இலங்கை பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க அரசு நடவடிக்கை

.
இலங்கை நாட்டில் என்றும் இல்லாதவாறு பெரும் பொருள் இழப்பையும், பயிர்களுக்கு அழிவையும் ஏற்படுத்திய பெரு வெள்ளம் இப்போது, மக்களின் வாழ்க்கையிலும் அதிக துன்பங்களை அனுபவிக்க வேண்டிய அவல நிலைக்கு அவர் களை தள்ளியுள்ளது.

அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சகல நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்ற போதிலும், காலநிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றமையால், அரசாங்கத்திற்கு கூட இந்த வெள்ள அனர் த்தத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடையலாம் என்று, காலநிலை அவதானிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.நாட்டில் சிறிதளவு மழை ஓய்ந்தவுடன், படிப்படியாக வெள்ள நீர் வடிய ஆரம்பிக்கும்போது, வங்காள விரிகுடாவில் ஏற்படும் இன் னுமொரு தாழமுக்கத்தினால், மீண்டும் நாட்டின் வட மத்திய, வட, கிழக்கு மாகாணங்களிலும், தென் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மழை கொட்ட ஆரம்பிப்பதையும், அதையடுத்து, வடிந்து செல்லும் வெள்ளநீர் மீண்டும் பெருக்கெடுப்பதையும் கடந்த சில நாட்களாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

காலநிலை இவ்விதம் கோரத்தாண்டவம் ஆடும்போது, எவ்வளவு தான் ஆளுமை திறனும், பொருளாதார வளங்களும் கைவசம் இருந்தாலும் கூட, அரசாங்கத்தினால் தான் விரும்பும் அளவு க்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் கஷ் டங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதை எவரும் மறுக்க முடியாது.

சில கிராமங்களும், சில பிரதேசங்களும் உயர்ந்து வரும் வெள்ள நீரினால் முற்றாக துண்டிக்கப்பட்டு விடுவதனால், அவற்றிற்கு வாகனங்களில் நிவாரணப் பொருட்களை எடுத்து செல்வதிலும், சிக்கல்கள் தோன்றியுள்ளன.

இத்தகைய அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தாலும், அரசாங்கம் பாதிக்கப்ப ட்ட மக்களை காப்பாற்றுவதற்காக, 15, 20 விமானப் படை ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி, துண்டிக்கப்பட்டிருக்கும் கிராமங்களுக்கும், பிரதேசங்களுக்கும் சென்று, அவர்களுக்கு உலர் உணவையும், சமைத்த உணவு பாசல்களையும், சுத்தமான குடிநீரையும் வழங்கி வருகின்றது.

அங்குள்ள சிறு பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்களையும், நோயாளிகளையும் ஹெலிகொப்டர்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் ஏற்றிச் செல் கின்றன. அரசாங்கம் இந்த நிவாரணப் பணிகளுக்காக திறை சேரியிலிருந்து பெருளவு பணத்தையும் பெற்றுக் கொடுத்துள் ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நேற்றுமுன் தினம் திங்களன்று இதற்கென 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கி யுள்ளார்.

மலையடிவாரத்திலும், மண்சரிவுகள் ஏற்படக் கூடிய ஆபத்தான பிரதேசங்களிலும் உள்ளவர்களை நிரந்தரமாக, பாதுகாப்பான பிர தேசங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு குடியிருப்ப தற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் இப் போது தீர்மானித்துள்ளது. அதுபோன்று, இனிமேல் மலையடி வாரங்களிலும், மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்துள்ள பிரதே சங்களிலுமுள்ள பிரதேசங்களில் புதிதாக வீடுகளை அமைப்பத ற்கு முற்றாக தடை விதிப்பது என்று தீர்மானித்துள்ளது.

மலைப் பிரதேசத்தில் மண்ணரிப்பையும், மண்சரிவுகளையும் தவிர் ப்பதற்காக, வேகமாக வளரக்கூடிய மரங்களை வளர்ப்பதிலும் இப்போது வன பரிபாலன அதிகாரிகளின் கவனம் திரும்பியுள் ளது. இத்தகைய நடவடிக்கைகளினால் எதிர்காலத்தில் மலைய கக்தில் ஏற்படக்கூடிய மண்சரிவு மற்றும் பாரிய கருங்கற் பாறைகள் இடம்பெயர்ந்து கீழே விழுவதை தவிர்த்து மக்களை பேராபத்துக்களிலிருந்து காப்பாற்ற முடியும்.

இந்த பாதுகாப்பான நிலைப்பாட்டை செயற்படுத்துவதற்காக, ஜனா திபதி அவர்கள் தமது அமைச்சர்களுக்கு உடனடியாக சுற்றா டலை பேணிப் பாதுகாப்பதற்கு ஏற்புடைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இறப்பர் மரங்கள் செழித்து வள ரும் காணிகளில் அவற்றை வெட்டி அகற்றிவிட்டு, அங்கு வீடு களை குறிப்பாக மாடமாளிகைகளையும், ஹோட்டல்களையும் நிர்மாணிப்பதை தடை செய்யவேண்டும் என்றும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் ஆசிய நாடுகளில் வாழும் மக்கள் உள்நாட்டிலோ அல்லது நாடு கடந்து புலம்பெயர்ந்து செல் வதற்கோ இனிமேல் தயாராக இருக்கவேண்டும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருப்பதை நாம் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

நன்றி தினகரன்
No comments: