வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்- எங்கே எங்கே உறவுகள் எங்கே? பேரணியில் தமிழராய் ஒன்றிணைந்து ஓங்கி ஒலிக்கும் குரல்கள்!


4/2/2021 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகரை சற்று முன்னர் அடைந்துள்ளது.2வது நாள் பேரணி இன்று காலை மட்டக்களப்பு தாளங்குடாவில் இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகர எல்லைக்குள் நுழைந்த போது பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது காத்தான்குடி நகரின் மத்திய பகுதியை பேரணி அடைந்துள்ளது.

இந்த பேரணியின் போது எங்கே எங்கே உறவுகள் எங்கே?, எரிக்காதே எரிக்காதே ஜனாஸாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐ.நா சபையே தலையிடு, வழக்கு வழங்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்கு போன்ற முழக்கங்களை தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக ஓங்கி ஒலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய பேரணியில் வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசிய கட்சிகளை சார்ந்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், எஸ்.சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 நன்றி  

No comments: