டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி – மண்ணின் மீது பற்றுள்ளவர்


.
இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் படித்து அங்கேயே நிலைத்து விட்டவர்கள் அப்படி நிலைக்க ஆசைப்படுபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் அங்கேயிருந்து திரும்பி வந்து எதாவது செய்ய வேண்டும் தான் பிறந்த நாட்டுக்கு என்று எண்ணி செய்ய முயன்றவர்கள் மிகக் குறைவு. நூற்றுக்கணக்கிலாவது இருப்பது சந்தேகம். 30, 40 வருடங்களுக்கு முன் சுய முன்னேற்ற நூல் எழுதியவர்கள் இருவரே ஒருவர் தமிழ்வாணன் மற்றொருவர் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி. ‘நெஞ்சமே அஞ்சாதே நீ, சிந்தனை தொழில் செல்வம், உன்னால் முடியும் தம்பி ஆகிய நூல்கள் அதில் குறிப்பிடத்தகுந்தவை.
சுய முன்னேற்ற நூல்கள் மனதில் ஒரு வெறுமையை விட்டுச் செல்கின்றன. ஏனெனில் அவை சிக்கலில் இருப்பவருக்குப் பொருந்தாத பொதுப்படையான தீர்வுகளைக் கூறுகின்றன. நிதர்சனத்தை ஏற்று போராடும் குணமும், உண்மையான நலம் விரும்பி ஒருவரேனும் அமைந்தால் ஒருவருக்கு இந்த நூல்கள் தேவையில்லை. இருந்தாலும் இத்தகைய நூல்கள் சோர்வுற்ற மனத்திற்கு ஒரு முதலுதவி போல் அமைகின்றன.


பெரும்பாலும் அத்தகைய நூல்கள் அமெரிக்கர்களால் அதுவும் கிறித்துவ மத போதகர்களால் எழுதப்படும். இந்திய சூழலுக்கு ஏற்ப எழுதியவர் உதயமூர்த்தி. நதி நீர் இணைப்புக்காகப் பாத யாத்திரை 2000 கிமீ சென்ற அவர் “மக்கள் சக்தி இயக்கம்” என்னும் அமைப்பை 1988ல்துவங்கி நடத்தினார். ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிட்ட அது பின்னாளில் சமூக அமைப்பாக மாறியது. அதே பெயரில் ஒரு பத்திரிக்கையையும் நடத்தினார். அவரை நேரில் சந்தித்த போது காவிரி நீர் பிரச்சனை தொடர்பாகக் கைதாகி இரண்டு நாட்கள் சிறையில் இருந்த அனுபவத்தை நினைவு கூர்ந்தார். தமிழகத்தின் ஆரோக்கியமான தளத்தில் அவர் மிக முக்கியமான ஆளுமை. அவரது மறைவில் மண்ணின் மீது அவர் கொண்ட பற்றை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். (Image courtesy:tamil.oneindia.in)

No comments: