மீண்டும் உயிர்த்தெழுந்து வருகிறான் சிரித்திரன்

.

மீண்டும் தொடங்கும் மிடுக்கு.

பீனிக்ஸ் பறவையாக மீண்டும் உயிர்த்தெழுந்து வருகிறான் சிரித்திரன்

1963ஆம் ஆண்டு உதயமாகி, சஞ்சிகை வானில் தனக்கென தனியிடம் பிடித்து சரித்திரம் படைத்தவன் சிரித்திரன்.

35 வருட வெற்றிப் பயணத்தில் சிரித்திரன் பண்ணையில் செதுக்கப்பட்ட எழுத்துலக சிற்பிகள் பலபேர். அவர்களின் ஆதரவுடன் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வளர்ச்சியத்தின் ( Centre for Creativity and Innovation ) அரிய முயற்சி சிரித்திரனின் மீள் வருகை.

"செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம் " என்ற சிரித்திரனின் தாரக மந்திரத்தோடு அதே சிரிப்போடும், சிறப்போடும் வெளிவந்து கொண்டிருக்கிறான் .


உலகத் தமிழ் உறவுகள் தம் கரம் நீட்டி சிரித்திரனை வரவேற்று, நீண்ட வெற்றிப் பயணத்திற்கு தங்கள் ஆதரவை நல்க வேண்டும்.


ஈழத்து, இந்திய மண்ணின் முதல் தமிழ் நகைச்சுவை சஞ்சிகை என முத்திரை பதித்த சிரித்திரன் உங்கள் இல்லங்களில் சிரிப்பையும் சிந்தனையையும் வாரி வழங்கட்டும்.

 .

https://www.facebook.com/watch/?v=414169193249640





No comments: