சிட்னி முருகன் கோவிலில் நாதஸ்வர இசைக் கச்சேரி
.
.
சிட்னி முருகன்  கோவிலில் கல்வி கலாச்சார மண்டபத்தில் மார்ச் மாதம் 26 ம் திகதி சனிக்கிழமை நாதஸ்வர இசைக் கச்சேரி நடைபெற்றது. முருகன் கோவில் திருவிழாவிற்கு ஈழத்தில் இருந்து வருகை தந்திருந்த வாத்திய இசைக் கலைஞர்களின் பிரத்தியேக கச்சேரியாக இது அமைந்திருந்தது.

படப்பிடிப்பு : ஞானி


இந்தக் கச்சேரியில் நாதஸ்வர இசைக்கலைஞர்களான திரு . எஸ் .சிதம்பரநாதன் . திரு . P  .நாகேந்திரம் . தவில் கலைஞர்களான தட்சணாமூர்த்தி உதயசங்கர் , T .சிவபாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு  இனிமையான இசை வெள்ளத்தை பரவ விட்டு மக்களை ஆனந்தப்படுத்தினார்கள். ராகங்களோடு பாடல்களும் சேர்ந்து நல்லதொரு 
 நிகழ்ச்சியாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சி .  No comments: