மரண அறிவித்தல்

.ஆசிரியை திருமதி.இரத்தினபூபதி தெய்வேந்திரம்பிள்ளை

 (இளைப்பாறிய ஆசிரியர் - மதவுவைத்தகுளம் அ.த.க பாடசாலை, நெடுங்கரைச்சேனை அ.த.க பாடசாலை வவுனியா, பெரியபுலம் மகாவித்தியாலயம், இளையதம்பி அ.த.க யாழ்ப்பாணம் )

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் (1ம் வட்டாரம்) , கொக்குவில் தலையாளி, டொரோன்டோ கனடா மற்றும் சிட்னி ஆஸ்திரேலியாவினை வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுநிலை ஆசிரியை தெய்வத்திருமதி.இரத்தினபூபதி தெய்வேந்திரம்பிள்ளை இன்று (24-08-2021, ஆவணித் திங்கள் தேய்பிறை இருமைப் பிறைநாளில்) சிட்னியில் சிவபதம் அடைந்தார்.
இவர் காலம்சென்ற செல்லத்துரை சின்னத்தங்கம் அவர்களின் அன்பு மகளும், காலம்சென்ற ஆசிரியர் சிதம்பரம்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களான சிவத்திரு.இந்திரகுமார் (பொறியியலாளர் - சிட்னி), சிவத்திரு.சிவகுமார் (பொறியியலாளர் - பிறிஸ்பேண்), சிவத்திரு.சிதம்பரகுமார்(பரன்) (வைத்தியர் - சிட்னி), சிவத்திரு.ஈஸ்வரகுமார் (மருத்துவப்பணியாளர் - சிட்னி) மற்றும் திருமதி.உதயராணி சிவபாலன் ( ஐக்கிய இராச்சியம் , இளைப்பாறிய ஆசிரியர்) (பழைய மாணவி - யாழ் இந்து மகளிர் கல்லூரி) , திருமதி.பிரேமகுமாரி மதியழகன் (ஐக்கிய இராச்சியம், இளைப்பாறிய ஆசிரியர்) (பழைய மாணவி - வேம்படி மகளிர் கல்லூரி) மற்றும் திருமதி.கலாராணி தேவராஜா (ஆய்வுகூட நிபுணர்) (பழைய மாணவி , வேம்படி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புத்தாயாரும் ஆவார்.
கொரோனா தீநுன்மிப் பரவலாலும் , தற்போதைய ஒன்றுகூடல் கட்டுப்பாடுகளாலும் சிவப்பேறு தொடர்பான சடங்குகள் குடும்பத்தினருடன் நடைபெற்று, அம்மாவின் உடல் தீயுடன் சங்கமமாகும். இணையவழி அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
அம்மாவின் உயிர் எல்லாம்வல்ல பரம்பொருளின் பாதங்களில் மீண்டும் பிறப்பில்லாத பேரின்பப் பெருவாழ்வு அடைய வேண்டுமென்று இறைவனை வழிபட்டு அவரை வழியனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இறுதிச் சடங்குகள் விபரம் கீழே உள்ளது .No comments: