.
மியாமியில் விமானங்கள் மோதியது: 600 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
மக்கள் முன்னிலையில் ஒபாமா பதவி ஏற்பு!
இந்திய உளவாளிகள் பாகிஸ்தானில் கைது!
நோர்வேசிறுவர் காப்பகங்களில் 52 சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் : வேலியே பயிரை மேய்ந்த கதை
மக்கள் முன்னிலையில் ஒபாமா பதவி ஏற்பு!
ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற ஒபாமா வொஷிங்டனில், பொது மக்கள் முன்னிலையில் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
நன்றி வீரகேசரி
மியாமியில் விமானங்கள் மோதியது: 600 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
இந்திய உளவாளிகள் பாகிஸ்தானில் கைது!
உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இந்தியர்கள், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வேசிறுவர் காப்பகங்களில் 52 சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் : வேலியே பயிரை மேய்ந்த கதை
நோர்வே அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்
இயங்கிவருகின்ற சிறுவர் காப்பகங்களில் 52 சிறுவர்கள் மீது மோசமான
துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மியாமியில் விமானங்கள் மோதியது: 600 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
மக்கள் முன்னிலையில் ஒபாமா பதவி ஏற்பு!
இந்திய உளவாளிகள் பாகிஸ்தானில் கைது!
நோர்வேசிறுவர் காப்பகங்களில் 52 சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் : வேலியே பயிரை மேய்ந்த கதை
மக்கள் முன்னிலையில் ஒபாமா பதவி ஏற்பு!
ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற ஒபாமா வொஷிங்டனில், பொது மக்கள் முன்னிலையில் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஒபாமா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து அவர் முறைப்படி நேற்றுமுன்தினம் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமெரிக்க தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட் ஒபாமாவுக்கு பதவி பிரமாணம், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதற்கிடையே, ஒபாமா, வாஷிங்டனில், வெள்ளை மாளிகைக்கு வெளியே,
ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்பாக, இரண்டாவது முறையாக, அதிபராக
பொறுப்பேற்று உரையாற்றினார்.
மறைந்த முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் இனவெறிக்கு எதிராக
போராடிய, மார்டின் லூதர் கிங் ஆகியோர் பயன்படுத்திய பைபிளை, சாட்சியாக
வைத்து, மக்கள் முன்னிலையில் நேற்று, பதவி ஏற்றார்.
நன்றி வீரகேசரிமியாமியில் விமானங்கள் மோதியது: 600 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான மியாமியில் நேற்று இரவு 2 பயணிகள் விமானங்கள் மோதிக்கொண்டன.
மியாமி சர்வதேச விமான நிலையத்தில் 350 பயணிகளுடன் ஏர்பிரான்ஸ் விமானம் பாரிசுக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது 240 பயணிகளுடன் அங்கு தரையிறங்குவதற்காக கீழ்நோக்கி வந்த ஆர்ஜெண்டினா விமானம், எயார் பிரான்ஸ் விமானத்தின் மேல்பகுதியில் மோதியபடி ஓடுதளத்தில் இறங்கியது.
இதில் ஒரு விமானத்தின் இறக்கையும், மற்றொரு விமானத்தின் வால் பகுதியும் சேதமடைந்தது. சம்பவம் நடந்த உடனே மீட்புக்குழுவினர் விரைவாக செயல்பட்டு, இரு விமானங்களிலும் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.நன்றி வீரகேசரி
இந்திய உளவாளிகள் பாகிஸ்தானில் கைது!
உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இந்தியர்கள், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இராணுவ கட்டுபாட்டில் உள்ள இடத்தில்
சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய இரண்டு பேரை, புலனாய்வு அதிகாரிகள்
கைது செய்தனர்.
இவர்கள் எல்லையை கடக்க மூன்று பாகிஸ்தானியர் உதவியுள்ளனர். இது தொடர்பாக மூன்று பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ஐந்து இந்தியர்கள் உளவு பார்த்தாக கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியர்கள் கைது செய்யப்பட்ட விவரத்தை பாகிஸ்தான் உளவுத் துறை அறிவிக்கவில்லை என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.நன்றி வீரகேசரி
நோர்வேசிறுவர் காப்பகங்களில் 52 சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் : வேலியே பயிரை மேய்ந்த கதை
No comments:
Post a Comment