மெல்பேர்ணில் சிலப்பதிகாரம் - சந்திரன்


மெல்பேர்ணில் புகழ் பூத்த நடனாலயா மாணவர்களின் வருடாந்த நடன நிகழ்வு கடந்த 26.02.11  ம்  திகதி  சனிக்கிழமை பேசன் (besan) மண்டபத்தில் நடைபெற்றது.

சரியாக 6.30 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் புஸ்பாங்சலியுடன் சிறுவர்களின் நடனம் ஆரம்பிக்கப்பட்டதும் என் போன்ற பெற்றோரின் மனம் படபடக்கத் தொடங்கியது





விநாயகர் கவித்துவமும் தேவி துதியும் நிறைவு கண்ட போது தான் சிறுவர்களின் நடனத்தில் ஊறித்திளைத்த மனம் லேசாகக் கனம் குறைந்து தெளிவாகிக் கொண்ட போது சிலப்பதிகாரத்தின் தொடக்கம் அறிவிக்கப்பட்டதும் அர்த்த நாரீஸ்வரர்; உருவம் பதித்த திரையில் இளம்குமரனின் கைவண்ணத்தில் ஒளிவேலைப்பாடு திரையில் அலை ஓட
சிலப்பதிகாரத்தின் உரைச்சித்திரம் ஒலி ஏறியது மிகவும் விளக்கமாகவும் துல்லியமாகவும் ரசிகருக்கு கொடுக்கப்பட்டது.


சிலப்பதிகாரத்தின் படலம் ஆரம்பமான போது மொழி விளங்காத மக்களுக்கும் அழகிய நாட்டிய நடனம் மூலம் கதை சொல்லும் பாங்கில் மனம் திளைத்தது.

பூம்பகார் பட்டினத்தின் மகாநாயக்கர் மகளான கண்ணகியை எழுத்து வடிவமாக கற்பனையில் ஓடவிட்ட நாம் ஒரு உயிரோட்டமான பாத்திரத்தை கண்முன்னே பார்த்த போது கண்ணகி இப்படி தான் இருந்திருப்பாளோ என்ற கேள்விக்கு “ம்” இருக்கலாம் என்று மனதே விடை பகன்றது. கோவலனைக் கண்டதும் ஒரு பிரமிப்பில் மனம் கிறங்கி கண்களை கைகள் கசக்கியது. கோவலனாக வந்த ஆடலோன் சாச்சாத் நடிகர் அஜித்தின் அழகை விடவும் ஒரு பக்கப் பார்;வையில் அதையும் மிஞ்சியதாய் அசல் நாயகன் கோவலனாகவே அபிநய அழகாடலுடன் நடிப்பில் சிகரம் தொடுவதாய் மனதைக் கொள்ளை கொண்டான்.


மாதவியின் அரங்கேற்றல் படலத்தை அரங்கம் கண்டபோது குறிப்பு எடுக்க வேண்டிய நானும் மாதவியின் நடனத்தில் சொக்கி நின்றேன்.

நடனம் மிகவும் நுணுக்கமாக நட்டுவாங்கத்துக்கும் தாள நய பாவ நடன சுருதிக்கும் எந்த பிசகும் இல்லாமல் தெளிந்த பாத்திரத்தின் நடன வீச்சு பார்ப்போர் மனதை கொள்ளை கொண்டதனால் மாதவி எனபவள் இப்படி இருப்பாளாக இருந்தால் எந்த ஆடவன் தான் மண் கவ்வமாட்டான் என்று ஒரு ரசிகன் முணு முணுத்ததை கேட்கமுடிந்தது.

மீனா இளங்குமரன் ஒரு வெற்றி பெற்ற ஆசிரியர் தான் என்பதை பறைசாற்றியது அந்த ரசிகனின் முணு முணுப்பு.

என்னைக் கவர்ந்த பாத்திரங்கள் நிறையவே இருந்தாலும் பொற்கொல்லனாக வந்த அந்த குறும்புக்கார இளைஞனின் நளின நடிப்பாற்றல் மனதில் குருவி எச்சையாக ஒட்டிக் கொண்டது என்பதையும் இது வளர்ந்து மரமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனபதும் கண்கூடு

சரி ஒட்டு மொத்தமாக மீனா இளங்குமரன் அவர்கள் தனது நடனாலயா நடனப்பள்ளியின் வருடாந்த நடன நிகழ்வில் பல நாட்டிய நாடகங்களை அரங்கேற்றி  வருகிறார் இந்த முறை அரங்கேற்றிய தமிழ் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை தனது சிறந்த நடன நட்டுவாங்கத்திலும் நாடக நெறியாள்கையிலும் இதிகாசக் கதைகளையும் இலகுவாகவும் தெளிவாகவும் சொல்ல முடியும் என்பதை நிலை நிறுத்திக் கொண்டார்.

சிலப்பதிகாரம் நாட்டிய நிகழ்வு இனிதே நிறைவு பெற்று விட்டது மண்டபத்தின்; ஒளி விளக்குகளும் ஏற்றப்பட்டு விட்டது மக்கள் இருக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை ஏன்;!

கண்ணகியின் கவலையோடு மனம் ஒன்றிப் போனார்களா? அல்லது எரிகிறதே மதுரை என்று ஏங்கிப்போனார்களா? அப்படி என்றால் நானும் கூடவே இருந்தேனே..

No comments: