இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தியிருக்கும் சூழ்நிலையில், மலையகத்தில் இயங்கும் தன்னார்வத் தொண்டியக்கமான மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம், வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ஊரடங்கு வேளையில் வெளியே செல்லமுடியாத மக்களின் நலன்கருதி, ஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் இந்தப்பணிகளை முன்னெடுத்துவருகிறது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை நுவரேலியா மாவட்டத்தில் வர்த்தக அன்பர் ஒருவரின் அனுசரணையுடன் கிடைக்கப்பெற்ற உலர் உணவுப்பொதிகளை மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு. கே. அரியமுத்து அவர்களின் தலைமையில் அதன் உறுப்பினர்களும் தொண்டர்களும் சுமார் ஆயிரத்து ஐநூறு வறிய குடும்பத்தினருக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கினர்.
அண்மையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊடாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நுவரேலியா மாவட்ட மாணவர்கள் சிலருக்கும் அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவில் கல்வி வளர்ச்சிக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
No comments:
Post a Comment