அவுஸ்திரேலியாவில் ஒரே நாளில் அதி கூடிய கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்
நேற்று சனிக்கிழமை (28/03/2020) COVID-19 எனும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 450 புதிய நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். இதுவரை நாள் அடிப்படையில் அமைந்த எண்ணிக்கையில் நேற்றைய பதிவே அதிகமாக அமைந்திருக்கின்றது.
முந்திய நாளில் 6000 பேர் கொரோனா தொற்றுப் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட அதே வேளை நேற்று 12000 பேர் இந்தப் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிகிச்சை பயனளிக்காத கொரோனா தொற்று மரணங்கள் 14 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானோர் இதுவரை
மொத்த எண்ணிக்கை - 3,640
இறப்பு - 14
குணமானோர் - 242
மாநில வாரியான கணக்கெடுப்பு
NSW - 1,617
VIC - 685
QLD - 625
SA - 287
WA - 278
ACT - 71
TAS - 62
விக்டோரியா மாநிலத்தில் இந்த நோய்த் தோற்றுக்கு இலக்காவோர் எண்ணிக்கை வீதம் ஒப்பீட்டளவில் அதிகரித்து வருகிறது.
Myer, Cotton On, Country Road, David Jones ஆகிய வணிக நிறுவனங்கள் தற்காலிக மூடல் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
இதே வேளை தனிமைப்படுத்தல் காரணமாக வீடுகளில் முடங்கியிருப்போர் எதிர் நோக்கும் மன உளைச்சல், குடும்ப வன்முறை ஆகியவை உயர்வடையும் அபாயம் எழுந்துள்ளதால் மேலதிகமாக இவற்றிலிருந்து பாதுகாத்து மக்களை வழி நடத்தும் சேவைக்கு 1.1 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அவுஸ்திரேலியப் பிரதமர் அறிவித்துள்ளார்.
செய்தித் திரட்டு : கானா பிரபா 29/03/2020
|
அவுஸ்திரேலியாவில் ஒரே நாளில் அதி கூடிய கொரோனா வைரஸ் நோயாளிகள் NSW 'லேயே அதிகம் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment