ஈழத்தில் இருந்து வெளிவரும் "அறிந்திரன்" சிறுவர் சஞ்சிகை ஆசிரியர் திரு.கணபதி சர்வானந்தா பேட்டி

 


"ஒருசஞ்சிகையை ஒரு வடை விற்கும் விலைக்கும் குறைவாகத் தான் கொடுக்க வேண்டும் என்று சிரித்திரன் சிவஞானசுந்தரம் குறிப்பிடுவார் அது போலவே நான் இந்த அறிந்திரன் சஞ்சிகையை ஒரு ப்ளெயின் ரீ விலையான இருபது ரூபாவுக்கே கொடுத்து வருகிறேன். அதனால் தான் இந்தச் சஞ்சிகை சிறுவரிடையே அதிகம் போய்ச் சேருகின்றது. விருப்புடன் வாங்கி வாசிப்பதோடு தங்கள் ஆக்கங்களையும் எழுதி அனுப்புகிறார்கள்"

இப்படியான மகிழ்ச்சிகரமானதொரு மாற்றத்தைத் தன் இரண்டாவது இதழிலேயே விளைவித்த அறிந்திரன் சஞ்சிகை இப்போது இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் கிடைக்கிறது. வெண்பா புத்தகம் நிலையம் மூலம் இணையத்தில் வாங்க முடிகிறது.

இருபது ரூபா நூலுக்கு முப்பது ரூபா தபால் செலவைத் தானே பொறுப்பேற்று இந்தச் சஞ்சிகையைச் சிறுவர் உலகில் விதைக்கிறார் இதன் பதிப்பாசிரியர் சக இதழாசிரியர் திரு.கணபதி சர்வானந்தா.

அறிந்திரன் இரண்டாவது இதழ் தை 2021 இல் வெளியான போது அது முழுவதும் விற்றுத் தீர்ந்து இரண்டாவது பதிப்பும் போடப்பட்டது சாதனை.

ஈழத்துச் சிறார்களுக்கு நல்லதொரு அறிவூட்டம் கொடுக்க வேண்டும் என்று பேட்டியைத் தொடங்கிய போது அவர் கண் கலங்கி அழுததில் இருந்து இந்த முயற்சியின் நேர்மை துலங்கும்.

பேட்டியைத் தவறாமல் கேளுங்கள். அறிந்திரனுக்கு நாமும் கரம் கொடுப்போம்.




No comments: