மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
36. விழிப்பாக இருக்க

குழந்தைகள் தன்னலமற்ற அன்பு கொண்டவர்கள்! அவர்கள் கள்ளங்கபட மற்ற பார்வையாளர்கள். தங்களைவிட வயதில் மூத்தவர்களின் செயல்களை உற்று நோக்குகின்றார்கள். மேலும் அவர்கள், பள்ளிக்குச் சென்று பாடம் கற்பதற்கு முன்னர் வீட்டிலிருந்துதான் பாடங்களைக் கற்றுக் கொள்கின்றனர். எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் தாங்கள் நடக்கின்ற நடத்தையில் மிகமிக விழிப்பாக இருக்க வேண்டும்.
37. கஞ்சப் பேர்வழியின் கதை
ஒரு காலத்தில் அங்கே ஒரு கஞ்சப் பேர்வழி இருந்தான்: அவன் மழைவந்தால் ஒழுகின்ற ஒரு கூரை வீட்டில் குடியிருந்தான். மழைக் காலத்தில் கூரை வழியாகத் தண்ணீர் அவன் வசிக்கும் வீட்டினுள் கொட்டியது:



 ஆனால் அவன் அதற்கு இடையேயும் அதன் உள்ளேயே வாழ்ந்து வந்தான். பக்கத்தில் இருப்போரெல்லாம் அவனைக் கண்டு ஏளனமாகச் சிரித்தனர்: மேலும், ‘இந்தக் கூரையை மழைநீர் உள்ளே வராத வண்ணம் வேய்ந்து விடு’ என்று எச்சரித்தனர். அவனோ, மழைக்காலத்தில் இவ்வாறு கூறினான். ‘மழையானது நிற்கட்டும், மழை பெய்து கொண்டிருக்கின்ற இக்காலத்தில் எவ்வாறு நான் கூரையை வேயமுடியும்?’ என்றான். மழையானது நின்று போனபின் அவன் கூறினான். ‘மழை பெய்தால், ஒட்டை வழியாக மழைநீர் உள்ளே வருமே என்று இப்பொழுதில் இருந்தே நான் ஏன் கவலைப் பட வேண்டும்: இப்பொழுதுதான் மழை நின்று போய்விட்டதே! மழைவரும் போது, வீட்டினுள் மழைநீர் ஒழுகுவதினால், துன்புறாதீர்கள்: அந்த மழையானது கட்டாயம் வந்தே தீரும்: எனவே, கூரையை இப்பொழுதே பழுதுபார்த்துச் சரிசெய்யுங்கள். அதனை இப்படிக் கூறலாம். நீங்கள் ஆன்மீகத் தொடக்கக் கல்வியுடனும், அதற்கான பாடநு}ல்களுடனும் உங்களை இப்பொழுதே அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள், அதாவது பயிற்சி செய்யுங்கள்! தொடக்கப் பாடங்களாகிய அமைதியாக (பேசாது) இருத்தல், வழிபாடு, இறைவனுடைய திருநாமத்தை ஓதுதல் (நாமஸ்மரணம்) ஆகியவற்றை உடனே தொடங்குங்கள். இவ்வாறு செய்வது என்பது ஆன்மீகப் புனிதப் பயணத்தைப் பொறுத்த அளவில் மிகச்சீக்கிரமே தொடங்குவது நன்று!
38. இளமையில் கற்க
விரைவில் தொடங்குங்கள்!  Start early
மெதுவாக ஓட்டுங்கள்! Drive slowly
பாதுகாப்பாய்ப் போய்ச்சேருங்கள் Reach safely

இதுதான் இறைவனை அடையும் வழி!

39. ஒரு சமயவாதி
மதம் என்பது நான்கில் மூன்று பங்கு (முக்கால் பங்கு) ஒழுக்கந்தான். நேர்மையாக நடப்பதில் இருந்தும், உயிர்களின் மேல் கருணை கொள்வதில் இருந்தும் தவறி, வெறுமனே சமயத்தின் புனிதச் சடங்குகளையும், விதிகளையும் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே எந்த ஒரு நபரும் தன்னைச் சமய ஈடுபாடு கொண்ட ‘ஒரு சமயவாதி’ என்று உரிமை கொண்டாட முடியாது: சமயத்தைப் பின்பற்றுபவன் என்று கூறமுடியாது!

40. சமயங்களின் தொடர்பு
எல்லாச் சமயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவே! அத்துடன் அவை போதிக்கும் கொள்கைகள், மற்றும் அவை கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள் ஆகியவற்றிற்கு ஒன்று மற்றொன்றுக்குக் கடன்பட்டவை. ‘வேதமதம்’ என்பதுதான் காலத்தால் முந்தையது: 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ‘புத்தமதம்’ அதன் மகன் ஆகும்: கிறித்துவ மதம் கீழ்த்திசைக் கோட்பாடுகளினால் பெரிதும் தாக்கம் பெற்றது: அது பேரன் ஆகும்! ‘இசுலாம்’ என்பது இறைத்ததூதர்களைப் பெற்றது: அதன் அடிப்படையில் கிறித்துவ மத இறைத் தூதாதர்களைக் கொண்டிருப்பது: அது கொள்ளுப்பேரன் ஆகும். இவை எல்லாமே தங்களின் அடிப்படை ஒழுக்கமாக ‘அன்பு’ என்பதையே கொண்டுள்ளன: மனத்தை நெறிப்படுத்தவும், இறைவனில் மனிதன் இரண்டறக் கலக்கவும், அன்பையே அடிப்படை ஒழுக்க நெறியாகக் கொண்டுள்ளன.

No comments: