சிறு­பான்­மை­யின மக்­களின் மனங்­களை வெல்­ல­வேண்டும்


02/01/2020  புத்­தாண்டுப் பிறப்­புடன் மக்­களின்  மனங்­களில் ஏற்­பட்­டுள்ள   புத்­து­ணர்ச்­சி­யா­னது  புதி­ய­தொரு  தேசத்தை  கட்­டி­யெ­ழுப்பும்   ‘‘சுபீட்­சத்தின்  நோக்கு’’  செயற்­றிட்­டத்தை  இல­கு­ப­டுத்தும் என்­பது  எனது   உறு­தி­யான நம்­பிக்­கையும்  பிரார்த்­த­னை­யு­மாகும் என்று   ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ  தெரி­வித்­துள்ளார்.
புது­வ­ரு­டத்தை முன்­னிட்டு  அவர் விடுத்­துள்ள   வாழ்த்து செய்­தியில்   பொரு­ளா­தாரம்,  அர­சியல்,  சமூக, கலா­சாரம் மற்றும்  தொழில்­நுட்பம்   ஆகிய அனைத்து துறை­க­ளிலும் புதி­யதோர்  யுகம்  நமது தாய்­நாட்டில்   மல­ர­வேண்டும் என  சகல  இலங்­கை­யர்­களும்  எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற ஒரு தரு­ணத்­தி­லேயே   இந்தப் புத்­தாண்டு  பிறந்­தி­ருக்­கி­றது. அந்­த­வ­கையில்   மலர்ந்­துள்ள   இப்­புத்­தாண்டை  புதிய அர­சாங்கம்    ‘‘ சுபீட்­சத்தின் ஆண்­டாக’’ ஆக்கும்  திட உறு­திப்­பாடு   மற்றும்  அர்ப்­ப­ணிப்­பு­ட­னேயே  வர­வேற்­கின்­றது என்றும் ஜனா­தி­பதி  தனது வாழ்த்து செய்­தியில் கூறி­யி­ருக்­கின்றார்.
இத­னை­விட  நாட்டை நேசிக்கும் மக்­களின் ஐக்­கி­யத்­திற்கு கிடைத்த வெற்­றியே  இந்த புதிய  அர­சாங்­க­மாகும். மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு எதி­ரான எந்­த­வொரு சக்­திக்கும் இந்த நாட்டில்  நாம் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. அனைத்து மக்­களும்  ஒற்­று­மை­யா­கவும்  மகிழ்ச்­சி­யா­கவும்  வாழக்­கூ­டிய  சிறந்த சூழலை  நாட்டில் உரு­வாக்­கு­வதே   எமது நோக்­க­மாகும் என்றும் ஜனா­தி­பதி   கோத்­த­பாய ராஜ­பக் ஷ  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதே­போன்றே  பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷவும்  நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்­பாக ஏற்­பட்­டுள்ள  ஆர்­வத்­துடன்   செய­லாற்றும்   இளைஞர் சந்­த­தி­யி­னரும்   தாம் எதிர்­பார்க்கும்   சுபீட்­ச­மான தேச­மொன்றை கட்­டி­யெ­ழுப்பும் வரை   ஓய்ந்­து­வி­ட­மாட்­டார்கள்.   புது­வ­ரு­டத்தின் பிறப்­புடன் நாம்  21ஆம்  நூற்றாண்டின் மூன்­றா­வது தசாப்­தத்தில் காலடி எடுத்­து­வைக்­கின்றோம்.   மிகப்­பெ­ரிய  மக்கள் ஆணை­யுடன்  புதிய ஜனா­தி­பதி ஒருவர் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள  ஒரு பின்­பு­லத்­தி­லேயே இலங்கை இவ்­வாறு   புதிய  தசாப்­தத்தில் காலடி எடுத்து வைக்­கி­றது.  அத­னுடன் இணைந்து புதிய அமைச்­ச­ரவை நிறு­வப்­பட்டு  தற்­போது  அது தனது பணி­களை  ஆரம்­பித்­துள்­ளது.   இந்த ஆட்சி மாற்­றத்­துடன்  புதிய இலங்கை தொடர்­பான எதிர்­பார்ப்பு  எமது இளம் சந்­த­தி­யினர் மத்­தியில்   பர­விக்­கா­ணப்­ப­டு­கின்­றது என்று   தனது  புது­வ­ருட வாழ்த்து செய்­தியில் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பான்­மை­யின மக்­களின் பேரா­த­ரவைப் பெற்று  புதிய ஜனா­தி­ப­தி­யாக   கோத்­த­பாய ராஜ­பக் ஷ   தெரி­வு­ செய்­யப்­பட்­டுள்ளார்.  பெரும்­பான்மை மக்­களின் வாக்­குக்­களில் தான் தெரிவு செய்­யப்­பட்ட போதிலும் சகல மக்­க­ளுக்கும்   ஜனா­தி­ப­தி­யாக செயற்­ப­டுவேன் என்று அவர் பல தட­வைகள் உறு­தி­ய­ளித்­துள்ளார். அதற்­கி­ணங்­கவே  புது­வ­ருட வாழ்த்து செய்­தி­யிலும்  அனைத்து மக்­களும்  ஒற்­று­மை­யா­கவும்  மகிழ்ச்­சி­யா­கவும் வாழக்­கூ­டிய சிறந்த சூழலை  நாட்டில்  உரு­வாக்­குவேன் என்று   அவர்   மீண்டும் வாக்­கு­றுதி அளித்­தி­ருக்­கின்றார்.
புதிய ஜனா­தி­ப­தியும்  இடைக்­கால அர­சாங்­கமும்   பத­வி­யேற்­றுள்­ள­தை­ய­டுத்து  நாட்டு மக்கள் மத்­தியில்  பெரும் எதிர்­பார்ப்பு  ஏற்­பட்­டுள்­ளது.  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­
பக் ஷவின்   செயற்­பா­டுகள்   பொது­வா­கவே மக்கள் மத்­தியில்  குறிப்­பாக  பெரும்­பான்­மை­யின மக்கள் மத்­தியில் வர­வேற்பை  பெற்­றி­ருக்­கின்­றது.  
சிறு­பான்மை மக்­களைப் பொறுத்­த­வ­ரையில்  புதிய ஜனா­தி­ப­தியின் செயற்­பா­டு­களும் இடைக்­கால அர­சாங்­கத்தின்   நட­வ­டிக்­கை­களும்  இன்­னமும்  அவர்கள் மத்­தியில்   பூரண  திருப்­தி­யினை   ஏற்­ப­டுத்­த­வில்லை என்றே தோன்­று­கின்­றது. ஏனெனில் சிறு­பான்­மை­யின மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான    தீர்­வுகள் தொடர்பில்   புதிய  ஜனா­தி­ப­தியும் இடைக்­கால அர­சாங்­கமும்   உறு­தி­யான நிலைப்­பா­டு­களை இன்­னமும்  முன்­வைக்­க­வில்லை.
சிறு­பான்மை மக்­க­ளான  தமிழ், முஸ்லிம் மக்கள்   தமது அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென்றும்  தமிழ் மக்கள்  தமது அடிப்­படை பிரச்­சி­னை­யான  இனப்­பி­ரச்­சி­னைக்கு  அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்றும்  எதிர்­பார்த்­துள்­ளனர்.  இந்த  எதிர்­பார்ப்­பினை   நோக்­காக கொண்டே கடந்த  பல தேர்­தல்­க­ளிலும்   தமிழ் மக்கள்  தமது ஆணை­யினை  வழங்கி வரு­கின்­றனர்.  
கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லிலும் கூட  தமது பிரச்­சி­னை­க­ளுக்­கான  தீர்வு காணப்­ப­ட­வேண்டும்.  தமது அபி­லா­ஷைகள்   நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்ற  எண்ணம் கார­ண­மா­கவே     தமிழ் மக்கள்   உறு­தி­யான தீர்ப்­பினை  வழங்­கி­யி­ருந்­தார்கள்.  
தற்­போ­தைய நிலையில்   தமது எதிர்­பார்ப்­புக்கள்   நிறை­வேற்­றப்­ப­டுமா? அல்­லது  அதற்கு  பாத­க­மான நிலைமை  ஏற்­ப­டுமா   என்று   தமிழ் மக்கள்  உட்­பட  சிறு­பான்­மை­யின மக்கள்  சிந்­தித்து வரு­கின்­றனர்.  தற்­போது தேசிய கீத விவ­கா­ரத்தில் எழுந்­துள்ள   சர்ச்சை   இதற்கு முன்­னு­தா­ர­ண­மாக  அமைந்­தி­ருக்­கின்­றது.  
அதி­கா­ரப்­ப­கிர்வு  தொடர்­பி­லேயோ  சமஷ்டி தீர்வு குறித்தோ பேசு­வதில் பய­னில்லை என்றும் பெரும்­பான்­மை­யின மக்கள் விரும்­பாத எந்த விட­யத்­தையும்  நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில்   சாத்­தி­ய­மில்லை எனவும்  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ   தெரி­வித்­தி­ருக்­கின்றார்.   13 ஆவது திருத்த சட்டம்  நடை­மு­றையில்  உள்­ள­போ­திலும்  காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கு­வது  என்­பது தொடர்­பிலும்   சாத­க­மான   நிலைப்­பாட்டை அவர்   தெரி­விக்­க­வில்லை.  அபி­வி­ருத்­தியின் மூலமே இன  ஐக்­கி­யத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த முடியும் என்ற நிலைப்­பாட்­டையும்  அவர்  வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.
இவ்­வா­றான  நிலை­மை­யா­னது தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­டுமா என்ற  சந்­தே­கத்தை    தமிழ் மக்கள் மத்­தியில்   ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.   சிறு­பான்­மை­யின மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காணாது   நாட்டில்  நல்­லி­ணக்­கத்­தையோ,  அபி­வி­ருத்­தி­யையோ  ஏற்­ப­டுத்த முடி­யுமா என்ற  விடயம்  குறித்து  சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது.
இலங்கை சுதந்­திரம் பெற்ற காலத்­தி­லி­ருந்து  தமிழ் மக்கள்  தமது  உரி­மை­க­ளுக்­காக  போராடி வரு­கின்­றனர்.   ஏழு தசாப்­தங்­க­ளுக்கு  மேலாக அஹிம்­சா­வ­ழி­யிலும்  ஆயுத வழி­யிலும் போரா­டிய மக்கள்  யுத்தம்  முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் கடந்த  ஒரு தசாப்­த­கா­ல­மாக   மீண்டும்  ஜன­நா­யக ரீதியில்   போரா­டு­கின்­றனர்.  இந்த நிலை­யில்தான்   நல்­லாட்சி அர­சாங்கம்  2015ஆம் ஆண்டு பத­வி­யேற்­றதன் பின்னர்   அர­சியல் தீர்­வுக்­கான  நம்­பிக்கை   உரு­வாக்­கப்­பட்­டது.  அதற்­கான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனாலும்   அன்று  எதி­ர­ணி­யாக செயற்­பட்­ட­வர்கள்   அந்த முயற்­சிக்கு எதி­ராக  போர்க்­கொடி தூக்­கி­யி­ருந்­தனர்.  இதனால்  அந்த நட­வ­டிக்­கை­யினை துரி­த­க­தியில்  முன்­னெ­டுக்க முடி­யாத  நிலைமை    ஏற்­பட்­டது.  பின்னர் அர­சியல்  சூழ்­நிலை கார­ண­மாக அந்த முயற்­சியும்  கைவி­டப்­பட்­டது.
தற்­போது புதிய  ஜனா­தி­பதி,  இடைக்­கால அர­சாங்கம் பத­வி­யேற்­றுள்ள நிலையில்   தமிழ் மக்­களின்  பிரச்­சி­னை­களை  தீர்க்­க­வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. ஆனால்   அதற்­கான  வழி­வ­கை­களை மேற்­கொள்­வ­தற்­கான சூழ்­நிலை  இன்­னமும் ஏற்­ப­ட­வில்லை.  இந்த நிலை­யில்தான்  புத்­தாண்டு  பிறந்­தி­ருக்­கி­றது.  புத்­தாண்டில்  சுபீட்­சத்தின் நோக்கு செயற்­றிட்­டத்தை நோக்கி    அர­சாங்கம் செல்லும் என்று ஜனா­தி­பதி  கூறி­யி­ருக்­கின்றார்.
இவ்­வா­றான சுபீட்­சத்தை நோக்கி செல்ல  வேண்­டு­மானால்  சிறு­பான்­மை­யின மக்­களின்  பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.   யுத்தம்   முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டு­விட்­டதால்   சிறு­பான்­மை­யி­ன­ரது பிரச்­சி­னைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை. சகல பகு­தி­க­ளிலும்   அபி­வி­ருத்­தியில் கவனம்  செலுத்­தினால் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் கண்­டு­வி­டலாம் என்று  கருதுவது  தவறானது என்பதை   அரசாங்கம்   உணர்ந்துகொள்ளவேண்டும்.
தமிழ் மக்கள்  பிரிவினையைக் கோரவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் பெரும்பான்மையின மக்களுடன் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டுடன் வாழ்வதற்கான சூழலையே கோரி நிற்கின்றனர். எனவே  இந்த விடயத்தில்   புதிய அரசாங்கம் சிந்தித்து  செயற்படவேண்டும். பெரும்பான்மையின மக்களின்   மனங்களை வென்றுள்ள இந்த அரசாங்கம் சிறுபான்மையின மக்களின் மனங்களையும்   வெற்றிகொள்வதன் மூலம் நாட்டை  கட்டியெழுப்ப முடியும்.   நாட்டினை  சுபீட்சப்பாதையில் கொண்டுசெல்ல முடியும்.  
இல்லையேல் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பது  சாத்தியமில்லாது போகும்.  அத்துடன்  முரண்பாடுகள்   தொடரும் நிலை  உருவாகும்.  எனவே   ஜனாதிபதியின்   ‘‘சுபீட்சத்தின்  நோக்கு’’ செயற்றிட்டம்   இலகுபடுத்தப்படவேண்டுமானால்  சிறுபான்மையின மக்களின் மனங்கள்  வெல்லப்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
(02.01.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் ) நன்றி வீரகேசரி 

No comments: