நிலைபெறுமா றெண்ணிநிற்க
அலைபாயும் மனமதனை
அடக்குதற்கு துணிந்திடுவோம்
நிலையில்லா பொருளையெலாம
நினைப்பினின்று அகற்றிடுவோம்
நெஞ்சமதில் இறைநினைப்பை
நிரந்தரமாய் இருத்திடுவோம் !
ஏகாந்தம் இனிதென்று
எப்போதோ இயம்பியதை
வாழ்நாளில் கடைப்பிடிக்க
வாய்க்கும்நிலை வந்திருக்கு
தனித்திருப்போம் விழித்திருப்போம்
தலையிடிகள் ஓடிவிடும்
நாமெடுக்கும் எச்சரிக்கை
நாட்டையுமே காத்திடுமே !
சுத்தமே சோறிடும்
என்பதனை மனமிருத்தி
நித்தமுமே சுத்தமதை
நிரந்தரமாய் ஆக்கிடுவோம்
பயங்கொள்ளல் ஆகாது
எனச்சொன்ன பாரதியை
உளங்கொண்டு செயற்பட்டால்
கலங்கல்நிலை தெளிவாகும் !
மஞ்சளது முக்கியத்தை
மனமமிப்போ உணர்கிறது
வேப்பிலையின் மகத்துவமும்
விரிவடைந்து போகிறது
துளசியிலை நீர்பருகல்
தூய்மையெனத் தெரிகிறது
பழமையினை ஒதுக்கியது
பிழையெனவே புரிகிறது !
கைகழுவல் எனும்வார்த்தை
கருத்திருத்தல் அவசியமே
மெய்தொட்டு தீண்டுதலை
விலக்கிவிடல் அவசியமே
வீட்டைவிட்டு வெளியேறா
இருப்பதுவும் அவசியமே
நாட்டுநிலை தனையெண்ணி
நடப்பதுநம் அவசியமே !
No comments:
Post a Comment