அதை            மறந்து போகுது.


அப்பா:        சுந்தரி……எள்ளை மறக்காமல் வாங்கிவர ஒரு உபாயம் இருக்குது. இவள் பிள்ளை                 ஞானாவின்ரை திருக்குறள் அறிவைச் சோதிக ஒரு கேள்வி கேக்கப் போறன் அதுக்குச் சரியாய்            பதில் சொன்னால் இப்பவே போறன் எள்ளு வாங்கிவர.

ஞானா:        என்ன கேள்வி அப்பா? கேளுங்கோ பாப்பம்.

அப்பா:        திருக்குறளிலை எள்ளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கோ? அப்பிடியெண்டால் எந்தக் குறளிலை            சொல்லப்பட்டிருக்கு? சொல்லு ஞானா பாப்பம்.

சுந்தரி:        அப்பா இது முறுக்கில் பாக்கப் பொல்லாத முறுக்காய் எல்லோ கிடக்கிது.

ஞானா:        குறளிலை எங்கையோ கண்ட ஞாபகம் இருக்கப்பா ஆனால்…..ஆனால்….எள்ளு திருக்குறளிலை            இருக்கப்பா. அதைத் திடமாய்ச் சொல்லுவன். ஆனால் குறள் தெரியேல்லை…….பிறகு பாத்துச்            சொல்லிறன். இப்ப போய் எள்ளை வாங்கியாருங்கோ அப்பா.

அப்பா:        ஞானா திருக்குறளிலை எள்ளு இருக்கெண்டு ஒப்புக் கெண்டியே அது போதும். திருக்குறளிலை            உட்பகை எண்ட 89வது அதிகாரம் படிச்சனி தானே. அதிலை 889வது குறளிலை இருக்குது            எள்ளு. உன்ரை புத்தகத்திலை எடுத்துப்பார்.

சுந்தரி:        அப்பா இஞசை நான் எடுத்தந்திருக்கிறன். எங்கை பாப்பபம் 889 குறள். ம்……….ம்……                இஞ்சை இருக்கு 889வது குறள்:
                
                எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு                                            
                முட்பகை யுள்ளதாங் கேடு 

        உதிலை எங்கை கிடக்குது எள்ளு எண்டு கேக்கிறன்?

அப்பா:        சுந்தரி அறப்படிச்ச பல்லி கூழ்பானைக்கை விழுந்துதாம் எண்டமாதித்தான் கிடக்குது உம்மடை            கதை. குறள் வந்து குறுகத் தறித்தது. முறுக்கு மாதிரிச் சொல்லுகள் முறுக்கப் பட்டிருக்கும்.            குறளைப் படிக்கேக்கை ஆற அமரப் படிக்க வேணும். முறுக்கு கொறிச்சமாதிரிக் கொறிக்கக்            கூடாது.

ஞானா:        விளங்குதப்பா…..எள்….பகவு….அன்ன…. எண்டு எட்பக வன்ன எண்ட சொற்தொடரைப் பிரிக்க            வேணும். அப்ப வரும் திருக்குறளிலை எள்ளு.

அப்பா:        ஞானா கெட்டிக்காரிதான். சுந்தரி அப்ப நான் எள்ளுவாங்கப் பேகவேண்டியதுதான்.

சுந்தரி:   
    அப்பா. திருக்குறளாலைதான் உங்களை அசைக்க முடியும். நான் வந்து எள்ளு எண்ட சொல்லு            வெட்ட வெளிச்சமாய் குறளிலை இருக்கும் எண்டு நினைச்சன். உப்பிடிப் புணர்த்தப் பட்டிருக்கும்             எண்டு நினைக்கேல்லை. அது கிடக்கட்டும் குறளின்ரை கருத்தையும் சொல்லி விடுங்கோவன்.

அப்பா:        எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்,  உட்பகை கேடு உள்ளதாம் எண்டு பதங்களைப்             பிரிக்க வேணும் சுந்தரி;. எள்ளின் துண்டு போன்ற சிறியதாக இருந்தாலும் உட்பகை கேடு             உண்டாக்கக் கூடியதே ஆகும் எண்டதுதான் கருத்து.

ஞானா:        அப்பா உட்ககை எண்டது,  ஒரு விட்டிலோ அல்லது நாட்டிலோ உள்ளிருக்கின்றவர்களே                பகையாக இருந்துகொண்டு குடும்பத்துக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ கேடு வரக்கூடிய            காரியங்களுக்கு உடந்தையாக,  இருப்பவர்கள் உட்பகையானவர்கள் இல்லையா அப்பா?

அப்பா:        சரியாய்ச் சொன்னாய் ஞானா. இவர்கள் வெளித்தோற்றத்துக்கு உறவுபோல இருப்பார்கள்                ஆனால் உள்ளே பகைமை வைத்திருப்பார்கள். இவர்களை அடையாளங் கண்டு மக்கள்                வாழவேண்டும்.

சுந்தி:        அதவது வந்தப்பா ஒரு சின்ன உட்பகையும் வாழ்க்கையிலே இருக்கக் கூடாது. அதுக்கு                நாங்கள் இடம்வைக்கக் கூடாது எண்டு இந்தக் குறள் சொல்லுது.

ஞானா:        ஓம் அம்மா. எள்ளு வாங்கியராமல் வீட்டிலை ஒரு உட்பகையும் அப்பா வைக்கக்கூடாது.                போங்கோ அப்பா கடைக்குப் போய் எள்ளை வாங்கியாருங்கோ.
(திரை)



No comments: