மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

51. ஒதுங்கி நிற்க வேண்டாம் - ஓடிப்போங்கள்!

நான் உங்களிடம் கெட்டவர்களிடமிருந்து, தீயவர்களிடமிருந்து வெறுமனே ஒதுங்கி நில்லுங்கள் என்று சொல்லவில்லை. அவர்களிடமிருந்து ஓடிப்போய்விடுங்கள் என்றுதான் சொல்லுகின்றேன்.

52. மரம் - ஆறு - பசு

தன்னலம், பொறாமை, தான் தான் பெரியவன் என்ற அகங்காரச் செருக்கு ஆகிய மூன்று மனப்போக்குகளும், மனப்பாங்குகளும் இளமையான இதயங்களில் வேர்விடக்கூடாது. அவர்களைப் பிறருக்குச் சேவை செய்வதில் தூண்டி ஈடுபடுத்துங்கள். மரங்களைப் பாருங்கள்! அவை எந்தவிதத் ‘தான்’ என்ற எண்ணமும் இல்லாது நமக்குச் சேவை செய்கின்றன. யார் அதனைப் பாராட்டுகின்றார்களோ அவர்களுக்கு நிழல் தந்து சுகமாய் இருக்க அவை உதவுவதோடு மட்டுமல்லாது, தன்னைப் பாராட்டாதவர்களுக்கு உதவுகின்றனவே: அந்த இருவரும் அந்த மரத்தடியின் நிழலில் பாதுகாப்பாக ஒதுங்குகின்றார்களே! ஆறுகள் அனைவருக்கும் உதவுகின்றன, எந்தவிதக் கைம்மாறும் கருதாது! குழந்தைகளுக்குச் சொல்லுங்கள் பசுவானது, மனிதனுக்குச் செய்யும் சேவை பற்றி!

இந்த மூன்றின் (மரம், ஆறு, பசு) உதவி கிடைக்காமற் போனால் - அவற்றின் சேவை இல்லை என்றால் - மனிதனின் வாழ்க்கை இடர் (துன்பம்) நிறைந்ததாக ஆகிவிடும். ஏவ்வளவு வெட்கக்கேடானது, மனிதன் தன்னலத்தோடு நடந்து கொள்வது! அவனுடைய வாழ்வே கூடப் படைப்பினுள் உள்ள ஏனையவற்றின் தன்னலமற்ற நடத்தையைச் சார்ந்துதான் உள்ளது. இப்படி இருக்கும்போதே மனிதன் தன்னலம் கொண்டு இருப்பது எவ்வளவு வெட்கக்கேடு?

53. ஆண்மையின் அடையாளம் மீசையா?

ஒரு நாள் பண்டிட் மதன் மோகன் மாளவியா அவர்கள், அவருடைய தொங்கிக் கொண்டிருக்கும் பெரிய மீசையினைச் சுத்தமாக மழித்துவிட்டார்கள். மீசை இல்லாத மழுமழுப்பான முகத்துடன் அவர் தன்னுடைய பழைய நண்பன் ஒருவனைப் பார்க்கச் சென்றார். அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நண்பனோ “ஐயா, இன்று ஏன் இந்த மாற்றம்?” என்று அவரைக் கேட்டான். அவர் கூறிய பதில் இதுதான்: நான் பிறரைக் கவர்ந்திழுக்கின்ற மீசையினை என்னுடைய பெருமிதங் காரணமாக, ‘நான் ஒரு மனிதன் - ஆண்பிள்ளை’ – என்று காட்டுவதற்காக வளர்த்தேன்: ஆனால், நான் உணர்ந்து கொண்டேன், என் போன்ற சக மனிதன் ஒருவனுடைய துன்பத்தைக்கூட என்னால் நீக்க முடியவில்லை என. எனவே இனிமேலும் (நான்) இத்தகையை மீசை வைத்திருப்பதில் பொருளே இல்லை என உணர்ந்தேன்” ஆண்பிள்ளைத்தனம் அல்லது ஆண்மையின் வெளிப்பாடு என்பது நம்மை நாமே சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொள்வதிலும், நம்மைப் போன்று வாழ்கின்ற மனிதர்களின் துன்பம் மற்றும் வறுமையைக் குறைப்பதிலும் தான் உள்ளது.


54. பயனில்லாதவை

கொள்னையில்லாத அரசியல்:

ஒழுக்கமில்லாத கல்வி:

மக்கட் பண்பில்லாத அறிவயல்:

நேர்மையில்லாத வாணிகம்:

ஆகியவை பயனில்லாதவை மட்டுமல்ல: மாறாக அவை ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. அறிவுத்திறனைக் காட்டிலும் ஒழுக்கமே பெரிதும் வேண்டப்படுவதாகும்.55. மணிக்கட்டில் ஒரு மந்திரம் - வாட்ச் WATCH

உங்கள் சொற்களில்
(WORDS)
கவனமாக இருங்கள்:

உங்கள் செயலில்
(ACTIONS)
கவனமாக இருங்கள்:

உங்கள் எண்ணத்தில்
(THOUGHTS)
கவனமாக இருங்கள்:

உங்கள் ஒழுக்கத்தில்
(CHARACTER)
கவனமாக இருங்கள்:

உங்கள் இதயத்தில்
(HEART)
கவனமாக இருங்கள்:

இதுவே இறைவனை அடையும் வழி!No comments: