எக்காளம் – காற்றுக்கருவி
அமைப்பு
இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி. நாதஸ்வரத்தை போல நான்கு மடங்கு நீளம்.அடிப்பகுதி யானையின் கால்கள் அளவுக்கு விரிந்து இருக்கிறது.
குறிப்பு
எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னவர் எக்காளம் இசைத்து மகிழ்வர். ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசையின் பங்கு முக்கியமானது.
எக்காளம் வேறு பெயர்களில் சில உருவ வேறுபாடுகளுடன் இந்தியா முழுவதிலும் மற்றும் நேபாளத்திலும் பரவலாக புழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் தான் அழிவின் விளிம்பில் உள்ள்து. நேபாளத்தில் “பஞ்ச் பாஜெ” என்ற அவர்களின் பாரம்பரிய ஐந்து இசைக்கருவிகளில் ஒன்றாக ”கர்னால்” என்ற பெயரில் எக்காளம் திகழ்கிறது. ஹிமாசல பிரதேசத்தில் இக்கருவி ”தொங்க்ரு” என்று அழைக்கப்படுகிறது.
புழக்கத்தில் உள்ள இடங்கள்
தஞ்சை சுந்தர பெருமாள் கோயில் (வாசித்து வருபவர் லட்சுமணன்)
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் (இங்கே வெள்ளி மற்றும் பித்தளை எக்காளங்கள் உள்ளன)
நாட்டார் தெய்வ விழாக்கள்
பாடல்
சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம்
வங்கியம் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே திருமுறை-12.3097
நீள்வயிர் பேரி நிசாளம் உடுக்கை
தாளம் வழிப்படு தண்ணுமை தக்கை
காளம் வலம்புரி கைத்துடி யாதி
யாளி முகன்முன் அளப்பில ஆர்ப்ப - க பு - சிங்கமுகாசுரன் வதைப் படலம்
காணொளி
தமிழகம்
வட இந்தியா
நன்றி,
சரவண பிரபு
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் இசைக்கபடும் வெள்ளி எக்காளங்கள்.
திருநாங்கூர்
நேபாளம்
No comments:
Post a Comment