தமிழ் சினிமா-தமன்னாவின் விலை ஒரு கோடி

.
*தமன்னாவின் விலை ஒரு கோடி!
*'காவலன்' ஆகியது 'காவல் காதல்'

*இந்தியாவின் முதல் விஞ்ஞானப்படம் எந்திரன் : ரஜனிகாந்த்


விஞ்ஞானத்தை தழுவிய பல படங்கள் இந்தியாவில் வெளிவந்திருந்தாலும் முழுக்க முழுக்க விஞ்ஞானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் முதல் படம் எந்திரன் ஒன்றே என உறுதியாகக் கூறுகிறேன் என்று, மும்பையில் நடைபெற்ற எந்திரன் (ரோபோ) பாடல்களின் வெளியீட்டு விழாவில் ரஜனி குறிப்பிட்டுள்ளார்.

மிகப் பிரம்மாண்டமான ரீதியில் எந்திரன் பாடல்களை ஹிந்தியில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமிர்தாப் பச்சன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பாடல்கள் வெளியீட்டு விழாவில் தொடர்ந்து பேசிய ரஜனி…

'அமிர்தாப் பச்சன் எனக்கு நல்ல நண்பர் மட்டுமல்ல, நல்ல குருவும்கூட. அவருடன் சேர்ந்து பல படங்களை ஹிந்தியில் பண்ணியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் சினிமாவின் நுட்பங்களை எனக்குச் சொல்லித்தந்த குரு அமிர்தாப் பச்சன்தான். என் வாழ்நாளில் சில முடிவுகளை எடுக்கும்போது ஆலோசனை கேட்கும் முதல் நபர் அமிர்தாப் பச்சன்தான்' என்று அமிர்தாப் பச்சன் பற்றி புகழ்ந்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்.

நிகழ்ச்சி நிறைவில் நிருபர்களிடம் பேசிய அமிர்தாப் பச்சன்… 'இந்த மண்ணின் உண்மையான மைந்தன் ரஜனிதான். ஒரு நாட்டின் குடிமகனுக்குரிய அத்தனை தன்மைகளும் ரஜனிக்கு இருக்கிறது. ரஜனி நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனம் படைத்த சிறந்த நண்பரும்கூட' என்று ரஜனியை புகழ்ந்து பேசினார்.

இந்நிகழ்வில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில் ‘எந்திரன் ஒரு தமிழ் படமோ ஹிந்திப்படமோ அல்ல. இது ஒரு இந்திய படம். இந்திய படைப்பாற்றலை உலகுக்கு பறைசாற்றும் படம்’ என்று பெருமையாக குறிப்பிட்டார்.

இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 160 கோடியில் உருவாகும் எந்திரன் திரைப்படம் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

=====================================================================



தமன்னாவின் விலை ஒரு கோடி!


உங்களிடம் ஒரு கோடி (இந்திய ரூபாய்) இருந்தால் நீங்களும் தமன்னாவினை வைத்து திரைப்படம் எடுக்கலாம். அடடா மழைடா அடைமழைடா… என்ற பாட்டு தமன்னாவுக்கு ரொம்பவே பொருந்துகின்றது. ஏனெனில் அவரது சம்பளம் அந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது.

''தயாரிப்பாளர்களின் நிலை அறிந்துதான் நான் சம்பளம் கேட்கிறேன். கதைக்கு தகுந்தபடி தாராளமாகவே நான் நடித்துக் கொடுக்கின்றேன். ஆகையினால் சம்பள விடயத்தில் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது'' என பிடிவாதம் பிடிக்கின்றார் தமன்னா. இதனால் தயாரிப்பாளர்கள், தமன்னாவின் பக்கமே திரும்பிப் பார்க்க பயப்படுகிறார்கள். ஆனாலும் முன்னணி கதாநாயகர்கள் தமன்னாதான் தங்களுக்கு ஜோடியாக வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்பதால், தயாரிப்பாளர்கள் செய்வதறியாது தமன்னாவுக்கு வாரி வழங்குகிறார்கள்.

ஏனைய நடிகைகள்போல் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்காவிட்டாலும் கைவசம் தரமான படங்களை வைத்திருப்பதால் தமன்னா யாருக்கும் மசிவதாக தெரியவில்லை. பாவம் தயாரிப்பாளர்கள்!

=====================================================================

'காவலன்' ஆகியது 'காவல் காதல்'

விஜய் - அஸினின் நடிப்பில் உருவாகும் படத்திற்கு மூன்றாவது முறையாக பெயர் மாறியுள்ளது. 'காவல்காரன்' என்றிருந்த பெயரிரை 'காவல்காதல்' என்று மாற்றினார்கள். அதன் பின்னர் இப்பொழுது 'காவலன்' என்று பெயரினை மாற்றியிருக்கிறார்கள்.

மலையாளத்தில் சித்திக் இயக்கிய 'பொடிகார்ட்' படத்தினை ரீமேக் பண்ணி, விஜய் பாணிக்கேற்றவாறு இயக்குகின்றார் சித்திக். பல பிரச்சினைகளைச் சந்தித்திருந்த விஜய் படத்தின் பெயர் மாற்றத்தினை இயக்குநர் சித்திக் உறுதிப்படுத்தியுள்ளார்.


========================================================================
நன்றி தமிழ் மிரர்


No comments: