பலராம் ஜயந்தி -ஹரே கிருஷ்ணா-

.
ஹரே கிருஷ்ணா! மீண்டும் இந்த வாரம் உங்களை சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி

வைஷ்ணவர்கள் முழு நிலவு சிரவண மாதத்தை பலராம ஜயந்தியாக கொண்டாடுவது வழக்கம். இவர் கிருஷ்ணருக்கு 8 நாள் முன் அவதரித்தார். அவர் அவதரித்த நாள் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியில் வருகிறது, அதனால் இந்த வாரம் அவரின் அவதார சிறப்பையும், கிருஷ்ண - பலராம லீலைகளை பற்றியும் காண்போம்.

பலராமன் கிருஷ்ண ரின் மூத்த சகோதரன் ஆவார். இவர் வசுததேவர்- தேவகியின் 8 வது மைந்தன் ஆவார். கம்ஸன் வசுததேவருக்கும் - தேவகிக்கும் பிறந்த 6 குழந்தைகளை கருணை இல்லாமல் கொன்று விடுகிறான். ஆனால் இந்த 7வது குழந்தை தேவகியின் கற்பத்தில் இருந்து ரோஹினியின் கற்பத்திர்க்கு அந்த பகவானின் லீலையால் வியக்கும் படி மற்றப்படுகிறது. அதனால் தான் அவருக்கு “சங்கர்ஷனா” என்று மற்றொரு பெயரும் உண்டு பிறந்த குழந்தைக்கு “ராம்” என்று பெயரிட நினைத்தனர். ஆனால் அந்த குழந்தையில் அபார பலத்தை கண்டு அவருக்கு ” பலராமன்” என்று பெயர் இட்டனர். இவரை “பலதேவா” ,” பலபத்ரா” என்றும் அழைப்பார்கள்.
பலராமரும் , கிருஷ்ணரும் சிறு வயதில் கோகுலதில் உள்ள பசுக்களை மற்ற இடை சிறுவர்களுடன் சேர்ந்து மேய்த்து வந்தனர். இவர்கள் இருவரும், மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக மாடு மேய்த்து, விளையாடியும் வந்தனர். பலராமன் தான் இளய சகோதர னான கண்ணனை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான்.

இவர்கள் இருவரும் சேர்ந்து பல ரசிக்க தக்க லீலைகளை புரிந்தனர். தினமும் காலையில் கோபிமாற்களின் இல்லங்களுக்கு சென்று, அவர்கள் பால் கறப்பதர்க்கு முன்னால் ,கட்டி வைத்திருக்கும் கன்றுகளை எல்லாம் அவிழ்த்து விடுவது, அவர்கள் இல்லாத போது சென்று வெண்ணை பானைகளை உடைத்து வெண்ணை திருடி உண்பது, அவர்கள் பின்னலை பின் நின்று இலுப்பது, இப்படி தீராத தொல்லைகளை கோப்பிகளுக்கு கொடுத்து வந்தனர். அவர்கள் இவர்களை பிடித்தால் அவர்களை மயக்கும் கள்ள சிரிப்பு புரிவது, அதில் மயங்கி அவர்களும் சிறுவர்களிடம் பொய்யாக கோவி த்துக் கொள்ள செய்வது என்று பல லீலைகளை புரிந்தனர்.

கண்ணனுக்கும், பலராமன், மற்ற இடை சிறுவர்களுக்கும் மல்யுத்தம் புரிவதில் ஒரு தனி சந்தோசம். சில சமயம், இவர்கள் சில சமயம் கிருஷ்ணன் ஒரு பக்கம் பலராமன் ஒரு பக்கம் என்று சேர்ந்து விளையாடுவது வழக்கம். அப்படி ஒரு நாள் விளையாடும் போது அரக்கன் “பிரலம்பசுராஜன்” தன்னை ஒரு இடை சிறுவனாக மாறி கொண்டு கண்ணனின் பக்கம் விளையாட்டில் சேர்கிறான். எல்லாம் அறிந்த ஆதி மூலமான கண்ணன் இதை அறிகிறார். அன்று பலராமனின் பக்கம் வெற்றி அடைய செய்கிறார், ஆகையால் அந்த போட்டியின் விதி முறை படி கண்ணன் பக்கம் உள்ள சிறுவர்கள் பலராமன் பக்கம் உள்ள சிறுவர்களை சுமக்க வேண்டும். இதன் படி சிறுவர்கள் சுமக்கின்றனர். பிரலம்பாசுரன் பலரமனை சுமந்துகொண்டு காட்டை நோக்கி வெகு தூரம் ஓடி விடுகிறான். பிறகு தன் சுய அசுர ரூபத்தை பலராமனுக்கு காட்டி கொல்ல முற்படும் போது, அதி பலசாலியான பலராமானின் கைகளால் குத்து பட்டு வாயில் இருந்து இரத்தம் வழிய கீழ் விழுகிறான். இதே போல் கம்ஸன் பல அரக்கர்களை அனுப்பி கிருஷ்ண - பலராமனை கொள்ள முயற்சி செய்தும், தோல்வி அடைகிறான். இத்தனை பார்க்கும் மற்ற இடை பிள்ளைகளுக்கு கிருஷ்ண- பலராமன் மேல் அபார ப்ரீதி , கிருஷ்ண - பலராமானின் லீலைகளை வீர தீர செயல்களையும் அவர்கள் குடும்பத்தினரிடம் கூறியும் மகிழ்ந்தனர்.

பலராமனின் ஆயுதம் உழவர்கள் பயன் படுத்தும் ஹ்ல் (ப்லௌ ). இதனால் இவரை “ஹல்தாரி” என்றும் கூறுவர். பலராமனின் தெய்வீக துணைவியின் பெயர் "ரேவதி". பலராமருக்கு மிகவும் பிடித்தமானது தேன் அதனால் இன்றும் அவர் அவதரித்த நாளில் வருநி (பால் மற்றும் தேனால் செய்யப்பட்டது.) செய்து அவருக்கு அமுது செய்ய படுகிறது.

கிருஷ்ண - பலராம சம்பந்தம் தெய்வீகமானது. பாகவதம் முதல் அத்தியாயத்தில் கிருஷ்ண - பலராமன் இருவரும் அந்த பகவானின்(கிருஷ்ணன்) அவதாரமாக கூறப்பட்டுள்ளது. இன்றும் கிருஷ்ண - பலராமன் கோவில் விருந்தாவனத்தில் உள்ளது. .

பலராமர் மிகவும் கருணை வாய்ந்தவர். அவரை அவர் பிறந்த நாளின் போது நினைப்பது மிகவும் உன்னதமானது. அவரை சேவித்தால் நிலையான , உண்மையான பக்தியை கொடுக்கிறார். வாருங்கள் 180 பால்கன் ஸ்திரீட் கோவிலுக்கு (180, falcon ., North sydney temple). எல்லோரும் சேர்ந்து அவர் நாமம்களை வாயார பாடி மனதார மற்ற பக்தர்கள் துணையில் மகிழலாம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!

என்றும் அன்புடன்
ஆண்டாள் (ரம்யா)

No comments: