சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி


அண்மையில் கொன்றை அறக்கட்டளைகுமுதம்  வார இதழோடு இணைந்துசங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். முதல் பரிசாக ரூ 3 லட்சம்இரண்டாம் பரிசாக ரூ2 லட்சம்மூன்றாம் பரிசாக ரூ 1 லட்சம்இவை தவிர 15 சிறந்த கதைகளுக்குத் தலா ரூ 10 ஆயிரம் எனப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பரிசு மற்றும் போட்டியின் நோக்கம் சங்க இலக்கியத்தைத் திறமான எழுத்தாளர்கள் மூலம் சமகாலத் தமிழர்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான்
தமிழர்களின் மிகப்பெரிய சொத்து சங்க இலக்கியம். காதல்காமம்பிரிவுகொடைவறுமைபுலம் பெயர்தல் எனத் தமிழர் வாழ்வின் உணர்ச்சிகரமான அம்சங்களை மிகை உணர்ச்சியில்லாமல் நயமாக ஆழமாக எடுத்துரைப்பவை அவை.
அந்தப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, அந்த உணர்வுகள் சமகால வாழ்வில் பிரதிபலிப்பதுபோல் ஒரு சிறுகதை எழுதுங்களேன். உலகில் எந்தப் பகுதியில் வசிக்கும் எவரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்
 உங்களுக்கு உதவ 25 சிறந்த சங்கப்பாடல்களைஅவற்றின் விளக்கத்தோடு www.konrai.org/kumudam என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இந்தப் போட்டி குறித்த விவரங்களை உங்கள் இதழில் வெளியிட இயலுமா> . போட்டி விதிகளை இணைத்துள்ளேன்.
கதைகள் கிடைப்பதற்கான கடைசித் தேதி 31.3.2020









No comments: