பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா சமாதியடைந்தார்

 .

பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா  ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் அவரது 85ஆவது வயதில் ஜீவசமாதியடைந்தார். பாபா கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில்  அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் பாபா ஞாயிற்றுக்கிழமை காலை ஜீவசமாதியடைந்துள்ளார்.


பாபாவின் இறுதி அஞ்சலிக்கு அவரது பிரசாந்தி நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், உலகம் முழுவதும் பாபாவின் மரணச் செய்தியைக் கேட்டு மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


சத்திய சாயி பாபா வழிநடப்பவர்கள் சுமார் 60 இலட்சம் பேர் (1999 இல்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 100 கோடி அடியார்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

இவரின் சுய அறிவிப்பின் மூலம் இவர் சீரடி சாயி பாபாவின் மறு அவதாரம் என இவரின் ஆதரவாளர்களால் நம்பப்படுகின்றது.

ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி எனும் கிராமத்தில் பிறந்தார். அவர் தாயாரின் பெயர் ஈசுவரம்மா, தந்தை பெத்தவெங்கம ராஜு ரட்னாகரம். பகவான் பாபா இவர்களுக்கு 8வது குழந்தையாகப் பிறந்தார்.

பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் தனது மகிமைகளை வெளிப்படுத்தினார். தெரு நாடகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவர்கள் வீட்டில் இருந்த இசைக் கருவிகள் தானாகவே இசைத்தன.

சத்ய நாராயண விரதம் இருந்து பிறந்ததால், இவருக்கு சத்ய நாராயணன் என பெயர் சூட்டினர். இவரின் பிறப்பு சாதாரண மனிதர்களை போல் இல்லை, அதாவது பிரசவத்தின் மூலமாக இல்லாமல் பிரவேசமாக இருந்தது.

ஒரு முறை தாயார் ஈசுவராம்பா கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த போது வானில் இருந்து நீல வண்ண பந்து ஒன்று வேகமாக வந்து அவரின் வயிற்றில் புகுந்ததாகவும் அதன் பின் தான் கருவுற்றதாகவும் பின் ஒரு நாளில் ஈஸ்வரம்மா கூறினார்.

பிந்திய இணைப்பு

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் முக்கியப் பிரமுகர்கள் வேறு பலரும் மறைந்த சாய்பாபாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோடிக்கணக்கானோரை வழிநடத்திய ஆன்மிகத் தலைவர் அவர் என்றும், அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

புட்டபர்த்தியில் அவருடைய பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கூடி வருகின்றனர்.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டுத்துறை நட்சத்திரங்கள் போன்றோரும் சாய்பாபாவின் பக்தர்கள் ஆவர்.

தனது மறைவு குறித்து முன்னரே பேசியிருந்தவர் பாபா. உடல் நிலையானது அல்ல. இந்த உடலை விட்டு தான் மறைந்தாலும் தனது ஆத்மா வாழும் என்று பல வருடங்களுக்கு முன்பே தனது பக்தர்களுக்கு பாபா விளக்கியிருந்தார்.

தனது வாழ்நாள் முழுக்கவும் ஒன்றுக்கொன்று நேரெதிரான உணர்வுப் பெருக்குகளைத் தூண்டிய ஒரு நபராக சாய்பாபா விளங்கிவந்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

தன்னுடைய பக்தர்களைப் பொறுத்தவரை, சாய்பாபா கடவுளின் அவதாரம், மனித உருவில் மண்ணில் தோன்றிய தெய்வப் பிறவி அவர். இந்தியாவின் ஏழ்மைமிகு மூலைகளில் ஒன்றுக்கு இறைவனின் அருட்செய்தியைக் கொண்டுவருவதற்காக பூமியில் உதித்தவர் அவர்.

இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மிக குருவாக அவர் தனது வாழ்நாளில் உயர்ந்திருந்தார் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

சிறிய உடலமைப்பு, அதிர்ந்து பேசாத சாந்தம், முழு நீள காவி அங்கி, எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய பந்துப் பொதியான சுருள் முடி என வலம் வந்த பாபா ஏழைகள், பணக்காரர்கள், உள்நாட்டவர்கள் வெளிநாட்டவர்கள் இந்துக்கள், பிற மதத்தினர் என்றும் பல்தரப்பட்டவர்களையும் ஈர்த்து இருந்தார் என்பதிலும் ஐயமில்லை.

ஆந்திர மாநிலத்தில் உள்ள தள்ளிப்போன ஓர் இடமான புட்டபர்த்தியில் 1926ஆம் வருடம் ஒரு ஏழைக் குடும்பத்தில் சத்ய நாராயண ராஜுவாகப் பிறந்தார் பாபா. அவருடைய குழந்தைப் பருவத்திலேயே அவருடைய தெய்வத்தன்மைக்கான பல அடையாளங்கள் இருந்தமைக்கு நிறைய கதைகள் இருக்கின்றன.

இந்துக்களாலும் முஸ்லிம்களாலும் ஒருசேர நேசிக்கப்பட்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் புகழ்வாய்ந்த ஆன்மிக குருவான சீரடி சாய்பாபாவின் மறுபிறப்பு தான் என்று தனது 13ஆவது வயதில் சத்ய சாய்பாபா அறிவித்திருந்தார். இந்த பெயர் மாற்றம் அவருடைய வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

தனது கிராமத்தில் சாய்பாபா அமைத்த பிரசாந்தி நிலையம் என்ற ஒரு ஆசிரமத்துக்கு ஏராளமான பக்தர்கள் வரத் துவங்கினர்.

அதன் பின்னர் இந்த கிராமம் ஏராளமான விடுதிகளும், ஓய்வுமையங்களும், பள்ளிக்கூடங்களும் பல்கலைக்கழகமும், சிறப்பு சிகிச்சை மருத்தவமனையும், ஏன் தனியார் விமான நிலையமும் கொண்ட ஒரு ஆன்மீகத்துக்கும் சேவைக்குமான தலைமையகமாக மாறிப்போனது.

ஆன்மிகத்தை கோட்பாட்டு ரீதியாக சாய்பாபா அணுகியிருக்கவில்லை. இதனால் அவரது சித்தாந்தம் உலகெங்கும் பிரபல்யம் அடைந்ததோடு, ஏராளமானவர்களை அவருக்கு பக்தர்களாகப் பெற்றுத்தந்தது.

ஏராளமான பக்தர்களின் அன்பையும், விசுவாசத்தையும் போற்றுதலையும் சாய்பாபா பெற்றிருந்தார் என்பது நிச்சயம்.

6 comments:

kirrukan said...

[quote]ஒரு முறை தாயார் ஈசுவராம்பா கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த போது வானில் இருந்து நீல வண்ண பந்து ஒன்று வேகமாக வந்து அவரின் வயிற்றில் புகுந்ததாகவும் அதன் பின் தான் கருவுற்றதாகவும் பின் ஒரு நாளில் ஈஸ்வரம்மா கூறினார்.[/quote]


ம்ம்ம்ம் நம்புவோம்....நம்பாவிடில் நான் முட்டாள்.....

Varuni said...

இவ் உரைபகுதியை வாசித்தபின்னர் என்னக்கு சத்யா சாய் பாபாவைப் பற்றி இன்னும் கூட அறிந்தேன்
ஆகவே இதனை எழுதியவருக்கு எனது நன்றிகள்
அனால் அவர் தனது மனித உருவத்தில் இங்கு இல்லாவிட்டாலும் அவர் எபோதும் எம்முடன் இருப்பார் என்பதை நாம் மறக்க முடியாது

கலைரசிகன் said...

சாய்பாபாவின் ஆன்மீக விடயங்களில் எனக்கு அதிகம் நாட்டம் இருக்கவில்லை. ஆயினும் சாய்பாப அறக்கட்டளை புட்டபர்த்தியில் ஆற்றியிருக்கும் சமூகப்பணியை யாரும் புறந்தள்ள முடியாது. எல்லா வசதிகளுடனும் கூடிய இலவச மருத்துவமனை, பல்கலைக்கழகம், அயலூர்கள் எங்கணும் இலவச குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் என .. ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை செய்துமுடித்திருக்கிறது சாய்பாபா அறக்கட்டளை. அதன் தலைவரும் குருவுமான சாய்பாபா வின் மக்கள் சேவை மகேசன் சேவையன்றி வேறேதுமில்லை.

kirrukan said...

இந்த இடத்தில் நாம் சாயிபாபாவைப் பேசுவோம். சாய்பாபா யார்? அவர் சாதாரண மனிதன். அதனால்தான் இப்போது செத்தும்விட்டார். இத்தனை நாட்கள் தன்னை தெய்வம் என சொல்லிக்கொண்ட சாய்பாபா, மாய மந்திர வித்தைகள் எல்லாம் செய்து உலகம் முழுக்க பக்தர்களை வளர்த்துக்கொண்டு, பல லட்சம் கோடி ருபாய் சொத்துக்களையும் சேர்த்துவிட்டார். அந்த வித்தைகளின் செய்முறை விளக்கம், Working stills வரை வெளியான பின்னும் அவரும் கைவிடவில்லை, மக்களும் அவரை கைவிடவில்லை. இந்த மோசடிகளைப் பேசினால், ‘அவர் தனி மனிதனாக ஒரு நகரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கு பல லட்சம் பேர் மருத்துவ வசதி பெருகின்றனர். கல்வி வசதி பெருகின்றனர்’ என பேச்சை மடை மாற்றுகின்றனர்.

இவ்வளவுப் பேருக்கு இலவசமாக அனைத்தையும் செய்வதற்கு உண்டான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது? மாய மந்திரத்தில் கொண்டு வந்தாரா? ரிசர்வ் பேங்க் ஆபீஸர் வந்து ஒவ்வொரு நோட்டிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாரா? ‘எல்லாம் பக்தர்கள் கொடுத்தது’ என்பார்கள். ’பக்தர்கள் ஏன் கொடுத்தார்கள்?’ என்றால், ‘இது என்ன கேள்வி? அவர் பகவான், இவங்க பக்தர்கள். குடுக்குறாங்க’ என அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆக, தான் இறைவன் அல்லது தெய்வீக சக்தி படைத்தவன் என சாய்பாபா தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்ட இமேஜ்தான் இத்தனைக்குமான அடிப்படை. அந்த அடிப்படையே பொய்களாலும், மோசடிகளாலும் உருவாக்கப்பட்டது என்பதுதான் பிரச்னையின் மையம்.

உங்கள் மகனோ, தம்பியோ, தங்கையோ தான் வேலைப் பார்க்கும் இடத்தில் அலுவலகப் பணம் 10 லட்சத்தைத் திருடிவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள். திருடியப் பணத்தில் நான்கு அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். இப்போது ‘ஏன் திருடினாய்?’ என கேட்டால் ’அதான் அனாதைப் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறேன்ல’ என பதில் சொன்னால் அது யோக்கியமானதா? ‘ஏதோ தெரியாத்தனமாகத் திருடிவிட்டான். அதை உணர்ந்து பிராயச்சித்தமாக அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான்’ என்று சொன்னால் கூட அந்த தர்க்கம் புரிந்துகொள்ளக் கூடியது. குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குறைந்தப்பட்ச நேர்மையேனும் அதில் உண்டு. ஆனால் பாபாவின் பக்தர்களோ திருட்டையே ஒரு தெய்வீகத்தன்மையாகப் பார்க்கின்றனர்.

சாய்பாபா சம்பாதித்தது = திருட்டுப் பணம் என்ற இந்த ஒப்பீட்டில் பொருந்தாப் புள்ளி ஒன்று உண்டு. ஓர் எல்லைக்குப் பிறகு சாய்பாபா தானாக சென்று யாரிடமும் திருடவில்லை. பக்தர்கள் தானாக வந்து கொட்டிய பணம் அது. ’பக்தர்கள் மனமுவந்து கொடுத்ததை அவர் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிட்டார். அது தப்பா?’ என்று கேட்கிறார்கள். வேறு சிலரோ, ’அவர் பணம் சம்பாதிப்பதும், அதற்கு கையாளும் வழிமுறைகளும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறுதியில் அந்த பணம் முழுவதையும் சமூகத்துக்குத் தொண்டு

kirrukan said...

தொடர்சியை இந்த இணையத்தில் போய் பார்வையிடவும்.www.vinavu.com

நன்றிகள் வினவு.கொம்

Aspirant said...

I read with interest all the comments so far.
Miracles are possible. I do not agree with Mr K who has quoted a text from another website.
End of the day who did what is the question to be asked. I think Mr K is worrying too much.
All the good thinks someone does always stays with people. Critics are critics allways and do nothing.
May his soul rest in peace