அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயன்ற ஐவர் கைது

.

சட்டவிரோதமான முறை அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஐந்து பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரவில கடற்படை புலனாய்வு பிரிவினர் கைது செய்த பின்னர் நாட்டில் இடம்பெற்று வந்த பாரிய மனித கடத்தல் நடவடிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் அதுல சேனரத்ன தெரிவித்தார். கடற்படையினர் தீடீர் சோதனை மேற்கொண்ட போது மனித கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரும் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் அவுஸ்ரேலியாவுக்கு பலநாள் மீன்பிடிக்கும் இயந்திரத்தின் மூலம் செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments: