.
ஒஸ்ரேலியாவில் இடம் பெற்ற மிகப் பெரிய கிறடிற் காட் மோசடியில் 20 பேர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்கள் என்றும் இதில் 19 பேர் இலங்கைத் தமிழர்கள் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக யாகூ நியூஸ் தெரிவித்திருக்கிறது. 6.5 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் இந்தக் கும்பலால் கையாடப்பட்டதாக குறிப்பிடுகின்றார் அசிஸ்டன் கொமிசனரான நிக் அன்ரிசிச்.
இந்த மோசடியில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் சிட்னியை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுக்கு இன்னும் பல மோசடிகளில் சம்பந்தம் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்ற வருடம் நியூசவுத் வேல்ஸ் மானிலத்தில் 50 மில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார் புலன் விசாரண அதிகாரியான சார்ஜன் கிறெக் பாக்கர்.
இவர்களால் சிட்னி தமிழர்களின் மானம் கப்பலேறுகின்றதென்று சிட்னியில் உள்ள தமிழர்கள் பலர் கோபத்தோடு தமிழ் முரசிடம் முறையிட்டார்கள். இப்படியானவர்களை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தலைகுனிவு என பலர் வேட்கபடுகின்றர்கள்.
6 comments:
ஏனய்யா அந்தக் கள்ளர்களின் பெயரைப்போடாமல் விட்டுள்ளீர்கள். போட்டிருந்தால் அவர்களைக்கண்டால் மக்கள் அவர்கள் மூஞ்சையில் காறித் துப்புவார்களே. இப்படியானவர்களை அரசாங்கம் உடனடியாக திருப்பி அனுப்பவேண்டும்.
கிறுக்கன் நீங்கள் பதிந்த கருத்து தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டது அதற்காக மனம் வருந்துகின்றோம் . முடிந்தால் மீண்டும் அதை பதிந்து விடுங்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஆசிரியர் குழு
[quote]முடிந்தால் மீண்டும் அதை பதிந்து விடுங்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும்.[/quote]
சும்மா கிறுக்கினா போச்சு
5000 சிட்னி டமிழரில் 17 கள்ளர் என்றால் ,உடனே சிட்னி டமிழரின் மானம் கப்பலேறுது என்று தலையங்கம் போடுவது அழகல்ல.....அப்படி பார்க்கபோனால் டமிழ்முரசின் மானமும் கப்பலேறுது என்றுதானே அர்த்தம்....
ஒவ்வோரு சமுகத்திலயும்,இனத்திலயும் கள்ளர் இருப்பார்கள் ,காடையர் இருப்பார்கள் அவர்கள் செய்யும் தவறுகளுக்காக அந்த இனத்தையே குற்றம் கூறுவது எப்படி நியாயமாகும்....
ரமேஸ் சொல்வது சரி நானும் ஆதரிக்கிறேன். முன்பு ஒஸ்ரேலியர்கள் வியட்நாம் காரர்கள் என்றால் களவு செய்வார்கள்இ கடத்துவார்கள் என்று அவர்கள்மேல் மதிப்பே இல்லாதிருந்தது. அவர்கள் எல்லோருமா செய்தார்கள்? அதேபோல் தமிழர்கள் என்றால் படித்தவர்கள் நன்றாக வேலை செய்பவர்கள். நேர்மையானவர்கள் என்ற பார்வை இருந்தது. இப்போது ஒரு சில காடையர்கள் செய்யும் செயலால் அனைத்து தமிழர்களுக்கும் பொதுவாகவே கூடாத பெயர் ஏற்படுகின்றது. yahoo 7 news பாருங்கள் ஒஸ்ரேலியர்கள் செய்திக்குப் பின்னால் பதிவு செய்திருப்பதை. இவர்கள் எல்லாம் தமிழினத்தின் கழிசடைகள் காறித்தான் துப்ப வேண்டும்.
எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை இரவிரவா அலசுற றேடியோக்காறர் ஏன் வாய மூடிக்கொண்டிருக்கினம் எண்டு விழங்க வில்லை.
[quote]எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை இரவிரவா அலசுற றேடியோக்காறர் ஏன் வாய மூடிக்கொண்டிருக்கினம் எண்டு விழங்க வில்லை[/quote]
சில நேரம் ரேடியோக்காரர் நினைச்சிருப்பினம் டமிழர்களுக்கு இடையில் ஏன் பிளவை ஏற்படுத்துவான் என்ற நல்லெண்ணமாக இருக்க கூடும்...
Post a Comment