யாழ். இளைஞர்கள், பொதுமக்கள் சுதந்திர தின அணிவகுப்பில்

 Thursday, February 4, 2021 - 10:20pm

யாழ். இளைஞர்கள், பொதுமக்கள் சுதந்திர தின அணிவகுப்பில்-Jaffna Youths-Civilians-National Independence Day Parade

நாட்டின் 73ஆவது தேசிய சுதந்திர தினமான இன்று  (04), தேசியக் கொடியினை ஏந்திய வண்ணம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், யாழ்ப்பாண கோட்டையை சுற்றி வலம் வந்தனர்.

இந்த அணிவகுப்பு மரியாதையானது, நல்லிணக்கம்,சகவாழ்வு மற்றும் தேசிய ஒன்றுமை என்பவற்றை வலியுறுத்தும் வகையில் கொழும்பு சுதந்திர தின சதுக்கத்தின் இடம்பெற்ற நிகழ்விற்கு சமாந்தரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ். இளைஞர்கள், பொதுமக்கள் சுதந்திர தின அணிவகுப்பில்-Jaffna Youths-Civilians-National Independence Day Parade

யாழ்ப்பாணத்திலுள்ள சமாதான மற்றும் சமூக சேவையாளர் அருள் சித்தார்த்தன்  தலைமையில் யாழ். சமூக செயற்பாட்டு அமைப்புகளால் இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, யாழ் நூலகம் வரை இப்பேரணி இடம்பெற்றிருந்தது.

யாழ். இளைஞர்கள், பொதுமக்கள் சுதந்திர தின அணிவகுப்பில்-Jaffna Youths-Civilians-National Independence Day Parade

தேசியகொடி  மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு,மோட்டார் சைக்கிள்களில் இளைஞர், யுவதிகள், பாடசாலை மாணவர்கள் என பலர், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த பேரணியில் கலந்துகொண்டதுடன்,  நல்லிணக்கத்துக்கான தங்களது ஆதரவையும் வெளிப்படுத்தினர். 

ஒரே இன மக்களாக, ஒரு கொட்டியின் கீழ் ஒற்றுமையாகவும், ஒத்துழைப்புடனும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் தீவிரவாத கருத்துகளிலிருந்து விடுபட்ட நாளைய சமூகத்தின் தோற்றத்தை இந்நிகழ்வு பிரதிபலிக்கிறது.

யாழ். இளைஞர்கள், பொதுமக்கள் சுதந்திர தின அணிவகுப்பில்-Jaffna Youths-Civilians-National Independence Day Parade

No comments: