இயக்கம்: கார்த்திக் நரேன்

சனிக்கிழமை இரவு சொகுசு ஹோட்டலில் எதிர்பாராவிதமாக நடக்கும் துப்பாக்கிச்சூட்டுடன் மாஃபியா படம் துவங்குகிறது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஆர்யன்(அருண் விஜய்) தலைமையில் ஒரு ஆபரேஷன் நடத்தி போதைப் பொருள் பயன்படுத்தும் சிலரை பிடிக்கிறார்கள். இந்நிலையில் ஆர்யனின் உயர் அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர் முகிலன் (தலைவாசல் விஜய்) ஆகியோர் திடீர் என்று இறந்து விடுகிறார்கள்.
திரைக்கதையில் தொய்வு இருப்பதால் மெதுவாக செல்கிறது. அருண் விஜய் போலீஸ் அதிகாரியாகவே வாழ்ந்துள்ளார். அருண் விஜய்யின் உதவியாளராக ப்ரியா பவானி சங்கர் தன் வேலையை உணர்ந்து செய்திருக்கிறார். டிரக் மாஃபியா தலைவராக பிரசன்னா மிரட்டுகிறார். பரத் ரெட்டி உள்ளிட்ட பிற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாயின் இசை படத்திற்கு பக்கபலம்.
அத்தியாயம்-1 என்று தலைப்பிலேயே இருப்பதால் படம் முடியும்போது அடுத்த அத்தியாயத்திற்கு வழிவிடுகிறது. கிளைமாக்ஸில் யாருமே எதிர்பார்க்காத டுவிஸ்ட்டால் அடுத்த அத்தியாயத்தை உடனே பார்க்கும் ஆவல் ஏற்படுகிறது. படத்தின் முதல் பாதியில் எதுவும் புதிதாக இல்லை. கதாபாத்திரங்களை விவரிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளார் நரேன். அதை பார்க்கும் போது இது படமா வெப் சீரிஸா என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஆக்ஷன் படங்களை விரும்புபவர்களுக்கு மாஃபியா நிச்சயம் பிடிக்கும்.
நன்றி சமயம்
No comments:
Post a Comment