.
After stuck in Mourya evacuation centre for the past 3 days, power restored last night around 9:30 pm. Managed to get the fuel last night about 11 pm. Left the evacuation centre at 8:30 am. We travelled about 70 KM till now (10:06 pm).
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தீயில் தனது பயணம் தடைப்பட்டு மூன்று நாட்கள் அந்த மக்களுடன்
வாழ்ந்த ஈசன் கேதீசன் ( ATBC நிர்வாகிகளில் ஒருவர்) எழுதிய குறிப்பு
கீழே ஆங்கிலத்தில் தரப்படுகிறது.
பாரதியின் பாடல்
"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ"
தன் உக்கிரகங்களையெல்லாம் ஒன்றுதிரட்டி இன்று அவுஸ்திரேலிய மண்மாதாவின் காடுகளையும் வீடுகளையும் நக்கித் துடைத்துக்கொண்டிருக்கிறது அக்கினிக் குஞ்சு. பல்லாயிரம் வீரர்கள் இரவு பகல் பாராது நீரோடும் நெருப்போடும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். உலகக் கழிவுகளால் ஓட்டை விழுந்திருக்கும் வான்பரப்பினூடாக வைடடமின்களை கொடுக்கும் சூரியக் கதிர்கள் வெப்பத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றது. நீலவானம் என்று பார்த்து ரசித்த வான்மண்டலம் புகையும் நெருப்பும் கலந்து அஸ்மா நோயினை அள்ளித் தெளிக்கிறது. எங்கும் நெருப்பின் அனர்த்தம் பற்றிய பேச்சு. கிசுகிசுக்களை கொளுத்திப் போட்டுக்கொண்டிருந்த ஊடகங்களெல்லாம் காட்டுத்தீயைக் காட்டுவதற்கே நேரமின்றி தவிக்கிறது. அடுத்த தீ எங்கு பற்றப் போகிறது என்று தெரியாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லோரிடமும் ஒட்டிக் கொண்டுவிட்டது. சொத்துக்கள் தீயில் கருகும்போது ஒரு மனித உயிர், ஒரு விலங்கு அல்லது ஒரு பறவை இறந்து விடக் கூடாது என்பதற்காக தம் உயிரைக் கொடுத்து போராடிக்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்கு தலை சாய்த்து வணங்குகிறோம். இன்று 45 பாகை வெய்யில் என்று ஆரவாரப்பட்டு குளிரூட்டியை போட்டுவைத்து அதுவும் காணாது இது என்ன கொடுமை என்று முணுமுத்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில்தான் அந்த வீரர்கள் காட்டுத்தீயின் உக்கிர ஜுவாலைக்கு முன்னின்று எம்மைத் தீ அண்டாமல் தடுக்கின்றார்கள் என்பது எவ்வளவு பெரிய தியாகம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எல்லோருமே மனிதர்கள். ஒவ்வொருவருடைய சிந்தனையும் வித்தியாசமாக இருக்கும் அப்படி இல்லாவிடடால் அது மனிதசமூகமாக இருக்க முடியாது. இங்கும் அப்படித்தான். பிரதமர் நாட்டில் இல்லை இவரெல்லாம் ஒரு பிரதமரா என்று கேட்டவர்கள், நாடு தீயில் எரிந்து கொண்டிருக்கிறது அரசாங்கம் Fire Works செய்வது தவறு, அந்த பணத்தை மக்களுக்கு கொடுக்கலாம் , இப்படி பலவிடயங்கள். ஆனால் நாடென்றால் எல்லாவிடயங்களும் சமநேரத்தில் சமச்சீராக இடம்பெறவேண்டும் அதுதான் நாட்டிட்கு பலம். அதை அவுஸ்திரேலிய அரசு குழப்ப அரசியலுக்கு அப்பால் மிக அழகாக எடுத்துச் செல்கிறது. தீ எச்சரிக்கை, மக்களுக்கான உதவி, மருத்துவம் என்று ஆயிரக் கணக்கானவர்களை வைத்து சேவை செய்துகொண்டிருக்கிறார்கள். உதாரணமாக தீ எச்சரிக்கை கொடுத்த பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கைபேசி மற்றும் தொலைபேசியில் அழைத்து அறிவுரை கொடுக்கின்றார்கள் தீ அனைத்து முடிந்தபின்பும் அவர்களை அழைத்து பேசுகின்றார்கள் பெரியவர் சின்னவர் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் நடக்கும் விடயங்கள். இதுதான் நம் நம்பிக்கைக்கு உரிய அவுஸ்திரேலியா.
வேலைத்தலங்கள் தாங்களும் தங்கள் வேலையாட்களுமாக சேர்ந்து பணம் திரட்டி நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள், திருச்சபைகள், கழகங்கள் , அரசியல் வாதிகள் ,சமூக அமைப்புக்கள் கிளப்புக்கள் என்று மனிதாபிமான முறையிலே தங்கள் கொடைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.எந்த நிலம் நமக்கு அடைக்கலம் தந்து அரவணைத்துக் கொண்டதோ அந்த நிலத்தையும் மக்களையும் மனதார நேசித்து எங்கள் தமிழ் அமைப்புக்கள் சிலவும் மக்களிடம் நிதி சேகரித்து அனர்த்த நிதிக்கு வழங்கி தமிழ் சமூகத்தையும் தலை நிமிர செய்துள்ளார்கள். எங்களில் பலர் எமது வேலைத்தலங்களினூடாக இந்தக் கொடையை செய்திருந்தாலும் தமிழ் சமூகத்தினூடாகவும் செய்திருப்பது பெருமையானது.
பல ஆயிரங்களை சேகரித்து வழங்கிய தமிழ் அமைப்புக்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து தமிழ் சமுதாயம் சார்பாக இதை வழங்குகிறோம் என்று கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இங்கும் யார் அதிகம் கொடுப்பது என்ற பலப் பரீடசை போல் தெரிந்தது. மொத்த சமூகமா அல்லது அமைப்பா என்று பார்த்தால் சமூகம் முன்னிற்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் சிந்தித்தால் நல்லது.
நெருப்பால் பாதிக்கப் பட்டவர்களே மற்றவர்களுக்கு எப்படி உதவுகின்றார்கள் என்று பார்க்கும் போது கண்களில் நீர் பெருகுகின்றது.
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அது அவுஸ்திரேலிய காட்டினை எரித்திடக் கண்டேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தீயில் தனது பயணம் தடைப்பட்டு மூன்று நாட்கள் அந்த மக்களுடன் வாழ்ந்த ஈசன் கேதீசன் ( ATBC நிர்வாகிகளில் ஒருவர்) எழுதிய குறிப்பு கீழே ஆங்கிலத்தில் அப்படியே தரப்படுகிறது.
UPDATE 02/01/2020 by Easan Kethesan
After stuck in Mourya evacuation centre for the past 3 days, power restored last night around 9:30 pm. Managed to get the fuel last night about 11 pm. Left the evacuation centre at 8:30 am. We travelled about 70 KM till now (10:06 pm).
While we were traveling new multiple fires broke out between Milton and South Nowra, again we are stuck on the road. No movement for past 7 hours.
It's a huge eye opener for us.
Met 2 people lost the loved once to the fire, met people lost their properties to the fire, met the firey who saved other people house and lost his. One of the person in the centre was coca cola GM.
Met 2 people lost the loved once to the fire, met people lost their properties to the fire, met the firey who saved other people house and lost his. One of the person in the centre was coca cola GM.
The community sprit and support I have seen beyond believable. Far far far.... grater that our community worked during 2004 Tsunami to support our people.
Now we are on the road between Ulladulla and Milton, the community and their homes are currently been threaten by the bushfire, although they came out provided water, drinks, food, sweet and chocolates for kids, cut up chicken, pizza, sandwiches, allowing to use there toilet, etc.
While we were in Mourya, people offered to use their shower, offered food, offered to wash our clothes, etc.
When people talk about what the Australian values? These are the true Australian Values, help, care, generosity, community spirit, etc. SADLY missing in the city.

Not sure when will we get home. Vehicles are lined up for over 40 km from Milton.
They are expecting the worse over this weekend. Let's pray for those people.
They are expecting the worse over this weekend. Let's pray for those people.
NSW BUSH FIRES 31/12/2019
It being the festive season and holiday period, I have been out with the family camping down south in the state forests and National Parks in the area of Eden, Bega, Naroombarba, Nowra and Bodalla.
We have all seen the fire devastation on TV, YouTube, etc.
Today, morning I received the emergency SMS to evacuate from the area as the fire approaches.

3 fires started in the form of triangle in the last 12 to 24 hours, now all 3 are burning out of control. Couple of fires are in the area where we travelled through and camped.
All these 3 fires were about 6 minutes, 20 minutes and 30 minutes from where we were camped last night.
Route to Sydney and Canberra closed. We are currently stuck at the Mourya evacuation centre. Not knowing when we will be able to get to Sydney.
.
The photos of all 3 fires below where taken today morning.
.
The photos of all 3 fires below where taken today morning.
1 comment:
Well written Baskaran. Sorry for Esan and family but good experience for them.
Thanks tamilmurasu
Nada
Post a Comment