துஷாரா கண்விழிப்பு : சந்தேக நபரை கண்டுபிடிக்க 50,000 யூரோ


.
துஷாரா கண்விழிப்பு : சந்தேக நபரை கண்டுபிடிக்க 50,000 யூரோ: லண்டன் காவற்துறை அறிவிப்பு
thuvarkaலண்டனில், நேற்று இடம்பெற்ற இரு  வன்முறைக்குழுக்களின் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், அகப்பட்டுக்கொண்ட ஐந்து வயது இலங்கை  தமிழ் சிறுமியான துஷாரா, ஆபத்தான  ஆபத்தான நிலையை தாண்டி, கண் விழித்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு இலண்டணின் Ilford நகரில் வசிக்கும் துஷாரா, தனது மாமாவை சந்தித்து பிறந்த நாள் பரிசு கொடுக்க சென்ற தனது உறவினரொருவருடன் சென்ற போது Stockwell நகரில் வைத்து, இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு இலக்கானார். அவருடைய மார்பு பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது. அழைத்துச்சென்ற 35 வயதான தமிழரான சீலன் என்பவரும் இதில் படுகாயமடைந்திருந்தார்.


இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துஷாரா ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாகவும், Chemically Induced Coma நிலையில் இருப்பதாகவும், தற்போது அவர் கண் விழித்துவிட்டதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

14-17 வயதுக்குட்பட்ட இளைஞர் குழுக்களே இத்துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இத்துப்பாக்கிச்சூட்டினை நடத்தியவரை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ள குற்றப்புலனாய்வு துறையினர், தகவல் கொடுப்பவருக்கு 50,000யூரோ வழங்குவதற்கும் முன்வந்துள்ளனர்.

பிரிட்டனில், துப்பாக்கிச்சூட்டு வன்முறையில் அகப்பட்டுக்கொண்ட, மிக வயது குறைந்த பெண்ணாக துஷாரா காணப்படுகிறார். இவருடைய மூன்றுவயது சகோதரியும், மற்றுமொரு 12 வயது சகோதரனும், அவர்களுடைய தாயர் ஷார்மிலாவும் இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மயிரிழையில் தப்பினர்.

இரண்டு கறுப்பின இளைஞர்களை சைக்கிளில் துரத்தி வந்த, 3 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினரே இத்துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும், தப்பியோட முயற்stockwell-1சித்த அவர்கள் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இத்தாக்குதல்களில் துஷாரா அகப்பட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதான சந்தேக நபர் மறைமுகமாகிவிட்ட போதும், அந்நபரால் குறிவைக்கப்பட்ட இளைஞர்கள், காவற்துறையினரிடம் சரணடைந்து தமது  வாக்குமூலங்களை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிகச்சிறிய கைத்துப்பாக்கி மூலமே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆர்க் லேன் பிரதேசத்தில் 50 ற்கு மேற்பட்ட கோஷ்ட்டிக்குழுக்கள் இவ்வாறு வன்முறைப்போக்கில் திரிவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில், ஒரு குற்றமும் செய்யாத ஐந்து வயது சிறுமி இலக்காகிய சம்பவம், பிரிட்டன் காவற்துறையினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட குழுவினரை முற்றாக கைப்பற்றும் முயர்சியில் அவர்கள் இறங்கியுள்ளதுடன், சிறப்பு படையினரின் உதவியையும் நாடியுள்ளனர். சிசிடிவி கமெராக்கள் மூலம், அக்குழுக்களின் நடமாட்டம் தொடர்பிலும் அவதானித்து வருகின்றனர்.


மிகத்துடிப்பாண பெண்ணான துஷாரா, விரைவில் குனமடைந்து,பெற்றோருடன் இணைந்துகொள்வார் என நம்புவதாக துஷாரா கல்வி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கேய்ல் ப்ரேன்னன் தெரிவித்துள்ளார்.
- தமிழ்மீடியா -

No comments: