தமிழ் சினிமா - ஹீரோ திரை விமர்சனம்


தமிழ் சினிமாவில் நடிக்க வந்த சில வருடங்களிலேயே உச்சத்திற்கு சென்ற ஹீரோ சிவகார்த்திகேயன். பல சூப்பர் ஹீரோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி முன்னேறிய இவரின் திரைப்பயணத்தில் பெரும் சறுக்களை சந்தித்து தற்போது நம்ம வீட்டு பிள்ளையில் மீண்டும் எழுந்துள்ளார், சூப்பர் ஹீரோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிய இவர் முதன் முறையாக ஒரு சூப்பர் ஹீரோவாகவே நடித்துள்ள படம் தான் ஹீரோ, இதிலும் இவர் வெற்றி பெற்றாரா? பார்ப்போம்.

கதைக்களம்

ஒவ்வொரு மாணவனும் தான் வாழ்க்கையில் டாக்டர் ஆகவேண்டும், வக்கீல் ஆகவேண்டும் என்று இருக்க, சிவகார்த்திகேயன் மட்டும் சக்திமான் போல் சூப்பர் ஹீரோவாக ஆக வேண்டும் என்று நினைக்கின்றார்.
இதனாலேயே இவரை உலகம் கொஞ்சம் விலக்கியே பார்க்க, சொந்த அப்பாவே நீ என் கண்முன் நிற்காதே என்று ஒரு கட்டத்தில் சொல்லும் நிலைக்கு வருகின்றார், அதனால், ப்ராடு செய்தால் போதும், நமக்கு தேவை பணம் மட்டும் தான் என்று முடிவெடுத்து போலி சான்றிதழ் அடித்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கின்றார் சிவகார்த்திகேயன்.
ஊரில் யாருக்கும் தெரியாத இடத்தில் அர்ஜுன் பெயில் ஆன மாணவர்களை திரட்டி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வர, அதில் ஒரு மாணவி இவானாவிற்கு ஏரோநாட்டிகல் படிக்கவேண்டும் என்று விருப்பம், அதை சிவகார்த்திகேயன் அர்ஜுனுக்கு தெரியாமல் நிறைவேற்ற, இவானா கண்டுப்பிடிப்பு வெளி உலகிற்கு தெரிகின்றது.
ஆனால், அந்த கண்டுப்பிடிப்பு வெளிவருவதன் மூலம் கார்ப்ரேட் கம்பெனிகள் பிஸினஸ் பாதிக்கும் என்பதால் வில்லன் அபி தியோல், இவானாவை குற்றம் செய்தவர் என நிரூபிக்க, இவானாவும் தற்கொலை செய்துக்கொள்கின்றார், அதன் பிறகு இவர்கள் யார், எதற்காக அர்ஜுன் இப்படி மறைந்து வாழ்கின்றார் என பல முடிச்சுக்கள் அவிழ, ஒரு வழியாக சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக மாறி என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சிவகார்த்திகேயன் கமர்ஷியல் படம் என்றாலே அல்வா சாப்பிடுவது போல், ஆனால், வேலைக்காரன் போல் ஒரு சமூதாய கருத்துக்கொண்ட கமர்ஷியல் படம் என்றால் அவருக்கு கத்தில் மேல் நடப்பது போல், அதிலும் பல ஹீரோக்கள் தயங்கும் சூப்பர் ஹீரோ கதைக்களத்தை கையில் எடுத்து, அதில் மெசெஜ் சொல்ல வேண்டும் என்றால், கத்தி மேல் நடப்பது இல்லை, படுத்து உருள்வது போல், அதையும் சிவகார்த்திகேயன் திறம்பட செய்துள்ளார் என்பதே சிறப்பு.
படத்திற்கு எப்போது ஹீரோ என்று டைட்டில் வைத்தார்கள் என்று தெரியவில்லை, படத்தில் சிவகார்த்திகேயன் தாண்டி அர்ஜுனும் ஹீரோ தான், சொல்லப்போனால், முதல்பாதியில் எல்லாம் சிவகார்த்திகேயனை மிஞ்சும் மாஸ் காட்சிகள் இவருக்கு உள்ளது, ஒரு மனிதனை அழித்தாலும், அவனுடைய ஐடியாலஜியை ஒரு போது அழிக்க முடியாது என்று அவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கின்றது.
கல்யாணிக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், டீசண்ட் அறிமுகம், உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் மாணவர்கள் பல கண்டுப்பிடிப்புக்களை கண்டுப்பிடிக்கின்றனர், ஆனால், உலகில் அதிக இளைஞர்கள் இருக்கும் இந்தியாவில் பெரிய அளவில் கண்டுப்பிடிப்பு இல்லை, அப்படியே ஏதும் கண்டுப்பிடித்தாலும், கார்ப்ரேட் பிஸினஸ் மைண்ட் அவர்களை எப்படி அழிக்கின்றது என்பதை காட்டிய விதம் அருமை.
அதிலும் இந்தியாவில் மட்டும் தான் தன் கனவுகளை பெற்றோர்களிடம் சொல்லவே பிள்ளைகள் அஞ்சுகிறார்கள், என்பது போன்ற வசனங்கள் கைத்தட்டல் பறக்கின்றது, அதே நேரத்தில் சூப்பர் ஹீரோ படம் என்றாலும், இரண்டாம் பாதியில் எல்லாம் லாஜிக் கிலோ என்ன விலை என்று தான் கேட்க வேண்டும்.
வேறு வழியில் ஒரு பாட்டில் சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்றாலும், அதற்குள் சூப்பர் ஹீரோவாக மாறுவது அண்ணாமலையில் ரஜினி ஒரே பாடலில் பணக்காரன் ஆவது போல் தான், அதை ஆரம்பத்திலிருந்தே அவர் ஏதும் செய்வ்து போல் காட்டியிருக்கலாம், குழந்தை பருவத்தை காட்டிவிட்டு அப்படியே சிவகார்த்திகேயன் வெறும் போலி சான்றிதழ் மட்டுமே அடிக்கின்றார் என்பது பிறகு உடனே சூப்பர் ஹீரோவாக மாறுவது மட்டும் கொஞ்சம் எல்லை மீறல்.
மேலும், படம் அட இது என்ன ஷங்கரின் ஜெண்டில் மேன் போலவே உள்ளது என்று நினைத்தால், அர்ஜுன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அவர் சொல்லும் ப்ளாஷ்பேக், இனி ஜெண்டில்மேன் தேவையில்லை, ஹீரோ வேண்டும் என அவரே சொல்வது, மித்ரன் சபாஷ் வாங்குகின்றார்.
படத்தின் மூன்று முக்கியமான ஹீரோக்கள், ஜார்ஜ் ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங், யுவனின் இசை, இத்தனை அழகாக காட்சிகள் படம்பிடித்ததற்கு ஜார்ஜுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம், அதேபோல் யுவன் பின்னணியில் மிரட்டியுள்ளார், அபிதியோலுக்கு வரும் பிஜிஎம் முதல் அர்ஜுன், சிவகார்த்திகேயன் என அனைவருக்கும் பட்டாசு கிளப்பியுள்ளார், பாடல் சுமார் ரகம் தான்.

க்ளாப்ஸ்

எடுத்துக்கொண்ட கதைக்களம், சொல்ல வந்த கருத்து, அதை கிளைமேக்ஸில் ஏவி மூலம் காட்டிய விதம் சூப்பர்.
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்தும் டாப்.
அர்ஜுன் கதாபாத்திரம் அழகாக வடிவமைத்தது, அவர் பேசும் வசனங்கள்.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதியில் கொஞ்சம் லாஜிக் கவனித்திருக்கலாம், இஷ்டத்திற்கு சில காட்சிகள் நீள்கின்றது.

மொத்தத்தில் தமிழ் சினிமாவின் முதல் வெற்றி பெறும் சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.  நன்றி CineUlagam.







No comments: