மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
1. துய்மை

மாணவர்கள் ஒரு முக்கியமான பண்பினைப் பற்றி மிகமிகக் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் து}ய்மை! புறத்து}ய்மை, அகத்து}ய்மை. இவற்றில் எது ஒன்று இல்லாமற் போனாலும் அவர் எந்தவிதச் செயலுக்கும் பயன்படாது வீணாகிப் போவார்.

2. வித்யார்த்தி – விஷயார்த்தி

ஒரு ‘வித்யார்த்தி’ ஆகிய மாணவன் ‘விஷயார்த்தி’ ஆக ஆகிவிடக்கூடாது!. (வித்யார்த்தி – அறிவைத் தேடுபவன், விஷயார்த்தி – புலன் இன்பங்களைத் தேடுபவன்.)



3. உடம்பு – புலன் - மனம்

உடம்பினை அடக்கு (Bend)
புலன்களைச் சீர்படுத்து (Mend)
மனத்தினை இல்லாதாக்கு (End)

4. பொன்னான விதிகள் மூன்று

குறைவாகப் பேசுக

தேவையற்ற தொடர்புகளைத் தவிர்க்க

நிறையப் படிக்கவும்.

5. அதிகம் பேசலாமா?

நீங்கள் அதிகமாகப் பேசும் பழக்கம் உடையவரானால், அது உங்களின் மூன்று முக்கிய ஆக்கக் கூறுகளை வீணாக்கிவிடும். ஆவை 1) சக்தி (ஆற்றல்) 2) நினைவாற்றல் 3) மனஉரம். இவற்றோடு கூட அது முதுமையையும் மிக விரைவில் கொண்டு வந்து சேர்க்கும்.

தொடரும் ....

No comments: