பவளவிழாக் காணும் பேராசிரியர் கலாநிதி பொ. பூலோகசிங்கம்

.
.
பவளவிழாக் காணும் பேராசிரியர் கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்கள் பல்லாண்டு வாழ தமிழ்முரசுஅவுஸ்ரேலியா வாழ்த்துகிறது .
ஆசிரியர்குழு 
  
கொழும்புகளனிபேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களிலே விரிவுரையாளராகப் பணியாற்றி தமிழ்த் துறைக்கு அரிய பல பங்களிப்பினைவழங்கித் தற்போது அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரில் வாழும்பேராசிரியர் கலாநிதி பொபூலோகசிங்கம்அவரால் உருவாக்கப்பட்டமாணவர்களாலும் தமிழ்க்கல்விமான்கள் முதலானோராலும் இலகுவில்மறக்கப்பட முடியாத பெருமைக்குயவராகக் காணப்படுகின்றார்.பவளவிழாக்காலத்தின் போதான இந்நன்னாளில் அவர் குடும்ப சேமத்துடன்பல்லாண்டு வாழ வாழ்த்தும் பேற்றைப் பெற்றுள்ளோம்.
இலங்கைஅவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் வாழும் உரிமை பெற்றபேராசியர் பூலோகசிங்கம் அவர்கள் உலகம் வாழ் தமிழ் அறிஞர்களாலும்நன்கு அறியப்பட்டவர்இவர் 1936ஆம் ஆண்டு சித்திரை முதலாந்திகதிவவுனியாவைச் சேர்ந்த பொன்னையா உடையார் சோதி ரத்தினம்தம்பதியருக்கு நான்காவது புத்திர ராக செட்டிகுளத்தில் பிறந்தார்ஆரம்பக்கல்வியை செட்டிகுளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை யாழ்சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும் கற்று சித்திபெற்றுஅங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று அங்கே1961ஆம் ஆண்டு தமிழில் முதலாம் வகுப்புச் சித்தியினைப் பெற்றார்.பேராசிரியர்களான விசெல்வ நாயகம்சதாசிவம்தனஞ்சயராசசிங்கம்சுவித்தியானந்தன் ஆகியோரின் மாணவர். 1963 தொடக்கம் 1965வரை பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெயர் பெற்றதிராவிட மொழியியலறிஞர் பேராசியர் தோமஸ் பரோவின் கீழ் மொழியியல்ஆராய்ச்சி மேற் கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றவர்.
 1965ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்திலே விரிவுரையாளராகச்சேர்ந்து தமது பணியை ஆற்றத்தொடங்கினார்இறுதியாக 1997 ஆம் ஆண்டுபேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து இணைப் பேராசியர் பதவியைவிட்டு விலகி அவுஸ்திரேலியா சென்றார்.
 இவர் தமிழிலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருயற்சிகள்ஈழம் தந்த நாவலர்,நாவலர் பண்பாடுPoet Thambimuthu – a profileசிலப்பதிகார யாத்திரை போன்றநூல்களின் ஆசிரியர்இந்துக்கலைக்களஞ்சியம் பகுதி 1 (1990) செய்தவர்.சதாசிவம்பிள்ளையின் பாவலர் சத்திரதீபகம் பகுதி 1, பகுதி 2 ஆகியவற்றைஅரிய ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் பதிப்பித்தவர்.கொழும்புத்தமிழ்ச்சங்கம் இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டதுநூல்கள் தவிர பல்வேறு மலர்கள்சஞ் சிகைகளிலே நூற்றுக்கு மேற்பட்டகட்டுரைகளை எழுதியுள்ளார்இவை தமிழ் இலக்கியம்ஈழத்துத் தமிழ்இலக்கிய வரலாறுசமயம்இலக்கணம் என்பன சார்ந்தவை.உலாப்பிரபந்தவளர்ச்சிபண் டைத் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் நெறி,தத்தை விடுதூதுபதினெட்டாம் நூற்றாண்டு வரையான ஈழத்துத் தமிழ்இலக்கியம்பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சிஈழத்துப்புராணங்கள்வன்னி நாட்டின் வரலாறுகோணேசர் கல்வெட்டு,முருகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சியும்தமிழ் இலக்கண விசாரம் என்பனகுறிப்பிடத்தக்க சில கட்டுரைகளாகும்இவை மிக விரிவான தேடலுடன்கூடிய ஆய்வு நோக்கங்கொண்ட கனதியான கட்டுரைகள்.
ஆறுகநாவலர் மீது மிகுந்த மதிப்புடைய பேராசியர்நாவலர் தொடர்பானதமது எழுத்துக்கள் மூலம் ஆறுமுகநாவலர் பணி கள் தொடர்பான ஆய்வுகள்பல வெளிவரத் தூண்டுகோலாகத் திகழ்ந்தவர்ஈழத்துத் தமிழிலக்கியவரலாற்று முயற்சியில் பேராசிரியரின் பங்களிப்பு முதன்மை வாய்ந்ததாகப்பேசப்படுகிறதுஈழத்து இலக்கிய வரலாறு தொடர்பாக இவரால் பல்வேறுசந்தர்ப்பங்களிலே எழுதப்பட்டவை தொகுத்து நோக்கப்படும்போதுதான்இவரின் ஆளுமை தமிழுலகிற்கு நன்கு தெரியவரும்.
 தற்போது அவுஸ்திரேலிய மருத்துவமனையொன்றிலே சிகிச்சைபெற்றுவரும் கலாநிதி பொபூலோகசிங்கம் இலங்கை வந்துபணியாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லைஇவர் விரைவில்நலம் பெற்றுவீடுவந்து பல்லாண்டு ஆரோக்கிய மாக வாழ்ந்துஅருந்தமிழ்ப்பணியாற்ற இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.
 நன்றி: வீரகேசரி
முருகேசு கௌரிகாந்தன் 
விரிவுரையாளர் 
கோப்பாய் ஆசிரிய கலாசாலை 

2 comments:

திருநந்தகுமார் said...

பேராசிரியர் பூலோகசிங்கம் சிட்னியில் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சற்றே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என அறிந்தேன்.
அவரின் பெருமையை நாம் சரிவர புரியவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு தமிழ் அறிஞரை சிட்னி சமூகம் உரியமுறையில் கௌரவித்து பயன்பெறவில்லை. அவரிடம் இருந்த அறிவுச்சுரங்கத்தை பகிர்ந்துகொள்ள இந்தச் சிங்காரச் சிட்னியில் யாருக்கும் நேரம் இருக்கவில்லை. எமது விழாக்கள் வைபவங்கள் எல்லாமே ஒரு குறித்த நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே நடைபெறவேண்டும் என்ற ஒரு எழுதாத விதியை வைத்திருக்கிறோம். இசையும், நடனமும் பொலிந்த அளவு இயல்துறை பொலியவில்லை.
பேராசிரியரின் பவளவிழாச் செய்தியை வீரகேசரியில் இருந்து மறுபிரசுரம் செய்த தமிழ் முரசுக்கு நன்றிகள் பல. அவர் உடல்நலத்தோடு வாழவும், மக்கள் பயனுறவும் இறைவனை வேண்டுகிறேன்.

kirrukan said...

[quote]திருநந்தகுமார் said...
இந்தச் சிங்காரச் சிட்னியில் யாருக்கும் நேரம் இருக்கவில்லை. எமது விழாக்கள் வைபவங்கள் எல்லாமே ஒரு குறித்த நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே நடைபெறவேண்டும் என்ற ஒரு எழுதாத விதியை வைத்திருக்கிறோம். இசையும், நடனமும் பொலிந்த அளவு இயல்துறை பொலியவில்லை. [/quote]

சிங்கார சிட்னிவாழ் எமக்கு நேரம் உண்டு ஆனால் நோக்கம் இல்லை...போலிவூட் பொலிந்த அளவுக்கு இயல் துறை பொலியவில்ல