.
பிரிட்டனில் டெப்ற்போட் பகுதியிலுள்ள தொடர்மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த இரு பெண்கள் இலங்கைப் பிரஜைகள் என்று பிரிட்டிஷ் பொலிஸார் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
குணாளினி அழகரெட்ணம் (42 வயது), சந்திரõபதி தர்மலிங்கம் (59 வயது) ஆகிய இருவருமே இறந்திருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். இலங்கையிலிருந்து இவர்கள் இருவரும் பிரிட்டனுக்குச் சென்றிருந்தபோதே தீவிபத்தில் சிக்கியுள்ளனர்.
திங்கட்கிழமை இருவரது சடலங்களும் உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்பட்டது.
கிறீன்விச் சவச்சாலையில் கடந்த சனிக்கிழமை (05 / 02 / 2011 ) இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் தீயினால் ஏற்பட்ட மரணங்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெப்ற்போட், அபிஞ்சர் குரோவிலுள்ள மரீன்ரவரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தீவிபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மரீன்ரவரைச் சேர்ந்த சன்ட்ரா கிளார்க் (49 வயது) என்பவர் மீது குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பர் வெல்கிறீன் நீதிவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜர்செய்யப்பட்ட சன்ட்ரா விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் பெப்ரவரி 14 இல் வூல்விச் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.
நன்றி தினக்குரல்
No comments:
Post a Comment