சான்றோனாய் தனயன் வந்தால்
தந்தைக்கு நற் பெருமை
தலைவனாய் பிள்ளை வந்தால்
தாய்க்கு நற் பெருமை
சான்றாண்மை யோடிருப்பின்
சகலருக்கும் பெருமை
சரித்திரத்திரத்தில் நிற்பதே
சாதிப்பார் பெருமை
தந்தைக்கு நற் பெருமை
தலைவனாய் பிள்ளை வந்தால்
தாய்க்கு நற் பெருமை
சான்றாண்மை யோடிருப்பின்
சகலருக்கும் பெருமை
சரித்திரத்திரத்தில் நிற்பதே
சாதிப்பார் பெருமை
ஓயாமல் உழைத்து நின்றால்
உழைப்புக்கே பெருமை
உலகுக்கு உதவிவிடின்
உயர்திடும்உன் பெருமை
வீழாமல் இருந்துவிடின்
வீரத்துக்கே பெருமை
வாழ்நாளை வளமாக்கு
வாழ்வுதரும் நல் பெருமை
உலகுக்கு உதவிவிடின்
உயர்திடும்உன் பெருமை
வீழாமல் இருந்துவிடின்
வீரத்துக்கே பெருமை
வாழ்நாளை வளமாக்கு
வாழ்வுதரும் நல் பெருமை
கோவில் சென்று வழிபட்டால்
குலத்திற்கு நற் பெருமை
குணமுள்ளார் அருகு இருப்பின்
குடும்பத்திற்கே நற் பெருமை
பீடுபெற்று வாழ வேண்டின்
பேணிவிடு நற் பெருமை
நாடுபோற்ற நிற்க வேண்டில்
தேடிவிடு நற் பெருமை
ஆறுகுளம் நீர் நிறைந்தால்
அரசனுக்கு நற் பெருமை
அங்கு வாழும் குடிகளுக்கு
அதுவே நற் பெருமை
கூறுபடா ஆட்சி வரின்
குலத்திற்கே நற் பெருமை
குணமுடைய அரசு வரின்
குன்றாதே நற்
பெருமை
No comments:
Post a Comment