நாட்டுப்பற்றாளர் நினைவுநாள்

.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் நிகழ்வு மெல்பேர்ண், ஸ்கோஸ்பி சென் யுட்ஸ் தேவாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் கடந்த ஆண்டைப்போன்று இந்த ஆண்டும் தமிழ்த்திறன் போட்டிகளும் நடைபெறவுள்ளன. தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படவிருக்கும் இத்தமிழ் திறன் போட்டி பற்றிய முழுமையான விபரங்கள் கீழே  தரப்பட்டுள்ளது. உரிய முறையில் இதற்கு உங்களாலால் முடிந்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

போட்டியில் பங்குபற்றக்கூடிய இளையோருக்கும், தமிழ் பாடசாலை இணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் ஏனைய செயற்பாட்டாளர்களுக்கும் போட்டிகள் பற்றிய இவ்விபரங்களை கொடுத்துதவி, பங்குபற்ற ஊக்கப்படுத்துங்கள்.

மெல்பேண் நாட்டுப்பற்றாளர்கள் நினைவுதின தமிழ்த்திறன் போட்டிகள் பற்றிய அறிவித்தல்

நாட்டுப்பற்றாளர்கள் நினைவு நாளை முன்னிட்டு மெல்பேணிலும் கடந்த ஆண்டைப் போன்று தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன.கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியிலும் மிகவும் சிறப்பான முறையில் இவ்வாண்டுக்கான பொதுஅறிவுப்போட்டி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மெல்பேணில் பேச்சு போட்டிகளும், பொது அறிவுப்போட்டிகளும் நடைபெறவுள்ளன. இளையவர்களுக்காக நடைபெறவுள்ள இப்போட்டிகளில், பேச்சுப்போட்டிகள், பொது அறிவு போட்டிகள் ஆகியன நடைபெறவுள்ளன.

தமிழ்த்திறன் போட்டிகள்

இளையவர்களின் தமிழ் மொழித்தேர்ச்சியையும் தமிழ் மொழியிலான பொதுஅறிவையும் ஊக்குவித்து வளர்க்கும் நோக்கோடு தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன.

1. பேச்சுக்குத் தெரிவுசெய்யப்படும் விடயங்கள்.

- அவுஸ்திரேலியாவில் தமிழர்களின் பங்களிப்புகள்

- அவுஸ்திரேலிய வரலாறு

- தாயக மக்களுக்கான புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புகள்

- எனது எதிர்காலம்

2. பேச்சுக்கள் 3 - 5 நிமிடங்களுக்குள் நிறைவு செய்யப்படுவதாக இருக்கவேண்டும்.

3. பேச்சாளர் தான் தெரிவுசெய்த தலைப்பில் பொதுவான விளக்கத்தைக் கொண்டவராக இருக்கவேண்டும். பேச்சாளர் உரிய விளக்கத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான வினாக்கள் கேட்கப்படலாம்.

பொதுஅறிவுப் போட்டி

இப்போட்டியானது குழு ரீதியான போட்டியாகும். குழுக்களாக இப் போட்டியில் பங்குபற்றலாம். தமிழ்ப்பாடசாலைகளிலிருந்தும் குழுக்களாகப் பங்குகொள்ளலாம் அல்லது தனியாகவும் குழுக்களை உருவாக்கியும் பங்குகொள்ளலாம்.

ஆரம்ப மதிப்பீடு செய்யப்பட்டு முன்னனியில் உள்ள 3 குழுக்கள் தெரிவு செய்யப்படும். இவ்வாறு எழுத்துப் பரீட்சையில் தெரிவு செய்யப்படும் கூடிய புள்ளிகளைப் பெற்ற மூன்று குழுக்களுக் கிடையில் இறுதிப்போட்டி நடைபெறும். இறுதிப்போட்டிகள் ஏப்ரல் மாதம் 17ம் திகதி மெல்பேண் நாட்டுப் பற்றாளர் நினைவு நிகழ்வில் மேடை நிகழ்வாக நடத்தப்படும்.

மேலதிக விபரங்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களை நேரடியாகவோ அல்லது கீழ்வரும் தொலேபேசி இலக்கங்களில் தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்பு – 0404 354 811 / 0414 185 348 / 0420 686 030

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

No comments: