பத்தாம் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர்இறுதிப் போட்டி உலகக் கிண்ணத் துடுப்பாட்டம் இந்தியா வெற்றி!


1ம் அரையிறுதிப் போட்டி இலங்கை - நியூசிலாந்து -
இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி

2ம் அரையிறுதிப் போட்டி இந்தியா –  பாகிஸ்தான்
                                                  இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

                                                இறுதிப் போட்டி  இந்தியா வெற்றி!இந்தியாவின் மும்பை நகரில் உள்ள வன்கடே மைதானத்தில் சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2011  ம் திகதி  இடம்பெற்ற உலக்கிண்ண துடுப்பாட்டப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா தங்கக் கிண்ணத்தை வெற்றி பெற்றது. உலகக் கிண்ணத்தை இந்தியா வெல்வது இது இரண்டாவது முறையாகும்.நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிறீலங்கா முதலில் துடுப்பாட சம்மதித்தது. முதலில் துடுப்பாட ஆரம்பித்த சிறீலங்கா அணி 50 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 274 ஓட்டங்களை எடுத்துள்ளது. இவற்றில் 12 ஓட்டங்கள் உதிரி ஓட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி 10 ஓவர்களிலும் சராசரியாக அதிக ஓட்டங்கள் பெறப்பட்டன.


 கடைசி 4 ஓவர்களிலும் ஆட்ட ஓட்ட வீதம் 14 ஆக இருந்தது. சிறீலங்கா சார்பில் ஆடிய மகிழ ஜெயவர்த்தனா 103 ஓட்டங்களைப் பெற்றார்.இந்தியாவின் சிறந்த தடுப்புமுறை சிறீலங்காவின் ஓட்ட எண்ணிக்கையை 30வது ஓவர் வரையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. எனினும் சிறீலங்கா இறுதி ஓவர்களில் துணிச்சலான ஆட்டமொன்றில் தன்னை ஈடுபடுத்தியது.


இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஆரம்பத்தில் பலத்த சரிவை சந்தித்தது. இரண்டாவது பந்திலேயே ஒரு ஓட்டம் கூட எடுக்காத நிலையில் தமது ஆரம்ப ஆட்டக்காரரான சேவாக் ஆட்டமிழந்தார் அதனைத் தொடர்ந்து 18 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்த நிலையில் சச்சின் டென்டுல்கார் ஆட்டமிழந்தார். எனினும் ஆட்டமத்தியில் இந்திய வீரர்கள் நிலைமையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிதானமான ஒரு துடுப்பாட்டத்தை வழங்கினர். 


இந்தியா சார்பில் ஆடிய கௌதம் 97 ஓட்டங்களை எடுத்தார். இந்திய அணியில் தலைவரான டோணி 76 பந்துகளிற்கு 91 ஓட்டங்களை எடுத்து இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.


இந்தியா சார்பில் ஜனாதிபதி பிரதீபா பட்டேலும் சிறீலங்கா சார்பில் அதன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் உட்பட பல அரசியல்வாதிகள் நடிகர்கள் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள இந்தப் போட்டிகளில் சுமார் நாற்பத்தையாயிரம் பேர் போட்டிகளை நேரடியாகக் கண்டு களிக்க ஆயிரம் மில்லியனிற்கு மேலான மக்கள் இந்தப் போட்டிகளை கண்டு களிக்கின்றர்.


2007ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியிலும் அவுஸ்திரேலியாவுடன் மோதி இரண்டாம் நிலையைப் பெற்ற சிறீலங்கா இந்த முறை உலகப் போட்டியிலும் இரண்டாம் இடத்தையே பெற்று ஒரு தரமான துடுப்பாட்டக் குழுவாக தன்னைக் காட்டியுள்ளது.
Sri Lanka innings (50 overs maximum)RMB4s6sSR
View dismissalWU Tharangac Sehwag b Khan230200010.00
View dismissalTM Dilshanb Harbhajan Singh3387493067.34
View dismissalKC Sangakkara*†c †Dhoni b Yuvraj Singh48102675071.64
DPMD Jayawardenenot out10315988130117.04
View dismissalTT Samaraweeralbw b Yuvraj Singh2153342061.76
View dismissalCK Kapugederac Raina b Khan1650020.00
View dismissalKMDN Kulasekararun out (†Dhoni)32413011106.66
NLTC Pereranot out2210931244.44
Extras(b 1, lb 3, w 6, nb 2)12
Total(6 wickets; 50 overs; 246 mins)274(5.48 runs per over)
Did not bat SL MalingaS RandivM Muralitharan
Fall of wickets1-17 (Tharanga, 6.1 ov)2-60 (Dilshan, 16.3 ov)3-122 (Sangakkara, 27.5 ov),4-179 (Samaraweera, 38.1 ov)5-182 (Kapugedera, 39.5 ov)6-248 (Kulasekara, 47.6 ov)
BowlingOMRWEcon
View wicketsZ Khan1036026.00(1w)
S Sreesanth805206.50(2nb)
MM Patel904104.55(1w)
View wicketHarbhajan Singh1005015.00(1w)
View wicketsYuvraj Singh1004924.90
SR Tendulkar201206.00(3w)
V Kohli10606.00
India innings (target: 275 runs from 50 overs)RMB4s6sSR
View dismissalV Sehwaglbw b Malinga022000.00
View dismissalSR Tendulkarc †Sangakkara b Malinga18211420128.57
View dismissalG Gambhirb Perera971871229079.50
View dismissalV Kohlic & b Dilshan3569494071.42
MS Dhoni*†not out911287982115.18
Yuvraj Singhnot out2139242087.50
Extras(b 1, lb 6, w 8)15
Total(4 wickets; 48.2 overs; 230 mins)277(5.73 runs per over)
Did not bat SK RainaHarbhajan SinghZ KhanMM PatelS Sreesanth
Fall of wickets1-0 (Sehwag, 0.2 ov)2-31 (Tendulkar, 6.1 ov)3-114 (Kohli, 21.4 ov)4-223 (Gambhir, 41.2 ov)
BowlingOMRWEcon
View wicketsSL Malinga904224.66(2w)
KMDN Kulasekara8.206407.68
View wicketNLTC Perera905516.11(2w)
S Randiv904304.77
View wicketTM Dilshan502715.40(1w)
M Muralitharan803904.87(1w)
Match details
Toss Sri Lanka, who chose to bat
Series India won the 2010/11 ICC Cricket World Cup
Player of the match MS Dhoni (India)
Player of the series Yuvraj Singh (India)
Umpires Aleem Dar (Pakistan) and SJA Taufel (Australia)
TV umpire IJ Gould (England)
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire SJ Davis (Australia)


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான அரையிறுதி போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் பகல்இரவு ஆட்டமாக நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் குப்டில் 39 ஓட்டங்களையும், டெய்லர் 36 ஓட்டங்களையும், ஸ்டைரிஸ் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க, மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், முரளிதரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

218 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தரங்க 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மறுமுனையில் இருந்த டில்சான் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 73 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.


தொடர்ந்து களமிறங்கிய சங்கக்கார 54 ஓட்டங்களையும், ஜயவர்தன ஒரு ஓட்டத்துடனும், சாமர சில்வா 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் 32.4 ஓவர்களுக்கு 160 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை 169 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து போட்டியின் நிலையை மாற்றியது.

எனினும் தொடர்ந்து களமிறங்கிய மெத்தியூசின் சிறப்பான துடுப்பாட்டத்தால் இலங்கை அணி 47.5 ஓவர்களில் 220 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. களத்தில் மெத்தியூஸ் 14 ஓட்டங்களையும் சரவீர 23 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றனர்.


பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் 29 ஓட்டங்களால் வென்றதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் விக்கெட்டுக்காக வீரேந்தர் ஷேவாக்கும் சச்சின் டெண்டுல்கரும் 48 ஓட்டங்களைப் பெற்றனர். ஷேவாக் 25 பந்துகளில் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


அதன்பின் சச்சின் டெண்டுல்கரும் கௌதம் காம்பீரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களைப் பெற்றனர்.

காம்பீர் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாட வந்து வீரட் கோலி (9) யுவராஜ் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தழந்தனர்.

டெண்டுல்கர் 85 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் டோனி 25 ஓட்டங்களுடன் வெளியேறிய பின்னர் ஹர்பஜன் சிங் 12 ஓட்டங்களடனும் ஸஹீர்கான் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 33 ஓடட்ங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் வஹாப் ரியாஸ் 46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் சயீட் அஜ்மல் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முஹமட் ஹாபிஸ் 43 ஓட்டங்களைப் பெற்றார்.


கம்ரன் அக்மல் 19 ஓட்டங்களுடனும் அஸாத் ஷபீக் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

26 ஆவது ஓவரில் அனுபவமிக்க வீரரான யூனிஸ்கான் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போது பாகிஸ்தான் அணி 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

உமர் அக்மல் 24 பந்துகளில் 2 சிக்ஸர் உட்பட 29 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். மற்றொரு சிரேஷ்ட வீரரான அப்துல் ரஸாக் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

42 ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அணித்தலைவர் அவ்ரிடி 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அத்துடன் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு முற்றாக மறைந்தது.

கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஒரு விக்கெட் கைவசமிருந்தது. ஆனால் அவ்வணி ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற்றது. ஸஹீர்கான் வீசிய அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் வீரட் கோலியிடம் பிடிகொடுத்து மிஸ்ப உல் ஹக் ஆட்டமிழந்தார்.

இந்திய பந்துவீச்சாளர்களில் ஸஹீர்கான், ஆஷிஸ் நெஹ்ரா, யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், முனாவ் பட்டேல்ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியா, இலங்கை ஆகிய இரு அணிகளும் 3 ஆவது தடவையாக உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன. இந்தியா 1983 ஆம் ஆண்டிலும் இலங்கை 1996 ஆம் ஆண்டிலும் சம்பியனாகியிருந்தன.


No comments: