துர்க்கா தேவி அறிவுத்திறன் போட்டி 2010 இற்கான பரிசளிப்பு


.
துர்க்கா தேவி தேவஸ்தான அறிவுத்திறன் போட்டி 2010 இற்கான பரிசளிப்பு விழா 11.02.2011 மாலை 7.30 மணிக்கு தேவஸ்தானத்தில் இடம் பெற்றது. திருவிழாக் காலம் என்றபடியால் பக்தர்கள் நிறைந்த மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. விசேட அழைபை;பின் பேரில்வருகை தந்திருந்த நியூசவுத்வேல்ஸ் மானில பாராளுமன்ற உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ பாபரா பெரி அவர்கள் விசேட உரையாற்றியதோடு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி குழந்தைகளை கௌரவித்தார். அறிவுப்போட்டி குழு உறுப்பினர் செ.பாஸ்கரனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் ஆலய தலைவர் திரு மகேந்திரன் அவர்கள் உரையாற்றினார்.


அதனைத் தொடர்ந்து கௌரவ அமைச்சர் பாபரா பெரி ஆசிரியர் திருமதி ஜெகநாதன் முன்னைநாள் நகரசபை உறுப்பினர் திரு பாலா பாலேந்திரா வைத்திய கலாநிதி பாரதி உயர்திரு சிவா பசுபதி ஆகியோர் பரிசில்களை வழங்கி கௌரவித்தார்கள்.


 பரிசளிப்புவிழா ஒழுங்குகளை அறிவுப் போட்டிக் குழு உறுப்பினர்களான திரு கு.கருணாசலதேவா திரு.செ.மகேஸ்வரன் திரு செ.பாஸ்கரன் திரு.சி..தியாகராஜா திருமதி.சாரதா அமிர்தலிங்கம் திருமதி.சி.நிஷ்கலா ஆகியோர் முன்நின்று மேற்கொண்டார்கள்.

 இந்த ஆண்டுக்கான அறிவுப் போட்டி 2011  மே மாதம் 1ம் திகதி இடம் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு விண்ணப்பப் பத்திரங்கள் வழங்கப்பட்டது. போட்டியில் பரிசு பெற்ற சிறுவர் சிறுமியரை கீழே உள்ள படங்களில் காணலாம


2 comments:

Anonymous said...

'திருவிழா காலம் என்றபடியால்' என்று போட்டிருக்கலாம். 'திருவிழா காலமானதால்' என்பது வேறு அர்த்தத்தில் வருவது மாதிரி இருக்கு. இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Tamilmurasuaustralia said...

தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி வாசகரே. திருத்தப்பட்டுள்ளது.