.
சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி
தமிழர்களின் மிகப்பெரிய சொத்து
சங்க இலக்கியம். காதல், காமம், பிரிவு, கொடை, வறுமை, புலம் பெயர்தல்
எனத் தமிழர் வாழ்வின் உணர்ச்சிகரமான அம்சங்களை மிகை உணர்ச்சியில்லாமல் நயமாக ஆழமாக
எடுத்துரைப்பவை அவை.
அந்தப் பாடல்களை அடிப்படையாகக்
கொண்டு, அந்த உணர்வுகள் சமகால வாழ்வில்
பிரதிபலிப்பதுபோல் ஒரு சிறுகதை எழுதுங்களேன். உலகில் எந்தப் பகுதியில் வசிக்கும்
எவரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்
உங்களுக்கு உதவ 25 சிறந்த சங்கப்பாடல்களை, அவற்றின் விளக்கத்தோடு www.konrai.org/kumudam என்ற இணைய தளத்தில் கொடுத்துள்ளோம்
போட்டிக்கு வரும் கதைகளில்
சிறந்தவற்றைத் தமிழ்ச்சான்றோரைக் கொண்ட நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். அவை
குமுதத்தில் பிரசுரமாகும்.
சிறந்த
சிறுகதைக்கு முதல்பரிசாக
ரூ 3 லட்சம்
இரண்டாவது சிறந்த கதைக்கு
ரூ 2 லட்சம்
மூன்றாவது சிறந்த கதைக்கு
ரூ 1 லட்சம்
மேலும் 15
சிறுகதைகளுக்குத் தலா ரூ.10 ஆயிரம்
பரிசாகக்
காத்திருக்கின்றன
சிறுகதைகள் வந்துசேர வேண்டிய
கடைசித் தேதி: மார்ச் 31 2020
விதிகள்
1.கதைகள் ஏதேனும் ஒரு சங்க இலக்கியப் பாடலின் செய்தியை மையக்
கருத்தாகக் கொண்டு சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளாக இருக்க வேண்டும்.
சங்கப்பாடல்களை https://konrai.org/kumudam/ என்ற
இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
2.சிறுகதையோடு அது எந்தச் சங்க இலக்கியப் பாடலை மையக்
கருத்தாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டும்
3. சங்க இலக்கியப்பாடலின் விளக்கவுரையாக இருக்கக் கூடாது.
புனையப்பட்ட சிறுகதையாக இருக்க வேண்டும்
4.ஒருவர் எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
5.கதைகளுடன் ' கதைகள் எனது சொந்தக் கற்பனையில் உருவான புனைவுகளே.அவை
தழுவலோ, மொழி பெயர்ப்போ
பிறிதொன்றின் நகலோ அல்ல' என்ற உறுதிமொழி இணைக்கப்பட வேண்டும். கதைகள்
பிறரது எழுத்தை நகலெடுத்தோ, களவாடியோ, தழுவியோ எழுதப்பட்டிருந்தால் உரிய சட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
6.கதைகள் யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டு
மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும் . கதைகள் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரி. kumudamkonrai@gmail.com
7.சிறுகதை ஆசிரியரின் பெயர், முகவரி ஆகியவை
தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். அயல் நாட்டிலிருந்து பங்கேற்போர் தங்கள்
முகவரியை ஆங்கிலத்தில் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
8 பங்கேற்கும் படைப்பாளிகள் அவர்கள் அனுப்பும் படைப்பின் நகல்
ஒன்றை தங்கள் வசம் வைத்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில்
தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது..
9. கதைகள் 1000
வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.தேவை ஏற்படின்
பிரசுரமாகும் கதைகளைத் திருத்தவோ, சுருக்கவோ குமுதம் ஆசிரியர் குழுவிற்கு உரிமை உண்டு
10. எல்லா விஷயங்களிலும் குமுதம் ஆசிரியரின்
முடிவே இறுதியானது.
No comments:
Post a Comment