மருத மடு திருத்தலத்தின் விழா

.

இன்று இலங்கையின் கத்தோலிக்க மக்கள் மருத மடு திருத்தலத்தின் விழாவை மிக மிக விமரிசையாக கொண்டாடினார்கள். ஐந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த இலங்கை கத்தோலிக்க விசுவாசம் ஆரம்பத்தில் வேருன்றிய காலத்தில் மாந்தை பகுதியில் ஆரம்பித்த இவ் மரியாளின் வணக்கம் மருத மடுவில் வேதகலாபனை காரணமாய் நிலைபெற்று இன்று இலங்கை வாழ் மக்கள் யாவருக்கும் இன, மத பேதம் இன்றி பரந்துள்ளதுள்ளது


இவ் திருத்தல ஆயத்த வழிபாடுகள் கடந்த நாட்களில் நடைபெற்று நேற்று இரவு நற்கருணை வழிபாடு நடைபெற்று, இன்று காலை கொழும்பு பேராயர் பேரருள்திரு மல்கம் ரஞ்சித் தலைமையில் யாழ்ப்பாண, மன்னார், அனுராதபுர, பதுளை ஆயர்களின் கூட்டினைவில் பெருமளவு குருக்கள், லட்சகணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் திருவிழா திருப்பலி நடைபெற்றது

தமிழ், சிங்கள மொழிகளில் திருப்பலி நடை பெற்றது முக்கிய ஆசிர்கள் லத்தின் மொழியில் வழங்கப்பட்டன.




நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த எராளமான தமிழ், சிங்கள கத்தோலிக்க, இந்து, பெளத்த மக்கள் இவ் வழிபாடுகளில் பங்குபற்றினர்

No comments: