இலங்கைச் செய்திகள்


இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!

தேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்

வடமாகாண ஊரடங்கின்போது பொதுமக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள்

மிருசுவில் 8 கொலை; தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சார்ஜன்டுக்கு பொதுமன்னிப்பு

கொரோனாவினால் முதல் இலங்கையர் மரணம்!
இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!-1st Sri Lankan Coronavirus Dead Registered-60 Year Old Dead at IDH

- கொரோனாவினால் மரணமான இரண்டாவது இலங்கையர்

- அடையாளம் 113; இன்று 7 பேர் அடையாளம்

இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 60 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
IDH இன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாரவிலவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த நபர், நீரிழிவு நோயாளி எனவும் அவருக்கு அதிக இரத்த அழுத்தமும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இன்று (28) இரவு 8.00 மணியளவில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 110 இலிருந்து 113 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையதினம் (28) மொத்தமாக இது வரை 07 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் மரணமடைந்தார்.
59 வயதான சதாசிவம் லோகநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த இவர், சுவிட்சர்லாந்தின் புனித கலன் (Saint Gallen) பகுதியில் வசித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.
பேர்லினில் உள்ள இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடையாளம் - 113

குணமடைவு - 09
கண்காணிப்பில் - 199
சிகிச்சையில் - 104
மரணம் - 01


குணமடைந்தவர்கள்
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை


மார்ச் 28 - 07 பேர் (113)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)


28.03.2020 (07 பேர்)
107-113


27.03.2020 (00 பேர்)
106


26.03.2020 (04 பேர்)
103 - 106


25.03.2020 (00 பேர்)
102


24.03.2020 (05 பேர்)
98 - 102


23.03.2020 (10 பேர்)
88 - 97


22.03.2020 (09 பேர்)
79 - 87


21.03.2020 (05 பேர்)
78. விபரம் அறிவிக்கப்படவில்லை
77. விபரம் அறிவிக்கப்படவில்லை
76. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்
75. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்
74. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்


20.03.2020 (13 பேர்)
61 - 73. விபரம் அறிவிக்கப்படவில்லை19.03.2020 (07 பேர்)


60. விபரம் அறிவிக்கப்படவில்லை
59. விபரம் அறிவிக்கப்படவில்லை
58. விபரம் அறிவிக்கப்படவில்லை
57. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்
56. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்
55. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மகள்
54. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மனைவி


18.03.2020 (11 பேர்)
43 - 53. விபரம் அறிவிக்கப்படவில்லை


17.03.2020 (13 பேர்)
42. விபரம் அறிவிக்கப்படவில்லை
41. விபரம் அறிவிக்கப்படவில்லை
40. விபரம் அறிவிக்கப்படவில்லை
39. விபரம் அறிவிக்கப்படவில்லை
38. விபரம் அறிவிக்கப்படவில்லை
37. விபரம் அறிவிக்கப்படவில்லை
36. விபரம் அறிவிக்கப்படவில்லை
35. கட்டாரிலிருந்து வந்த உடுகம்போல பிரதேசத்தைச் சேர்ந்தவர்: 25 வயது
34. மாராவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்
33. களனியைச் சேர்ந்தவர்
32. இங்கிலாந்திலிருந்து வந்தவர்
31. ஜேர்மனி சுற்றுப் பயணம் மேற்கொண்டவருடன் தொடர்புபட்டவர்
30. இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவி


16.03.2020 (10 பேர்)
29. இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர்
28. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
27. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
26. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
25. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
24. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்
23. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்
22. 37 வயது ஆண்
21. 50 வயது ஆண்
20. 13 வயது சிறுமி15.03.2020 (08 பேர்)


19. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
12. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்


14.03.2020 (05 பேர்)
11. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி
10. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்
9. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்
8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்


13.03.2020 (03 பேர்)
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்
4. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்


12.03.2020 (ஒருவர்)
3. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்


11.03.2020 (ஒருவர்)
2. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண் (குணமடைந்தார்)


27.01.2020 (ஒருவர்)
1. சீன பெண் ஒருவர் (குணமடைந்தார்)

நன்றி தினகரன் 
தேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்

கொரோனா வைரஸ் பரவும் நிலையில் நாட்டின் தேர்தல் குறித்து தற்போதைக்கு சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. மக்கள் வாழும் நாட்டில் தான் தேர்தல் நடத்த முடியும் எனவே தான் தேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானித்திருப்பதாக  தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பொதுத்தேர்தல் எப்போது நடத்த முடியும் என்பதை தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
பாரளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மறுஅறிவித்தல் வரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் தேர்தல் செயலகம் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தினகரனுக்கு அளித்த நேர்காணலின் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு கூறினார்.
பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வர்த்த மானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும் ஏப்ரல் 25ல் தேர்தலைநடத்த முடியாது என்ற அறிவித்தலையும் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளோம். நாட்டின் இன்றைய நிலை தேர்தலொன்றை நடத்தக்கூடியதாக காணப்படவில்லை.
கொரோனா என்ற கொடிய வைரஸ் நோய்க்கு எதிராக நாடு பெரும் போரொன்றுக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த கொடிய நோயிலிருந்து முற்று முழுதாக மீட்சியடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பே கிடையாது. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த நோயிலிருந்து விடுபட்டாலும் கூட உடனடியாக தேர்தலை நடத்த முடியாது.
ஏப்ரல் மாதம் 30ம் திகதி ஆனைக்குழுவின் முக்கிய கூட்டம் இடம் பெறவுள்ள அக் கூட்டத்தின் போது அரசாங்கத்துடனும், அரசியல் கட்சிகளுடனும், கலந்துயாடியதன் பின்னரே தேர்தல் குறித்து தீர்க்கமான முடிவுக்கு  வரக்கூடியதாக இருக்கும் ஏப்ரல் 30ம் திகதியன்றும் முக்கியமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எண்ணியுள்ளோம்.நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை உறுதி செய்ததன் பின்னர் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் 14 நாட்கள் கடந்ததன் பின்னரான ஒரு திகதியிலேயே தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும். அந்தக் காலப்பகுதியில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தத்தமது பிரசாரங்களுக்கு கால அவகாசம் பெற்றுக்கொடுட்கப்பட வேண்டும். இதற்கிடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. வாக்காளர் அட்டைகளை அச்சிடுதல், போன்ற பணிகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இதனிடையே வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டியுள்ளது. மாவட்டங்கள் மத்தியில் வாக்குச்சீட்டு மாறுபடுகின்றது. அது மட்டுமன்றி மிகக் கூடுதலான வேட்பாளர்கள் களமிறக்கப் பட்டுள்ளனர். அதற்கேற்ற அளவில் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டியுள்ளது. அத்துடன் தேர்தல் செலவுக்கான நிதியை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வளவு விடங்களையும் கவனத்தில் எடுக்கின்ற போது தேர்தலின் போது கடினமான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் ஆணைக்கழு தலைவர் விபரித்தார்.
இத்தகைய பேரிடர் காலத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது என்றாலும் தேர்தல் செயலங்களில் வழமையான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படடு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
எம். ஏ.எம் நிலாம் - நன்றி தினகரன் வடமாகாண ஊரடங்கின்போது பொதுமக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள்

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடை முறைகள் தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமகாண ஆளுநர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து வடமாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கு பற்றிய 26.03.2020 இல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடை முறைகள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள்,
பலசரக்கு பொருட்கள்
• உள்ளூர் பலசரக்கு கடைகள் பொது மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கபட்டுள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் வாகனங்களை பயன்படுத்தாது நடந்து சென்று தமக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது. இந்நோக்கத்திற்கான வாகன பயன்பாடு அனுமதிக்கப்படமாட்டாது.
• பலசரக்கு கடைகள்/அங்காடி விற்பனை நிலையங்கள் அவசியமான ஐந்து அல்லது ஆறு பொருட்களை 500 ரூபாய், 1000 ரூபாய் பெறுமதியான பொதிகளாக்கி வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யமுடியும்.
மரக்கறி வகைகள்    
தற்போது உள்ள சூழ்நிலையில் சந்தைகளை இயக்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு பின்வரும் ஒழுங்குகள் செய்யபட்டுள்ளன.
• மரக்கறி வியாபாரிகள் தாங்களாகவே உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து உள்ளூரில் விற்பனை செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளார், உள்ளூராட்சி சபைகள், கமநல சேவைகள் திணைக்களம், விவசாய திணைக்களம் என்பன இணைந்து பொருத்தமான நடைமுறைகளை ஏற்படுத்தல் வேண்டும்.
கடல் உணவுகள்
• ஊரடங்கு நேரத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கபட்டுள்ளது.  சந்தைகளில் மீன் விற்பது தடைசெய்யபட்டுள்ளது மாற்று ஒழுங்காக அவற்றை வியாபாரிகள் வீதிகளில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.
வெதுப்பகம் (பேக்கரி)
• ஊரடங்கு நேரத்தில் வெதுப்பகங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெதுப்பகங்களின் உற்பத்திகளை நடைமுறையில் உள்ள விநியோக முறைப்படி வாகனங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.
அரிசி ஆலை

• அரிசியின் சீரான விநியோகத்தை மேற்கொள்வதற்காக அரிசி ஆலைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.
• வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டதிற்கு அரிசி கொண்டு வருவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.
• வடமாகாணத்திற்கான அரிசி இருப்பை உறுதிபடுத்தும் பொருட்டு ஏனைய மாகாணங்களுக்கு அரிசி கொண்டு செல்வது தொடர்பாக உரிய மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

ஐஸ் தொழிற்சாலை
• மீன் பிடி தொழிலுக்கு தேவையான ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியளிக்கபட்டுள்ளது.
மருந்தகம்

• மருந்தகங்கள் ஊரடங்கு நேரத்தில் திறந்திருக்கும்
• வைத்திய மருத்துவ குறிப்பேடு மற்றும் கிளினிக் கொப்பிகளுடனும் சென்று மருந்துகளை பெற்றுகொள்ளலாம்.
• கிளினிக் கொப்பியுடன் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு செல்ல நோயாளர்களுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.

இவ்வொழுங்குகளை யாழ் மாவட்டத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்துவதுடன் ஏனைய மாவட்ட அரசாங்க அதிபர்கள் தங்கள் மாவட்ட பாதுகாப்புபடையினர் மற்றும் பொலிசாருடன் இணைந்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று நடைமுறை படுத்துமாறும் அரசாங்க சுற்றுநிரூபங்கள் மற்றும் தற்போதுள்ள விசேட நடைமுறைகளுக்கு அமைவாக இந் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.  நன்றி தினகரன் 

மிருசுவில் 8 கொலை; தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சார்ஜன்டுக்கு பொதுமன்னிப்பு

மிருசுவில் 8 கொலை; தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சார்ஜன்டுக்கு பொதுமன்னிப்பு-Presidential Pardon to Fmr Army Sergeant RM Sunil Rathnayake
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.  சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி மன்னிப்பில் விடுதலையாகியுள்ளார்.
அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தின் மிருசுவிலில் இடம்பெற்ற கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு, 13 ஆண்டு விசாரணைகளுக்கு பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த 2015 ஜூன் 25ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, வில்வராஜா பிரசாத், நடேசு ஜெயச்சந்திரன், கதிரன் ஞானச்சந்திரன், ஞானச்சந்திர சாந்தன் ஆகிய 8 பேரை கொலை செய்தமை உள்ளிட்ட 19 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மாஅதிபரால் கடந்த 2002 நவம்பர் 27ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றின் ட்ரையல் அட் பார் மன்றில் சார்ஜன்ட் ஆர்.எம். சுனில் ரத்நாயக்கவுக்கு குற்றப்பத்திரம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விசேட நீதிமன்றம் அவரை குற்றவாளியாக தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்தது.
பின்னர் குறித்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.
முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொது மன்னிப்பு பெற்று சிறையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.  நன்றி தினகரன் கொரோனாவினால் முதல் இலங்கையர் மரணம்!
கொரோனாவினால் முதல் இலங்கையர் மரணம்-1st Sri Lankan Died Dut to COVID19-Reported in Switzerland
புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயது நபர்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் மரணமடைந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றுள் அங்கு வசித்து வரும் 59 வயதான சதாசிவம் லோகநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்தவர் எனவும், சுவிட்சர்லாந்தின் புனித கலன் (Saint Gallen) பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேர்லினில் உள்ள இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் (25) இவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுவிஸ் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சுவிஸில் இது வரை சுமார் 11,712 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 192 பேர் அந்நாட்டில் மரணமடைந்துள்ளனர்.
ஆயினும் அங்கு 131 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 

No comments: