அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 6 - 1 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியது.

.
புதிய அணித்தலைவருடன் தொடரின் 7 ஆவது போட்டியையும் தன்வசப்படுத்திய அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் டுக்கு இங்கிலாந்துக்கு பதில் கூறும் வகை யில் ஒருநாள் தொடரை 6        1 என கைப்பற்றி மீண்டும் தன்பலத்தினை நிரூபித்துள்ளது.

இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் 7 ஆவதும் இறுதியுமான கிரிக்கெட் போட்டி  பேர்த்தில் நடைபெற்றது. இதில்  தலைவரான கமெரன் வையிற்றுடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்ததாட களமிறங்கியது. அந்தவகையில் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி பெற்றுக் கொண்டது.பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 44 ஓவரில் சகல விக்கெட்டுக்க ளையும் இழந்து 222 ஓட்டங்களைப்பெற்று தோல்வியைத்தழுவிக்கொண்டது.

இதனையடுத்து 57 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி 6      1 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியது.

No comments: