மெல்பேர்ன் ஸ்ரீ முருகப் பெருமானின் தேர்த்திருவிழா அல்லமதேவன்-

.

மெல்பேர்ன் மாநகரில் சண்சயினில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானின் மகோற்சவத் தேர்த்திருவிழா




மெல்பேர்னில் உள்ள சண்சயினில் வீற்றிருந்து அடியார்களுக்கு தெய்வ அருள்பாலித்துக் கொண்டிருக்கும் தமிழ்க் கடவுள் என்று கூறப்படும் அழகிய கந்தன் ஸ்ரீ முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவத் திருவிழா கடந்த 18.01.2013 வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இறைவன் உடைய ஜந்து தொழில்களான படைத்தல்ää காத்தல்ää அழித்தல்ää அருளல்ää மறைதல் ஆகியவற்றை விளக்குவதையே இந்த திருவிழாக்கள் குறிக்கின்றது. மற்றும் நித்திய பூசைகளில் நிகழும் குறைகளை நீக்கி ஒரு நிவர்த்தி கிடைக்க இந்த மகோற்சவத் திருவிழாக்கள் நடைபெறுகின்றது என்று சொல்லப்படுகின்றது. பதினொருநாட்கள் விஷேச அபிஷேக ஆராதனைகளுடன் பகல்ää இரவுத் திருவிழாக்களாக நடந்து கொண்டிருக்கின்றன. மகோற்சவத் திருவிழாவில் கடந்த சனிக்கிழமை 26.01.13 அன்று தேர்த்திருவிழா நடைபெற்றது. ஸ்ரீமுருகப் பெருமானின் விஷேச தினமான தைப்பூசத்திலன்று ஞாயிற்றுக்கிழமை 27.01.13 தீர்த்தத் திருவிழாää கொடியிறக்கம்ää மறுநாள் திங்கட்கிழமை 28.01.13 பூங்காவனம் ஸ்ரீ முருகப் பெருமானின் திருக்கல்யாணத்துடன் மகோற்சவத் திருவிழா நிறைவு பெறுகின்றது.






                                                   படங்கள்  ஒளிபதிவாளர் இளங்கோவன்

26.01.2013 சனிக்கிழமை மாலை கொடித்தம்பää வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து ஸ்ரீ ஆறுமுகப்பெருமான்ää ஸ்ரீ வள்ளி தேவிää தெய்வயானை சகிதம் உள்வீதி வலம் வந்த பின் தேரிலேறி பலஙாற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சு10ழப் பவனி வந்திருநதார். சகல சைவ சமயக் கிரியைகளையும் பிரபல சிவாச்சாரியார்கள் நடாத்திக் கொண்டிருந்தனர். இந்தத் திருவிழாவிற்கு லண்டன் மாநகரில் நியூ மோல்டன் முருகன் கோவில் பிரதம குருக்களும்ää யாழ்ப்பாணம் உரும்பிராய் பர்வதபத்தினி அம்மன் கோவில் சிவாச்சாரியார் காலஞ் சென்ற சிவஸ்ரீ.சிவஞானக்குருக்கள் அவர்களின் புத்திரன் சிவாகம சிரோன்மணி சிவஸ்ரீ.சி.ஜெகதீஸ்வரக்குருக்கள் அவர்கள் வருகை தந்து பிரதம குருக்களாகக் காப்புக்கட்டி சகல கிரியைகளையும் மிகவும் சிறப்பாக நடாத்திக் கொண்டிருக்கின்றார்.


                                               படங்கள்  ஒளிபதிவாளர் இளங்கோவன்

அவருடைய சகோதரரான சிவஸ்ரீ.சி.இராஜேந்திரக்குருக்கள் மற்றும் சிவஸ்ரீ.கோதண்டராமன் குருக்களும் சேர்ந்து பக்திமயமாக ஸ்ரீமுருகப் பெருமானின் கிரியைகளை நடாத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க மனநிறைவாக இருக்கின்றது. சிவாச்சாரியர்கள் இருக்குää யசுர்ää சாமää அதர்வண வேதங்களை ஓதுகின்றனர். மலேசியாவிலிருந்து வருகைதந்திருந்த தவில்ää நாதஸ்வர வித்துவான்களின் தாள வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. தேரிலேறி பவனி வந்த ஸ்ரீ ஆறுமுருகப்பெருமானின் பஜனை நாமாவளிப் பாடல்களை ஸ்ரீ முருகப்பெருமானின் அடியார்கள் பக்தி சிரத்தையுடன் இசைத்துக் கொண்டிருந்தனர்.



தேரடியில் நடைபெற்ற பூசையைத் தொடந்து அடியார்கள் சிதறு தேங்காய் உடைத்து தேரின் இரண்டு வடங்களையும் ஆண்கள் ஒருபுறமும்ää பெண்கள் ஒருபுறமுமாக வடம் பிடித்து தேர் இழுத்து வந்திருந்தமை மிகவும் நன்றாக இருந்தது. தேர்ப்பவனி ஆலயத்தின் வெளிவீதியைச் சுற்றி வந்துää மீண்டும் தேரடியை அடைந்ததும் ஸ்ரீ ஆறுமுகப்பெருமான்ää ஸ்ரீ வள்ளிநாயகிää தெய்வயானை உற்சவமூர்த்திகளுக்கு பச்சை சார்த்திää சிவாச்சாரியர்களும் பச்சை உடை உடுத்தி அனைத்து அடியார்களின் பக்தி கோஷங்களுடனும்ää நாதஸ்வரää தாளவாத்திய இசையுடனும்ää ஆடலுடன் பவனி வந்தார்.
வசந்த மண்டபத்தை அடைந்த உற்சவமூர்த்திகளுக்கு விஷேச பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்றுää ஆறுமுகப்பெருமானின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சாரியார்கள் மலர் கொண்டு சண்முகார்ச்சனை செய்துää அறுவரும் பஞ்சாலாத்தி கொண்டு கற்பூர தீப ஆராதனை நிகழ்த்தியமை யாவரையும் பக்தியில் மனங்குளிர வைத்தது.


பக்தி சிரத்தையுடன்ää சிறுவர்கள்ää இளைஞர்கள்ää யுவதிகள் மற்றும் சகல அடியார்களின் பங்களிப்புடன் மகோற்சவää பிரம்மோற்சவää அலங்கார உற்சவத் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ் அன்பர்கள் அனைவரும் பக்தி சிரத்தையோடு தினமும் திருவிழாவிற்கு வருகை தந்து சகல உதவிகளையும் செய்து வருகின்றனர். அனைத்து அடியார்களுக்கும் பிரசாதங்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது.
மெல்பேர்ண் ஸ்ரீ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.


அல்லமதேவன். மெல்பேர்ன்
படங்கள்  ஒளிபதிவாளர் இளங்கோவன்

ELAN GOVAN 0421 244 478



No comments: