சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல்

International Tamil Writers Forum

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்


3B,46th Lane, Colombo-06,                 P.O.BOX 350,Craigieburn,Vic-3064
SRILANKA                                         AUSTRALIA
T.Ph: O11 2586013 (Srilanka)               T.Ph: 00 61 3 9308 1484 (Australia)
E.Mail:international.twfes@yahoo.com.au
21-08-2010

அன்புடையீர் வணக்கம்.
எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் அடுத்த ஆண்டு (2011) ஜனவரி மாதம் முற்பகுதியில் நான்கு நாட்கள் இலங்கையில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான விரிவான ஆலோசனைக்கூட்டம் கடந்த 03-01-2010 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், வானொலி தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள், பயிற்சிப்பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து சிறப்பித்து கருத்துக்களை பயனுள்ளமுறையில் பகிர்ந்துகொண்டனர்.

பின்னர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, ஹட்டன் ஆகிய பிரதேசங்களிலும் எழுத்தாளர் சந்திப்புகள் ஒழுங்குசெய்யப்பட்டு தகவல் அமர்வுகள் நடைபெற்றன.

இம்மகாநாடு தொடர்பாக எமது சக்திக்கு அப்பாற்பட்ட செலவுகளை நாம் சந்திக்கநேர்ந்துள்ளது. முழுமையாக படைப்பாளிகள், கலைஞர்கள் இலக்கிய ஆர்வலர்களின் நன்கொடைகளின் மூலமே நாம் இந்தப்பணியை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

இதற்காக கொழும்பில் நாம் வங்கிக்கணக்கும் ஆரம்பித்துள்ளோம். தங்கள் நன்கொடைகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படுவதுடன் மகாநாடு முடிந்து ஒரு மாதகாலத்துள் வரவு-செலவு அறிககை அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நிறுவனத்தின் மேற்பார்வையுடன் தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

நாம் எதிர்நோக்கும் செலவுகள்: மண்டப வாடகை, உணவு மற்றும் தங்குமிட வசதி, போக்குவரத்து, அச்சிடல் பணிகள்.

இலங்கையில் இலக்கிய ஆர்வம்மிக்க அன்பர்களின் ஆதரவையும் பெறவுள்ளோம். இந்தப்பாரிய பணிக்கு ஆதரவு வழங்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கியகுறிப்பு:- குறிப்பிட்ட வங்கிக்கு தாங்கள் நிதியுதவி அனுப்பும் பட்சத்தில் எமது மின்னஞ்சலுக்கும் அவசியம் தெரிவிக்கவும்
நன்றி
அன்புடன்
லெ.முருகபூபதி ( அமைப்பாளர்)

Bank Details:
Name: TAMIL WRITERS ASSOCIATION
Bank: HATTON NATIONAL BANK
Branch: WELLAWATTE, SRILANKA
SWIFT CODE: HBLKLILX
Branch No: 7083 009
A/C NO: 009010448539
----------------0000----------------

1 comment:

tamilmurasu said...

இதில் ஒருவர் பெயரில்லாது பதிந்திருந்த கருத்து ஆசிரியர்குழுவால் நீக்கப்பட்டுள்ளது.
வார்த்தைப்பிரயோகம் காரணமாகவே நீக்கப்பட்டது. கருத்தை முன்வைக்கும்போது வார்த்தைப் பிரயோகம் வாசகர்கள் வாசிக்க கூடிய முறையில் முன் வைத்தால் அவற்றை முரசு நீக்கமாட்டாது என்பதை மீண்டும் அறியத் தருகின்றோம்.

நன்றி
ஆசிரியர் குழு