வாழ்நாளில் தெரியும் இரண்டு சந்திரன்கள் -செ. பாஸ்கரன்

.
நம் வாழ்நாளில் இரண்டு சந்திரனை வானில் காணக்கூடிய சந்தர்ப்பம் எதிர் வரும் 27 ம் திகதி கிடைக்க உள்ளது. உலகமே இந்நாளுக்காக காத்திருக்கிறது. அதி தூரத்திற்கு அப்பால் இருக்கும் செவ்வாய் கிரகம் அன்றைய தினம் பூமிக்கு மிக அண்மையில் வருவதால் அதி பிரகாசமாகவும் அதி பெரிதாகவும் தெரியும் என எதிர் பார்க்க படுகிறது.



ஆகஸ்ட் மாதம் 27 ம் திகதி பூமியிலிருந்து  34 .65 மில்லியன் மைல்கள் தூரத்தில் வருவதாகவும் இதுவே மிக அண்மையான தூரம் எனவும் அன்று நடுநிசி 12 . 30  இற்கு கண்ணால் பார்க்க கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இருந்தாலும் இது பற்றி சிலர் கூறும்போது முன்பும் 2008 ல் இப்படி சொல்லப்பட்டதென்றும் ஆனால் அன்று பெரிய அளவில் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இரண்டு சந்திரன் போல் தெரிகிறதா அல்லது ஒன்று சிறிய பிரகாசமான நட்சத்திரம் போல் திரிகிறதா என்று.
அது மட்டுமல்ல அடுத்த தடவை இப்படி பார்க்க வேண்டுமானால் 2287 ம் ஆண்டுவரை பொறுத்திருக்க வேண்டுமாம்.277 வருடங்கள் மாத்திரம் தானே வாழ்ந்திருந்து பார்ப்போம் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. பார்க்க விரும்புபவர்கள் விழித்திருந்து பாருங்கள். பார்த்தால் எனக்கும் சொல்லுங்கள் நித்திரையால் எழும்பி பார்க்கிறேன்.

2 comments:

kirrukan said...

[quote]பிடிவாதம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. பார்க்க விரும்புபவர்கள் விழித்திருந்து பாருங்கள். பார்த்தால் எனக்கும் சொல்லுங்கள் நித்திரையால் எழும்பி பார்க்கிறேன். [/quote]


பார்த்தால் சொல்லுறன் இல்லாட்டி முரசில பின்னூட்டம் விடுகிறேன்...பிறகு பார்த்து போட்டு .கவிதை வடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்ககூடாது......
வானில் இரு சந்திரன்
வாழ்க்கையில் ஏன் கூடாது என்று கவிதை வடிக்க கூடாது...கி...கி

sena paskaran said...

quote "வானில் இரு சந்திரன்
வாழ்க்கையில் ஏன் கூடாது என்று கவிதை வடிக்க கூடாது...கி...கி"

கிறுக்கன் சார் சும்மா கிடந்த சங்க ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது போல நல்ல தலைப்பு எடுத்து தந்திருக்கிறியள். நான் நினைச்சே பாக்கேல்ல இப்பிடியும் எழுதலாம் எண்டு முயற்ச்சித்து பாக்கிறன். வேற ஒண்டுமில்ல இந்த தலைப்பில கவித எழுதுறதறதுக்கு கி...கி...

கருத்துக்கும் பதிவுக்கும் நன்றி கிறுக்கன்