உலகச் செய்திகள்

1. அமெரிக்காவில் பயங்கர சூறாவளியுடன் கூடிய மழை: 22 பேர் பலி
2. இளவரசர் வில்லியத்தின் திருமணம் யுடியுப் வழியாக நேரடி ஒளிபரப்பு!

அமெரிக்காவில் பயங்கர சூறாவளியுடன் கூடிய மழை: 22 பேர் பலி

அமெரிக்காவில் தென் பகுதியில் உள்ள கரோலினாவில் உள்ள கடலில் பயங்கர புயல் கிளம்பியது. பின்னர் அது வலுவடைந்து வாஷிங்டன் நகரை தாக்கியது.

கடுமையான சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. பலத்த காற்று வீசியதால் வீடுகளின் கூரைகள் பறந்தன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. ரோடுகளில் மரங்கள் சாய்ந்தன.


மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. கடும் சூறைக்காற்று வீசியதால் ரோடுகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாஷிங்டனை தொடர்ந்து விர்ஜினீயா, மேரிலேண்டு மாகாணத்தையும் புயல் கடுமையாக தாக்கியது. அலபாமா, ஆர்கன்சாஸ், ஒகலாமா, மிஸ்சிசிப்பி ஆகிய இடங்களில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புயல் மழையில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். இந்த புயல் மழை 3 நாட்கள் நீடித்தது. தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளது. எனவே மீட்பு பணி தொடங்கி உள்ளது.

நன்றி தமிழ்வின்

இளவரசர் வில்லியத்தின் திருமணம் யுடியுப் வழியாக நேரடி ஒளிபரப்பு!21ஆம் நூற்றாண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய திருமணமாக அமையவுள்ள இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோரின் திருமணம் யுடியுப் வழியாக நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வரலாற்றில் பெரும்பாலானவர்களால் பார்த்து மகிழக்கூடிய அல்லது பலருக்கு அந்த வாய்ப்பை வழங்கக்கூடிய ஒரு அரச குடும்ப நிகழ்வாக இந்தத் திருமணம் அமையப்போகின்றது.
திருமணத்துக்கான உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் திருமணம் பற்றிய நேரடித் தகவல்களும் ஒளிபரப்புக்களும் இடம்பெறவுள்ளன.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் படங்களைப் பகிர்ந்து கொள்ளும் flickr, twitter, மற்றும் பேஸ்புக் என்பன ஊடாக இந்தத் திருமண நிகழ்வுகள் வழங்கப்படவுள்ளன.


முதல் தடவையாக அரச குடும்பத் திருமணத்துக்காக ரோயல் அலைவரிசையும் உருவாக்கப்பட்டுள்ளது. www.youtube/theroyalchannel என்பதே இந்த அலைவரிசையாகும்.

சென்ட் ஜேம்ஸ் மாளிகையுடன் இணைந்து பல் ஊடக புளொக் சேவையையும் சேர்த்ததாக இது அமையவுள்ளது. திருமண ஊர்வலம் முதல் தம்பதியினரின் மேலதிகப் புகைப்படங்கள் வரை இதில் பார்வையிடலாம்.

மேலும் இந்த இணையத்தில் வைக்கப்பட்டுள்ள உத்தியோகப் பூர்வ திருமண ஏட்டில் பொது மக்கள் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கூட பதிவு செயயலாம்.

அதற்கேற்றவாறு பொது மக்கள் தமது விடியோ வாழ்த்துக்களையும் தரவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழ்.cnn

No comments: