‘தளபதி 65’ படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் உலக அழகி

 Sunday, February 7, 2021 - 4:54pm

விஜய்யின் புதிய படத்துக்கு தற்காலிகமாக, ‘தளபதி-65’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

விஜய் நடித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த ‘மாஸ்டர்,’ அவருடைய 64-வது படம்.

இதையடுத்து அவர் நடிக்கும் 65-வது படத்தை நெல்சன் டைரக்டு செய்கிறார். இவர் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தை டைரக்டு செய்தவர்.

இந்தப் படத்துக்கு தற்காலிகமாக, ‘தளபதி-65’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், விஜய்க்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடிப்பார் என்று பேசப்படுகிறது. இவர், 2010-ம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில், மூன்றாவது இடத்தை பிடித்தவர். ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் நடித்து இருந்தார். சில வருட இடை வெளிக்குப்பின் மீண்டும் அவர் தமிழ் பட உலகுக்கு வருகிறார்.   நன்றி தினகரன்       

No comments: